search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t20 world cup 2022"

    • ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
    • அயர்லாந்து அணி 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    ஹோபர்ட்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டர்களுடன் 82 ரன்கள் குவித்தார்.

    பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து அந்த அணி வீரர்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர். அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 27 ரன்னும், ஜார்ஜ் டோக்ரெல்,கரேத் டெலானி தலா 24 ரன்களும் அடித்தனர். அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பாரி மெக்கார்த்தி 22 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதையடுத்து ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • அந்த அணி வீரர் சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
    • அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    ஹோபர்ட்: 

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ரெஜிஸ் சகப்வா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் கிரேக் எர்வின் 9 ரன்னுடன் வெளியேற, வெஸ்லி மாதேவேரே 22 ரன்னுக்கு அவுட்டானார். அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தார். லூக் ஜாங்வே 20 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.

    20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்களையும், மார்க் அடேர், சிமி சிங் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடுகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 161 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
    • ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    ஹோபர்ட்:

    டி20 உலகக் கோப்பை முதல் சுற்றின் 3-வது 'லீக்' ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் 'பி' பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 66 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக கைல் மேயர்ஸ், இவின் லீஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மேயர்ஸ் 20 ரன்னுக்கும், இவின் லீவிஸ் 14 ரன்னுக்கும் அடுத்து வந்த பிரண்டன் கிங் 17 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.

    இதையடுத்து கேப்டன் பூரன், ஷார்மா புருக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்காட்லாந்து அணியினர் மிகச்சிறப்பாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு சிக்கல் கொடுத்தனர். பூரன் 4 ரன், புரூக்ஸ் 4 ரன், பவல் 5 ரன், அகைல் ஹோசன் 1 ரன், அல்ஜாரி ஜோசப் 0 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் அந்த அணி 79 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்களே எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக் ஹோல்டர் 38 ரன்கள் எடுத்தார். இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியிடம் வீழந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • கடைசி வரை நின்று ஆடிய ஜார்ஜ் முன்சே 53 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்

    ஹோபர்ட்:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதன் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. 'சூப்பர் 12' சுற்றில் 8 நாடுகள் நேரடியாக விளையாடும். முதல் சுற்றின் மூலம் 4 அணிகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும்.

    நேற்றைய தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள நமீபியா அணி 55 ரன் வித்தியாசத்தில் இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இதே பிரிவில் நடந்த 2-வது போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.

    முதல் சுற்றின் 3-வது 'லீக்' ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் 'பி' பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது.

    வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 'டாஸ்' வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஸ்காட்லாந்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 5 ஓவரிலேயே அந்த அணி 50 ரன்னை தொட்டது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் 20 ரன்களில் வெளியேறினார்.

    கேப்டன் ரிச்சி 16 ரன்கள், கேலம் மெக்லியாட் 23 ரன்கள் சேர்க்க, ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. ஜார்ஜ் முன்சே 66 ரன்களுடனும், கிறிஸ் கிரீவ்ஸ் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.

    • ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது.
    • நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. உலகக்கோப்பைக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    வேகப்பந்து வீரர் பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக 20 ஓவர் உலகக்கோப்பையில் ஆடவில்லை. முன்னணி வீரர்களான இருவரும் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. உலகக்கோப்பைக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த தீபக் சாஹரும் காயம் அடைந்துள்ளார். அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதிக அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்து உள்ளேன். இதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன்.

    ஐ.பி.எல்.லில் ஆடுவதால் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அழுத்தமாக உணர்ந்ததால் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.

    வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன். கிரிக்கெட் அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. வீரர்களும் விளையாட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் எதுவும் இருக்காது.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    • தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை.
    • தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும்.

    மும்பை:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இப்போட்டி தொடருக்கான இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா அயர்லாந்து தொடரில் ஒரு கவன ஈர்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை. இது மிகவும் கடினமான பணி. அதை ஐ.பி.எல்.லின் தீபக் ஹூடா அற்புதமாக செய்தார். அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    வறண்ட ஆடு களத்தில் முக்கியமான சூழ்நிலைகளில் தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும். அவரை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்றார்.

    ×