என் மலர்
நீங்கள் தேடியது "pudukkottai fishermen"
- தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அறந்தாங்கி:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவான் டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கியது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடித்து திரும்பினர்.
இந்தநிலையில் தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை யடுத்து 14 நாட்களுக்கு பிறகு இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்.
முன்னதாக நேற்று முதலே கடலுக்கு செல்வ தற்கான முன்னேற்பாடு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். குறிப்பாக விசைப்படகு மீனவர்கள் வலைகளை தயார் செய்தல், ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், டீசல் கேன்களை படகுகளில் சேமித்தல் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர். இன்று காலை அவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், கட்டு மாவடி முதல் அரசங்கரை வரையிலான 32 மீனவ கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் இன்று காலை கடலுக்கு சென்றனர்.
கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால் மீனவர்கள், அதனை சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு சம்பவங்களால் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2 வாரங்களுக்கு பிறகு அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று கடலுக்கு சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் நேற்றிரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களையும் விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கையில் உள்ள காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் சிலரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும். மீன்பிடி தொழிலுக்காக ஜெகதாப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை செலவுக்காக அவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அதில் வரும் வருமானத்தை வைத்து சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட இருந்தனர்.
இன்று காலை அவர்கள் கரை திரும்ப வேண்டும். பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SrilankanNavy
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகு மற்றும் அதில் இருந்த சதீஷ், அஜித், தர்மராஜ், ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களை சிறைப்பிடித்தனர். பின்னர் படகுடன் 4 மீனவர்களையும் காரை நகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் ரனீசன் (36), ராஜா (34), சேகர் (30), மணிகண்டன் (33) ஆகிய 4 பேர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் அவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மீதும் இலங்கையின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 150 விசைப் படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராஜாராம் (வயது 28), ராகுல் (23), பாலையா (60), லெட்சுமணன் (57), அருளரசன் (35), அருள் (40) ஆகிய 5 பேரும் கடலுக்கு சென்றிருந்தனர்.
அவர்கள் நள்ளிரவில் கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து கப்பலில் வந்தனர்.
அவர்கள் புதுக்கோட்டை மீனவர்களிடம் இது எங்கள் நாட்டிற்கு சொந்தமான கடல் பகுதி. இங்கு மீன் பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியதோடு, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த அனைத்து மீன்களையும் பறித்துக்கொண்டனர்.
பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களின் படகுடன் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் இலங்கையில் உள்ள காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா? அல்லது விடுதலையாவார்களா? என்பது பின்னரே தெரிய வரும்.
டீசல் விலை உயர்வை கண்டித்து சுமார் 2 வார கால வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றத்திற்கு பிறகு கடந்த 22-ந்தேதி கடலுக்கு சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது. அவர்கள் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதற்குள் தற்போது மீண்டும் அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தது மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது தினமும் தமிழக மீனவர்கள் சிறைப் பிடிப்பு, மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, தாக்குதல் போன்றவை நடந்து வந்தன.
தற்போது அவர் பிரதமராக பதவியேற்ற மறுநாளே தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சம் தெரிவித்துள்ளனர். #Fishermenarrested
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 132 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம் (வயது 47), சின்னையா (50), சுப்பிரமணி (45), மாரிமுத்து (38), பானி (30) ஆகிய 5 பேரும் ஒரு விசைப்படகில் கடலுக்கு சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே சுமார் 30 நாட்டிக்கல் தொலைவில் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான குட்டி ரோந்து படகு மின்னல் வேகத்தில் வந்தது. அதிலிருந்த கடற்படை வீரர்கள் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் ஒருசில படகுகளை சுற்றி வளைத்தனர். உடனடியாக மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் வலைகளை வாரி சுருட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஒரு படகை மட்டும் மறித்த இலங்கை கடற்படை வீரர்கள் அதிலிருந்த மீனவர்களை சிறைப்பிடித்தனர். நீங்கள் மீன் பிடித்தது எங்கள் நாட்டிற்கு சொந்தமான பகுதி என்று கூறினர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக படகில் இருந்த செல்வம் உள்பட 5 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் அபகரித்துக் கொண்டனர். பின்னர் அவர்களையும், விசைப்படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர். இரவு அங்குள்ள காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினர். இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா? அல்லது விடுதலையாவார்களா? என்பது பிற்பகலில் தெரிய வரும்.
டீசல் விலை உயர்வை கண்டித்து சுமார் 2 வார கால வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றம் என மீனவர்கள் வாழ்க்கை முடங்கி போய் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர். அதற்குள் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNFishermen
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன் உள்பட 6 பேர் சென்றனர்.
அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், செந்தில்குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினர். இதில், விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால் விசைப்படகில் இருந்த பாலமுருகன் உள்பட 6 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலை கண்டித்தும், அவர்கள் பிடித்து சென்ற 6 மீனவர்களை விடுவிக்க கோரியும், மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து இறந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 23-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.






