search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilankan navy"

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேஸ்வரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    இந்நிலையில், கச்சத்தீவுக்கும் கோடியக்கரைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களா அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களா என மீன்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

    • ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை.

    எனவே உடனடியாக வேறு பகுதிக்கு செல்லுங்கள் என எச்சரித்தனர். தொடர்ந்து இலங்கை கடற்படை வீரர்கள், ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு, வலை, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். இந்தப்பகுதியில் மீன்பிடிக்க வந்தால் சிறைபிடிக்கப்படுவீர்கள் எனக்கூறி மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

    உயிருக்கு பயந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு கரைக்கு திரும்பினர். இதுபற்றி பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, இலங்கை கடற்படையின் இதுபோன்ற செயல்களால் பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

    • இலங்கை கடற்படையால் நாகப்பட்டினம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    நாகப்பட்டினம் பகுதியில் இருந்து ஒரு விசைப்படகில் 5 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகு மற்றும் அதில் இருந்த 5 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அதன்பின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே, காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாளே நாகை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். #RameswaramFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 562 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

    இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இது சர்வதேச கடல் பகுதி. மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்தனர்.

    மேலும் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் அவசரம், அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த அமலன் என்பவரது படகு எல்லை தாண்டி வந்ததாக கூறி அதில் இருந்த மீனவர்கள் முருகேசன், முனியசாமி, ரெனிஸ்டன், சுப்பையா ஆகிய 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிறை பிடிக்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #RameswaramFishermen

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. #TamilnaduFisherman
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

    ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்ததுடன், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளை சேர்ந்த மீனவர்கள் 11 பேரை கைது செய்தது.



    கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். #TamilnaduFisherman #SrilankanNavy

    நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Fishermen

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்பிடி கருவிகளை அபகரித்து செல்வது, சிறைபிடித்து சென்று சிறையில் அடைப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை அக்கரைப்பேட்டை டாட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 42). மீனவர்.

    இவருக்கு சொந்தமான பைபர் படகில் சீனிவாசன் மற்றும் அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி(25), கோபாலகிருஷ்ணன்(25), ஆனந்தபாபு(23), நிலவரசன் (21), வீரசெல்வன்(30), பிருதிவிராஜன்(20) ஆகிய 7 பேரும் கடந்த 7-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை கடுவையாற்றங்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    நேற்று மாலை வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரக கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்களின் படகில் ஏறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி சீனிவாசன், கந்தசாமி, கோபாலகிருஷ்ணன், ஆனந்தபாபு, நிலவரசன், வீரசெல்வன், பிருதிவிராஜன் ஆகிய 7 பேரையும் சிறைபிடித்தனர்.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Fishermen

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். #TNFishermen #SrilankanNavy
    ராமேஸ்வரம்:

    இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 11 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TNFishermen #SrilankanNavy
    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. #TNFishermen #SrilankanNavy
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் நேற்றிரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களையும் விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கையில் உள்ள காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் சிலரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும். மீன்பிடி தொழிலுக்காக ஜெகதாப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை செலவுக்காக அவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அதில் வரும் வருமானத்தை வைத்து சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட இருந்தனர்.

    இன்று காலை அவர்கள் கரை திரும்ப வேண்டும். பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SrilankanNavy
    எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகு மற்றும் அதில் இருந்த சதீஷ், அஜித், தர்மராஜ், ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களை சிறைப்பிடித்தனர். பின்னர் படகுடன் 4 மீனவர்களையும் காரை நகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் ரனீசன் (36), ராஜா (34), சேகர் (30), மணிகண்டன் (33) ஆகிய 4 பேர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் அவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மீதும் இலங்கையின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் உருவானது. #Fishermen #SriLankaNavy #TNFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது திரும்பி செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து அங்கு இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் தூக்கி எறிந்தனர். மேலும் மீனவர்கள் மீது இரும்பு பைப், கற்களை வீசி தாக்கினர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் ஒரு படகில் ‘டமார்’ என வெடி சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த படகின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. மீனவர்கள் உடனடியாக அதனை அணைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கரை திரும்பினர்.

    கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே இலங்கை கடற்படையினர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று அவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. ஆனால் படகு மட்டும் சேதம் அடைந்தது. இதே நிலை நீடித்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றனர். #Fishermen #SriLankaNavy #TNFishermen

    இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RameswaramFishermen #FishermenAttack #SriLankanNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை இந்திய எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இந்த பகுதியில் மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே உடனே செல்லுங்கள் என மிரட்டல் தொணியில் கூறினர்.

    அந்த சமயத்தில் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கினர். இதையடுத்த மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல டீசல், கூலி என ரூ. 20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் எங்களால் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியவில்லை. இதனால் நாங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றனர்.

    இதனிடையே பாம்பனையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் வானிலை மையமும் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பன் துறை முகம் வெறிச்சோடியது. #RameswaramFishermen #FishermenAttack #SriLankanNavy

    இலங்கை கடற்படையை கண்டித்தும் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். #RameswaramFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28-ந் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் காட்டுராஜா, வர்கீஸ், ராமன் உள்பட 4 பேர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    மேலும் வேலாதயுதம் என்பவருக்கு சொந்தமான படகை சேதப்படுத்தி மூழ்கச்செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயல் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்து நேற்று மீனவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று (1-ந் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் தவறான காரணங்களை கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

    இதற்கு மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றனர். #RameswaramFishermen

    ×