என் மலர்tooltip icon

    வழிபாடு

    அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் முப்பெரும் விழா
    X

    அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் முப்பெரும் விழா

    • திருபண்டம் இந்தியாவில் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே உள்ளது.
    • திருப்பலியும் பின்னர் அனைவருக்கும் பாராட்டு விழாவும் நடந்தது.

    வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழாவும், அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபித்தல் மற்றும் முதல் திருப்பலி நிறைவேற்றி 80 ஆண்டுகள் நிறைவு என முப்பெரும் விழா ஆலய வளாகத்தில் நடந்தது.

    புனித அந்தோணியார் 36 ஆண்டுகள் மண்ணில் வாழ்ந்தாலும், தம் அன்பான செயலாலும் நற்குணத்தாலும் நம் உள்ளங்களை கவர்ந்து கொண்டார். புனித அந்தோணியாரின் உடலின் சிறு பகுதியானது ரோம பேரரசின் உதவியுடன் ஆலயத்தை வந்தடைந்தது. திருப்பண்டத்துக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், முன்னாள் முதல்வர் அருட்பணியாளர் ஹிலாரி, பங்குத்தந்தை சுரேஷ்பாபு, அருட்பணியாளர் ரபேல், முன்னாள் பங்கு தந்தை காலின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புனித அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபிக்கப்பட்டது.

    திருபண்டம் இந்தியாவில் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே உள்ளது. குமரி மாவட்டத்தில் இங்கு மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதைத்தொடர்ந்து திருப்பலியும் பின்னர் அனைவருக்கும் பாராட்டு விழாவும் நடந்தது.

    இதில் ஆலயம் புதுப்பிக்க நன்கொடை வழங்கிய அருள் ஆன்றனி மாசிலாமணி குடும்பத்தினருக்கு மற்றும் ஆன்றனி அருள்ராஜ் குடும்பத்தினருக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். முன்னாள் ஆயர், பங்கு பெற்ற நிர்வாகிகளுக்கும் முன்னாள் பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது ஆலயத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு தாசன் சூசை மரியான் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    திருபண்டம் வருவதற்கு உழைத்த பங்கில் உள்ள அனைத்து மக்களையும் முன்னாள் ஆயர் மற்றும் பங்கு தந்தையர் பாராட்டினர். தொடர்ந்து அன்பின் விருந்து நடந்தது.

    நிகழ்ச்சியில் முன்னாள் பங்கு தந்தையர்கள் அருள் சகோதரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை சுரேஷ் பாபு, பங்குபேரவை உதவி தலைவர் மரியஆன்றனி, செயலாளர் புஷ்பலதா, துணைச் செயலாளர் லீமா ரோஸ், மரிய செபஸ்தியான் மற்றும் பங்கு மக்கள்ங்கு பேரவையினர், பக்த சபைகள் இணைந்து செய்து இருந்தனர்.

    Next Story
    ×