search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு திருவிழா தொடங்கியது
    X

    புனித அந்தோணியார்களின் திருஉருவ கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு திருவிழா தொடங்கியது

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • 16-ந்தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.

    மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடந்தது. மயிலாடுதுறை மறைவட்ட மூத்தகுரு ஜோசப் ஜெரால்டு அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித அந்தோணியார்களின் திருஉருவ கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருகிற 16-ந்தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற உள்ளது.

    17-ந்தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×