search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st anthony"

    • தினமும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.
    • 29-ம்தேதி தேர் பவனி நடக்கிறது.

    தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் கொடியேற்றி வைத்தார். நற்செய்தி நடுவம் இயக்குநர் ஸ்டார்வின் மறையுரை நிகழ்த்தினார். அண்ணாநகர் பங்குத்தந்தை சகாயம், இன்னாசியார்புரம் குருமட பேராசிரியர் ஸ்டார்லிங், ஆலய பங்குத்தந்தை ஸ்டீபன் மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    3-ம் நாள் விழாவான நேற்று ஆலயத்தில் ரூ.1 கோடி செலவில் புதிய ஆலய கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து திருப்பலி நடத்தினார். மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், பங்குத்தந்தை ஸ்டீபன் மரிய தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. வருகிற 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ரத்னாபுரம் பங்குத்தந்தை எஸ்.எம்.அமலதாஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை பவனி நடக்கிறது.

    13-ம் நாள் திருவிழாவான வரும் 29-ம் தேதி காலை 5.30 மணிக்கு பாதிரியார் விளாடிமிர் டிக்ஸன் தலைமையில் சிறப்பு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மாலை 4 மணிக்கு தேர் பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளும், பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகளும், 31-ம் தேதி மாலை 7 மணிக்கு பொது அசன விருந்தும் நடக்கிறது.

    • ஆலய வளாகத்தில் இருந்து 5 தேர்களும் பவனியாக புறப்பட்டது.
    • திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக மின் அலங்காரம் செய்யப்பட்ட தேர்களில் புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் ஆலய வளாகத்தில் இருந்து 5 தேர்களும் பவனியாக புறப்பட்டது.

    தேர்கள் கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியை புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில், மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர், மணவாளநல்லூர் பங்குத்தந்தை ஜான் அமலதாஸ், பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர்.

    நாகை மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் திருவிழா மறையுரையாற்றினார்.

    திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • இந்த விழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • தினமும் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.

    விழுந்தயம்பலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து வெட்டுமணி திருத்தல அதிபர் அந்தோணிமுத்து தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் மரிய மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 21-ந்தேதி காலை 10 மணிக்கு அன்னை நகர் அருட்பணியாளர் அருள்தேவதாசன் தலைமை தாங்கி முதல் திருவிருந்து மற்றும் திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் பெர்டின் அனஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு அன்பு விருந்து, 22-ந்தேதி காலை 10 மணிக்கு சாமியார்மடம் அருட்பணியாளர் ஆல்பர்ட் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ரோமேரிக் ததேயு மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து கொடியிறக்கம், பகல் 11.30 மணிக்கு அன்பு விருந்து, மாலை 6.30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 16-ந் தேதி புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடக்கிறது.

    தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித கொடியை ஆலய தர்மகர்த்தா மருத்துவர் ஞா.மி.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் எடுத்து வந்தனர். அந்த கொடியை அருட்தந்தை ஜெபநாதன் அடிகளார் தலைமையில் அருட்தந்தை பீற்றர் பாஸ்டியான் ஜெபம் செய்து அர்ச்சித்தார். பின்னர் தர்மகர்த்தா கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. வள்ளியூர் பங்கு தந்தை ஜான்சன் அடிகளார் மறையுரை வழங்கினார்.

    விழாவில் ஓ.எல்.எஸ்.மெட்ரிக் பள்ளி தாளாளர் அருட்தந்தை மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. 14-ந் தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 8.30 மணிக்கு உணவுத்திருவிழா நடைபெறும்.

    15-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோலப்போட்டியும், பின்னர் திருப்பலியும், காலை 9 மணிக்கு புனித அந்தோணியார் இளைஞர் சார்பில் விளையாட்டுப் போட்டிகளும், இரவு பாடல், நடனம் மற்றும் மாறுவேடப்போட்டிகளும் நடைபெறுகிறது. 16-ந் தேதி மாலை சிறப்பு மாலை ஆராதனையும் அதனைத் தொடர்ந்து புனித அந்தோணியாரின் தேர்ப்பவனியும் நடக்கிறது.

