என் மலர்
வழிபாடு

அப்பட்டுவிளையில் புதுப்பிக்கப்பட்ட அந்தோணியார் ஆலயம் அர்ச்சிப்பு விழா நாளை நடக்கிறது
- புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார்.
- புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார்.
வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த பழைய ஆலயம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
அதைதொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு விழா, புனித அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபித்தல் விழா, முதல் திருப்பலி நிறைவேற்றி 80-ம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
அதன்படி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த மண்ணில் 36 ஆண்டுகள் வாழ்ந்து தம் அன்பு, நற்குணத்தால் மக்கள் உள்ளங்களை புனித அந்தோணியார் கவர்ந்தார். அந்த புனிதரான அந்தோணியாரின் உடலின் சிறு பகுதியானது ரோம பேரரசின் உதவியுடன் இந்த ஆலயத்துக்கு கொண்டவரபட்டு உள்ளது. அதனை ஆலயத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றி புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார். சிறப்பு விருந்தனாக முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், முளகுமூடு வட்டார முன்னாள் முதல்வர் கிலாரி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அதைதொடர்ந்து திருப்பலி, அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் முன்னாள் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்பட ஏராளமான கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சுரேஷ்பாபு பங்குபேரவை உதவி தலைவர் மரியஆன்றணி, செயலாளர் புஷ்பலதா, துணைச்செயலாளர் லீமா ரோஸ். மரிய ஜெபஸ்தியான் மற்றும் பங்குமக்கள், பங்கு பேரையினர் பக்த சபைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.






