search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fihermen attack"

    இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RameswaramFishermen #FishermenAttack #SriLankanNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை இந்திய எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இந்த பகுதியில் மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே உடனே செல்லுங்கள் என மிரட்டல் தொணியில் கூறினர்.

    அந்த சமயத்தில் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கினர். இதையடுத்த மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல டீசல், கூலி என ரூ. 20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் எங்களால் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியவில்லை. இதனால் நாங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றனர்.

    இதனிடையே பாம்பனையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் வானிலை மையமும் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பன் துறை முகம் வெறிச்சோடியது. #RameswaramFishermen #FishermenAttack #SriLankanNavy

    நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.

    நேற்று ராமேசுவரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 600 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 7 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற் படையினர் வந்தனர்.

    அவர்கள் தங்கள் படகை, விசைப்படகுகளின் மீது மோதுவது போல் வந்ததால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். இங்கு மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவசரம் அவசரமாக புறப்பட்டனர். அப்போது அவர்களது வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து எறிந்து சேதப்படுத்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர். அவர்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் இது 2-வது தாக்குதல் ஆகும்.

    இதனால் எங்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க முடியாத நிலையிலும் வலை உள்ளிட்ட உடமைகளும் சேதப்படுத்தப்பட்டதால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம் என்றனர்.

    ×