    17-ந் தேதி அதிகாலை சிறப்பு திருவிழா திருப்பலியும், காலை 9 மணிக்கு தனித்திறன் போட்டிகளும், பிற்பகல் 2 மணிக்கு புனித அந்தோணியார் தேர்ப்பவனியும், இரவு அரட்டை அரங்கம் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • 16-ந்தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.

    மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடந்தது. மயிலாடுதுறை மறைவட்ட மூத்தகுரு ஜோசப் ஜெரால்டு அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித அந்தோணியார்களின் திருஉருவ கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருகிற 16-ந்தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற உள்ளது.

    17-ந்தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 14-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் குருசடி கோடி அற்புதர் புனித அந்ேதாணியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 4 மணிக்கு கொடிவலம், மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு காவல் தூதர்கள் வலம், 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், 6.45 மணிக்கு இளைஞர் இயக்க செயலாளர் அருட்பணியாளர் ஜெனிபர் எடிசன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். கிராமிய விழிப்புணர்வு திட்ட இயக்குனர் அருட்பணியாளர் நித்திய சகாயம் மறையுரையாற்றுகிறார்.

    விழாவில் 7-ந்தேதி காலை 10 மணிக்கு கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஆயர் அந்தோனி முத்து நினைவு திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 14-ந்தேதி காலை 6.30 மணிக்கு நாஞ்சில் நாதம் இயக்குனர் அருட்பணியாளர் அருள் யூஜின்ராய் தலைமை தாங்கி திருப்பலி முதல் நற்கருணை விழாவை நடத்துகிறார். மேல ஆசாரிபள்ளம் பங்கு அருட்பணியாளர் சுதர்சன் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதல்வர் கிலாரியுஸ் தலைமை தாங்கி மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நிறைவேற்றுகிறார். இரவு 10 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 15-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு இங்கிலாந்து நாட்டு கேட்ஸ்போர்டு பங்கு அருட்பணியாளர் ஆன்டணி மெகலன் தலைமை தாங்கி தேரில் திருப்பலியை நிறைவேற்றுகிறார். காலை 6.30 மணிக்கு கனடா நாட்டு அருட்பணியாளர் அமலதாஸ் தென்சிங் திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு விருந்தினர் திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தலைமையில் அருட்பணி பேரவையினர், பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    • இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    • வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி ஆலய பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் தலைமையில் சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல், திருப்பலி ஆகியவை நடந்தது.

    பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்ட தேர் புனிதம் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ சமுதாய தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள், இறைமக்கள், கருங்கண்ணி அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்தனர்.

    செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.இங்கு நோய் தீர வேண்டியும், நினைத்த காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் பல ஆண்டுகளாக ஆங்கிலப்புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வினோத வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று ஆங்கிலப்புத்தாண்டையொட்டி அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக புனித அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள குளத்தில், திரளான பக்தர்கள் நீராடினர். பின்னர் அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார் ஆலயத்திற்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், முட்டிப்போட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர். மேலும் சிலர் தீச்சட்டி ஏந்தி வந்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருபண்டம் இந்தியாவில் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே உள்ளது.
    • திருப்பலியும் பின்னர் அனைவருக்கும் பாராட்டு விழாவும் நடந்தது.

    வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழாவும், அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபித்தல் மற்றும் முதல் திருப்பலி நிறைவேற்றி 80 ஆண்டுகள் நிறைவு என முப்பெரும் விழா ஆலய வளாகத்தில் நடந்தது.

    புனித அந்தோணியார் 36 ஆண்டுகள் மண்ணில் வாழ்ந்தாலும், தம் அன்பான செயலாலும் நற்குணத்தாலும் நம் உள்ளங்களை கவர்ந்து கொண்டார். புனித அந்தோணியாரின் உடலின் சிறு பகுதியானது ரோம பேரரசின் உதவியுடன் ஆலயத்தை வந்தடைந்தது. திருப்பண்டத்துக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், முன்னாள் முதல்வர் அருட்பணியாளர் ஹிலாரி, பங்குத்தந்தை சுரேஷ்பாபு, அருட்பணியாளர் ரபேல், முன்னாள் பங்கு தந்தை காலின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புனித அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபிக்கப்பட்டது.

    திருபண்டம் இந்தியாவில் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே உள்ளது. குமரி மாவட்டத்தில் இங்கு மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதைத்தொடர்ந்து திருப்பலியும் பின்னர் அனைவருக்கும் பாராட்டு விழாவும் நடந்தது.

