search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடும் நிகழ்ச்சி"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சேலம் மண்டல திட்ட இயக்குனர் கொல்லாரமேஷ் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுதந்திர திரு நாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சேலம் மண்டல திட்ட இயக்குனர் கொல்லாரமேஷ் தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை துறை ஆலோசனை குழு தலைவர் முரளி கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

    சுங்கச்சாவடி திட்ட மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தி னர்களாக நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், நாமக்கல் (வடக்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் ஆகி யோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கீரம்பூர் முதல் கோனூர் கந்தம்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு அதிகாரி சிவகாம சுந்தரம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள், இந்திய தேசிய நெடுஞ்சா லைத்துறையினர் கலந்து கொண்டனர்

    • ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிரந்திர மக்கள் நீதிமன்றம் நீதிபதி பரணிதரன், மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி.கதிரவன், நீதித்துறை நடுவர் பிரபாகரன் மற்றும் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஷ்டா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர். சேக் இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அலுவலக நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேரோட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது கைலாசநாதர் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியளவில் கோவிலின் தலைமை குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமியின் வேலுடன் புறப்பட்டு 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பின்னர் மீண்டும் கைலாசநாதர் கோவிலை அடைந்தனர்.

    • முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
    • அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு நகரின் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. இதைத்தொடர்ந்து 25-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்ன வாகன ஊர்வலமும், இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர்.

    அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.

    இதையடுத்து வருகின்ற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகி றது. தொடர்ந்து 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    மேலும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

    இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.

    இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் எடுத்து செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.

    தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×