search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sania Mirza"

    • சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • எதிர் ஜோடி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா - மேட் பாவிக் (குரோஷியா ) ஜோடி, இவான் டாடிக் (குரேஷியா) - லதிஷா சான் (சீன தைபே) ஜோடியுடன் மோத இருந்தது.

    இந்நிலையில், கடைசி கட்டத்தில் இவான் டாடிக், லதிஷா சான் ஜோடி போட்டியில் இருந்து விலகியதால், சானியா மிர்சா, மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • சானியா மற்றும் பாவிக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
    • 35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா- பாவிக் ஜோடி விளையாடி வருகிறது.

    ஆறாம் நிலை வீராங்கனையான சானியா மற்றும் பாவிக் ஜோடி 6-4, 3-6, 6(10)-6(3) என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஸே - ஸ்பெயினின் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

    35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.

    இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதியருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. #SaniaMirza #ShoaibMalik #BabyMirzaMalik
    ஐதராபாத்:

    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா(வயது 31). 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். சாதனை நாயகியான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.



    இந்த நிலையில், சானியா மிர்சா- சோயிப் மாலிக் ஜோடிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சோயிப் மாலிக் டுவிட்டரில் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

    ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சானியாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் சானியாவுடன் அவரது பெற்றோர் மற்றும் கணவர் சோயிப் மாலிக் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

    சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் டுவிட்டர், இண்ஸ்டாகிராம் ஆகியவை வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #SaniaMirza #ShoaibMalik #BabyMirzaMalik
    இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்த சானியா மிர்சாவிற்கு தொந்தரவு கொடுத்ததாக அவரது கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ளார். #SaniaMirza
    பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சானியா மிர்சாவிடம் வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது கணவர் சோயிப் மாலிக் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகாராக அளித்துள்ளார்.

    அதில் ‘‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்காள தேசத்தில் நடந்த பிரிமியர் ‘லீக்’ போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்காளதேச வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறை தவறி நடக்க முயன்றார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.



    வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். சானியா மிர்சாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக அவர் மீது வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஆயுட்கால தடை கூட விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சர்வதேச யோகா தினமான நேற்று கர்ப்பிணிக்குரிய யோகாசனம் செய்த சானியா மிஸ்ராவுக்கு மேனகா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #SaniaMirza
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் தனது முதல் குழந்தையை பிரசவிப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச யோகா தினமான நேற்று சானியா மிஸ்ரா தான் கர்ப்பகால யோகாசனம் செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

    ‘சர்வதேச யோகா தினமோ அல்லது வேறு எந்த நாளோ, இந்த யோகாசனம் தான் கர்ப்பகாலத்தில் என்னை உடல்தகுதியுடன் வைத்துள்ளது... நீங்கள் எப்படி?’ என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இதனை பார்த்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி, “அருமை சானியா, உடலை தகுதியாக வைத்துக்கொள்ள கர்ப்பகால யோகாசனம் செய்யும் உங்கள் வழி மகிழ்ச்சி அளிக்கிறது” என்று டுவிட்டரிலேயே பதில் தெரிவித்துள்ளார். #SaniaMirza
    ஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா மிர்ஸா விடுவிக்கப்பட்டார். #TOPSAthlete
    புதுடெல்லி:

    2020, 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் டாப்ஸ் எனப்படும் சிறப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முழு பயிற்சி தரப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி தரப்பட உள்ளது. இந்த பட்டியலில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பெயரும் இடம் பெற்றிருந்தது.

    இந்நிலையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின், ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா மிர்ஸா உள்பட 8 வீரர்களின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் சானியா மிர்ஸா தற்போது கர்ப்பமாக உள்ளதால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 5 மல்யுத்த வீரர்களும், இரண்டு குத்துச்சண்டை வீரர்களின் பெயர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.


    இதில் தடகள வீரர்களான லில்லி தாஸ், சஞ்சீவினி யாதவ், தேஜஸ்வினி சங்கர் ஆகியோரும், தடகள வீரர்களான தருண்குமார், மோகன்குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் 2020-ம் ஆண்டு வரை டாப்ஸ் திட்டத்தில் கீழ் பயிற்சி பெறுவர்.

    துப்பாக்கி சுடுதலில் 14, பேட்மிண்டனில் 10, குத்துச்சண்டையில் 6, மல்யுத்தத்தில் 4, தடகளம், வில்வித்தை, பளுதூக்குதலில் தலா 2 பேர் என மொத்தம் 41 பேர் இடம் பெற்றுள்ளனர். மிஷன் ஒலிம்பிக் செல் என்ற குழு இதற்கான வீரர்களை தேர்வு செய்தது. இந்த பட்டியல் அவ்வப்போது பரிசீலிக்கப்படும் என சாய் இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் தெரிவித்துள்ளார். #Olympic #TOPSAthlete #SAI
    ×