    இதில் ஆலயம் புதுப்பிக்க நன்கொடை வழங்கிய அருள் ஆன்றனி மாசிலாமணி குடும்பத்தினருக்கு மற்றும் ஆன்றனி அருள்ராஜ் குடும்பத்தினருக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். முன்னாள் ஆயர், பங்கு பெற்ற நிர்வாகிகளுக்கும் முன்னாள் பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது ஆலயத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு தாசன் சூசை மரியான் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    திருபண்டம் வருவதற்கு உழைத்த பங்கில் உள்ள அனைத்து மக்களையும் முன்னாள் ஆயர் மற்றும் பங்கு தந்தையர் பாராட்டினர். தொடர்ந்து அன்பின் விருந்து நடந்தது.

    நிகழ்ச்சியில் முன்னாள் பங்கு தந்தையர்கள் அருள் சகோதரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை சுரேஷ் பாபு, பங்குபேரவை உதவி தலைவர் மரியஆன்றனி, செயலாளர் புஷ்பலதா, துணைச் செயலாளர் லீமா ரோஸ், மரிய செபஸ்தியான் மற்றும் பங்கு மக்கள்ங்கு பேரவையினர், பக்த சபைகள் இணைந்து செய்து இருந்தனர்.

    • புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார்.
    • புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார்.

    வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த பழைய ஆலயம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

    அதைதொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு விழா, புனித அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபித்தல் விழா, முதல் திருப்பலி நிறைவேற்றி 80-ம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    அதன்படி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த மண்ணில் 36 ஆண்டுகள் வாழ்ந்து தம் அன்பு, நற்குணத்தால் மக்கள் உள்ளங்களை புனித அந்தோணியார் கவர்ந்தார். அந்த புனிதரான அந்தோணியாரின் உடலின் சிறு பகுதியானது ரோம பேரரசின் உதவியுடன் இந்த ஆலயத்துக்கு கொண்டவரபட்டு உள்ளது. அதனை ஆலயத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றி புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார். சிறப்பு விருந்தனாக முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், முளகுமூடு வட்டார முன்னாள் முதல்வர் கிலாரி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அதைதொடர்ந்து திருப்பலி, அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் முன்னாள் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்பட ஏராளமான கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சுரேஷ்பாபு பங்குபேரவை உதவி தலைவர் மரியஆன்றணி, செயலாளர் புஷ்பலதா, துணைச்செயலாளர் லீமா ரோஸ். மரிய ஜெபஸ்தியான் மற்றும் பங்குமக்கள், பங்கு பேரையினர் பக்த சபைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆராதனை நடந்தது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    மயிலாடுதுறை கூறைநாடு புனித அந்தோணியார் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடந்தது. முன்னதாக, புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. புதுக்கோட்டை செட்டியாபட்டி பங்கு தந்தை சவரிநாதன் அடிகளார், எருக்கூர் பங்கு தந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளார், குத்தாலம் பங்கு தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினர்.

    தொடர்ந்து திவ்ய நற்கருணை பவனி நடந்தது. இருதய சபை அருட்சகோதரர் பங்கிராஸ் பவனியை வழிநடத்தினார். பின்னர் ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆராதனை நடந்தது. மாந்தை உதவி பங்குதந்தை அலெக்சாண்டர் அடிகளார் மறையுரையாற்றினார். புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மேற்கொண்டார்.

    மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ் அடிகளார் திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • புனித அந்தோணியார் ஆலயத்தில் பெருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினந்தோறும் திருப்பலி, தேர்பவனி நடந்தது.

    மந்தாரக்குப்பம் அருகே ரோமாபுரியில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்தில் 12-ம் ஆண்டு பெருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் திருப்பலி, தேர்பவனி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நெய்வேலி டவுன்ஷிப் புனித பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தைகள் நிர்மல்ராஜ், சைமன் அந்தோணிராஜ், பெரியாக்குறிச்சி லாரன்ஸ், புதுக்கோட்டை ரெஜிஸ், கூனங்குறிச்சி பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்டு பெருவிழாவுக்கான கூட்டு திருப்பலி நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் நெய்வேலி பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அருட் சகோதரிகள், வேதியர்கள், பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×