என் மலர்

  செய்திகள்

  கர்ப்பிணிக்குரிய யோகாசனம் செய்த சானியா மிர்சாவுக்கு மேனகா காந்தி பாராட்டு
  X

  கர்ப்பிணிக்குரிய யோகாசனம் செய்த சானியா மிர்சாவுக்கு மேனகா காந்தி பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச யோகா தினமான நேற்று கர்ப்பிணிக்குரிய யோகாசனம் செய்த சானியா மிஸ்ராவுக்கு மேனகா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #SaniaMirza
  புதுடெல்லி:

  இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் தனது முதல் குழந்தையை பிரசவிப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

  சர்வதேச யோகா தினமான நேற்று சானியா மிஸ்ரா தான் கர்ப்பகால யோகாசனம் செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

  ‘சர்வதேச யோகா தினமோ அல்லது வேறு எந்த நாளோ, இந்த யோகாசனம் தான் கர்ப்பகாலத்தில் என்னை உடல்தகுதியுடன் வைத்துள்ளது... நீங்கள் எப்படி?’ என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  இதனை பார்த்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி, “அருமை சானியா, உடலை தகுதியாக வைத்துக்கொள்ள கர்ப்பகால யோகாசனம் செய்யும் உங்கள் வழி மகிழ்ச்சி அளிக்கிறது” என்று டுவிட்டரிலேயே பதில் தெரிவித்துள்ளார். #SaniaMirza
  Next Story
  ×