search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapling"

    • கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • சாலைகளில் மகிழம், புளியன், வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    திருநாகேஸ்வரம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் தஞ்சாவூர் நெடுஞ்சாலை த்துறை கோட்டம், கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மகிழம், புளியன், வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் செந்தில்தம்பி, பிலீப் பிரபாகர், உதவி பொறியாளர்கள் இளவரசன், கந்தன் மற்றும் கும்பகோணம் மத்திய ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் ஜேசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • உதவிப்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராம் மரக்கன்றுகளை நட்டார். உடன் பரமக்குடி உதவிக் கோட்டப் பொறியாளர் கண்ணன், பரமக்குடி உதவிப்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • சேடப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் விழாவை தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை திருமங்கலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. திருமங்கலம் சேடப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் விழாவை தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளர் லாவண்யா, இளநிலை பொறியாளர் சுந்தரவடிவேல், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு மேலக்குறப்பாளையம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம் குளித்தலை தி.மு.க. கழக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வதியம் ஊராட்சி பகுதிகளான மேலகுறப்பாளையம் பகுதியில் குளித்தலை நெடுஞ்சாலை துறை சார்பாக கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் குளித்தலை தி.மு.க. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன், இளநிலை பொறியாளர் சந்திரமோகன், குளித்தலை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் சாலை பணியாளர்கள், பொதுமக்கள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
    • மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    முன்னாள்முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் பாபநாசம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டமாக பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் சாந்தி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக நெடுஞ்சா லைத்துறை இளநிலை பொறி யாளர் ரவி அனைவரும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது
    • மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, தஞ்சாவூர் சாலை, சிட்கோ எதிரில், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை நெடுஞ்சா லைத்துறை கோட்டத்தி ற்குட்பட்ட தஞ்சாவூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்



    • பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது
    • பணி்யை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் விழுப்புரம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட, நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு சாலைகளின் ஓரங்களில் 5 ஆயிரம் எண்ணிக்கைகள் கொண்ட பலவகை மரக்கன்றுகள் நடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் புறவழிச்சாலையில் ஆலம்பாடி பகுதியில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டம், உட்கோட்டங்களின் பொறியாளர் கலைவாணி, பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் மாயவேலு, உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் சாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
    • மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.

    திருவாரூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு குளிக்கரை ஊராட்சித் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியை அட்சரசுந்தரி வரவேற்றுப் பேசினார்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, பூமியை வருங்கால சந்த்தியினர் ஆரோக்கியமாக உயிர்வாழ வழிவகை செய்யும் கடமை நம் ஒவ்வொருக்கும் உள்ளது.

    மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.

    மரங்களின் ஆக்சிஜனை நாம் சுவாசிக்கிறோம்.

    நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் சுவாசிக்கின்றன.

    மாணவர்களிடம் நீங்கள் நடுவது மரம் மட்டுமல்ல.

    ஒரு ஆக்ஸிஜன் தொழிற்சாலையும் கூட என சொல்லி, மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.

    இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிரந்திர மக்கள் நீதிமன்றம் நீதிபதி பரணிதரன், மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி.கதிரவன், நீதித்துறை நடுவர் பிரபாகரன் மற்றும் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஷ்டா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர். சேக் இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அலுவலக நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கரூர்,

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை ஓட்டம் என்ற மராத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.காகிதபுரம் காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வேலாயுதம் பாளையம் ரவுண்டானா சென்று திரும்பும் வகையில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 432 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு ஆறுதல் பரிசாக 100 பேருக்கு தலா ரூ. 500 வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு காகித ஆலை சார்பில் நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட சுற்றுசூழலுக்கு ஏற்ற டி-சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம், காகித ஆலை நிறுவனத்தின் தலைமை விழிப்புணர்வு அதிகாரி பண்டிகங்காதர், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், கரூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற கையேட்டினை எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட அதனை உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயக்குமார் பெற்று கொண்டார்.

    தொடர்ந்து காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத் தோட்டம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) மற்றும் நிலைத்தன்மை அதிகாரி சீனிவாசன், முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு) வரதராஜன், காகித ஆலை வனத்தோட்டத்துறை மற்றும் மனித வளத்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காகித ஆலை நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (வனம்) நன்றி கூறினார்.

    • பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி ஜி-20 கல்விப் பணிக்குழுவின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரக்கன்று நடும் விழா திருவாரூர் அடுத்த அலிவலத்தில் நடைபெற்றது.

    இதில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.

    அலிவலம் ஊராட்சி தலைவர் நிர்மலா பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    தொடர்ந்து, பயனாளி களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    பின்னர், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அலுவ லர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்க்கா, மனோஜ், பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி புத்தூர் அரசு கலை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
    சீர்காழி:

    தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியை பின்பற்றும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புத்தூரில் உள்ள பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் மூன்றாமாண்டு படித்து இந்த ஆண்டு படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து விடைபெறும் 

    மாணவர்கள் அவர்களின் நினைவாக 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு தங்களின் நன்றியை கல்லூரிக்கு செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர். கி.விஜயலட்சுமி வணிகவியல் துறைத்த லைவர் முனைவர். மு. திருநா ராயணசாமி மற்றும் துறை பேராசிரியர்கள் முனைவர் வே.மகேஸ்வரி முனைவர் வே.சுரேஷ் முனைவர் ம.ராஜசேகர் முனைவர் வ.தம்பிஞானதயாளன் ஆகியோர் கலந்து கொ ண்டனர். 

    கல்லூரியிலிருந்து விடை பெறும் மாணவர்கள் இதுபோன்று மரக்கன்றுகளை நட்டு தங்களின் நினைவுகளை நிலைநாட்டும் நற்பண்பு களை கல்லூரி நிர்வாக மும் அனைத்துத் துறை பேராசிரியர்களும் மகிழ்வுடன் பாராட்டினர்.

    ×