search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    • நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 14-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் குருசடி கோடி அற்புதர் புனித அந்ேதாணியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 4 மணிக்கு கொடிவலம், மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு காவல் தூதர்கள் வலம், 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், 6.45 மணிக்கு இளைஞர் இயக்க செயலாளர் அருட்பணியாளர் ஜெனிபர் எடிசன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். கிராமிய விழிப்புணர்வு திட்ட இயக்குனர் அருட்பணியாளர் நித்திய சகாயம் மறையுரையாற்றுகிறார்.

    விழாவில் 7-ந்தேதி காலை 10 மணிக்கு கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஆயர் அந்தோனி முத்து நினைவு திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 14-ந்தேதி காலை 6.30 மணிக்கு நாஞ்சில் நாதம் இயக்குனர் அருட்பணியாளர் அருள் யூஜின்ராய் தலைமை தாங்கி திருப்பலி முதல் நற்கருணை விழாவை நடத்துகிறார். மேல ஆசாரிபள்ளம் பங்கு அருட்பணியாளர் சுதர்சன் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதல்வர் கிலாரியுஸ் தலைமை தாங்கி மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நிறைவேற்றுகிறார். இரவு 10 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 15-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு இங்கிலாந்து நாட்டு கேட்ஸ்போர்டு பங்கு அருட்பணியாளர் ஆன்டணி மெகலன் தலைமை தாங்கி தேரில் திருப்பலியை நிறைவேற்றுகிறார். காலை 6.30 மணிக்கு கனடா நாட்டு அருட்பணியாளர் அமலதாஸ் தென்சிங் திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு விருந்தினர் திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தலைமையில் அருட்பணி பேரவையினர், பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×