என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிக்கந்தர் ராசா
டி20 உலகக் கோப்பை- அயர்லாந்துக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே
- அந்த அணி வீரர் சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
- அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஹோபர்ட்:
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ரெஜிஸ் சகப்வா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் கிரேக் எர்வின் 9 ரன்னுடன் வெளியேற, வெஸ்லி மாதேவேரே 22 ரன்னுக்கு அவுட்டானார். அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தார். லூக் ஜாங்வே 20 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.
20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்களையும், மார்க் அடேர், சிமி சிங் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடுகிறது.






