என் மலர்
வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று முதல் 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள், சாமி வீதி உலா நடைபெறும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறுகிறது.
சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னத்தில் இன்று காலை 6 மணிக்கு ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது.
ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.
அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் திருக்கோவில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் ராஜாராம், கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இதைத்தொடர்ந்து விநாயகர் உண்ணா மலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் சாமி வீதி உலா நடைபெறும் என தெரிவித்தனர்.






