search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samajwadi party"

    பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. #SamajwadiParty #BahujanSamajParty #LokSabha
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 71 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா எதிர்க்கட்சிகளிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன. இதுபற்றி சமாஜ்வாடி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரஜேந்திர சவுத்ரி கூறியதாவது:-

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பல்வேறு கட்டமாக சந்தித்து பேசினர். வெள்ளிக்கிழமையும் டெல்லியில் அவர்கள் சந்தித்து பேசினர். இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணிக்கு முதல்கட்ட ஒப்புதலை கொடுத்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு இந்த மாதத்திலேயே வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதுதவிர ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட இதர சிறிய கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதா? என்பது குறித்து அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்வார்கள். முடிவு எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணி அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடாது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிட விட்டுக்கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த பொதுத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கட்சிகளின் கூட்டணி நெருக்கம் பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஹீரோ பாஜ்பாய் கூறும்போது, “இது சந்தர்ப்பவாத கூட்டணி, முழுக்க மக்கள் விரோத கூட்டணி” என்றார். #SamajwadiParty #BahujanSamajParty #LokSabha 
    சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #RamStatue #SamajwadiParty

    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக படேல் சிலை 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று சாமியார் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    இதை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவர் அயோத்திக்கு வர உள்ளார். அங்கு சிறப்பு தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் அவர் பங்கேற்கிறார்.

    அப்போது சிலை அமைப்பதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிலை 152 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த சிலை படேல் சிலையை விட 30 மீட்டர் உயரம் குறைவாக இருக்கும்.

     


    அயோத்தி சரயூ நதி ஓரமாக சிலை அமைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். எந்த இடத்தில் சிலை அமைப்பது என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இதற்கிடைய சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ் வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் கூறியதாவது:-

    படேல் சிலை அமைக்க திட்டமிட்டபோதே ராமர் சிலையையயும் அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கலாம். அதை யார் தடுத்தது.

    படேல் சிலையை விட ராமருக்கு சிறிய சிலையை அமைக்க திட்டமிடுகிறார்கள். அதாவது பிரதமர் அமைத்த சிலையைவிட உயரமான சிலை அமைக்க கூடாது என்ற எண்ணம் உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு உள்ளது. அவ்வாறு இருக்க கூடாது.

    சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட ராமர் சிலை உயரமாக கட்டப்பட வேண்டும். அயோத்தியில் மட்டுமல்ல ராம்பூரிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RamStatue #SamajwadiParty

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட இன்றே, 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
    போபால்:

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.



    இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்திருந்தார்.

    இதன் அடுத்தகட்டமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தி மாவட்டம் சித்தி 77 தொகுதியில் கே.கே. சிங் என்ற வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், பரஸ்வடா மாவட்டம் பாலகட் 110 தொகுதியில் கன்கர் முன்ஜார் போட்டியிடுவதாகவும், பாலகட் 111 தொகுதியில் அனுபா முன்ஜார் என்பவரும், நிவாரி பகுதியின் டிகம்பர் 46 தொகுதியில் மீரா யாதவ்வும், பன்னா பகுதியின் பன்னா 60 தொகுதியில் தர்ஷத் சிங் யாதவ்வும், புத்னி பகுதி செஹோர் 156 தொகுதியில் அசோக் ஆரியா ஆகியோரை வேட்பாளர்களாக நியமித்து சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
    மத்தியபிரேதச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். #MadhyaPradeshelection #AkhileshYadav

    லக்னோ:

    மத்தியபிரேதச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். இது காங்கிரசுக்கு பின்னடைவு ஆகும்.

    ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருந்தார். தற்போது அகிலேஷ் யாதவும் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கிறார். #MadhyaPradeshelection #AkhileshYadav

    அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று தெரிவித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    அம்மாநிலத்தின் கன்னாஜ் பாராளுமன்ற தொகுதியில் அகிலேஷ் யாதவும், மைன்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவும் போட்டியிட உள்ளனர். கன்னாஜ் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக அகிலேஷின் மனைவி டிம்பில் யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AkhileshYadav
    வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் இன்று கூறியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, பிரதமராக வேண்டும் என்ற நோக்கமோ அல்லது கனவோ எனக்கு இல்லை.  மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் மெட்ரோ ஆகியவற்றை அமைப்பது என்ற கனவுடன் இருக்கவே நான் விரும்புகிறேன்.

    வருகிற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எனது தொண்டர்கள் இணைந்து பணியாற்றும்படி நான் கேட்டுகொண்டுள்ளேன். மத்தியில் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தினை பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். #AkhileshYadav
    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவர் கோவிலுக்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். #Samajwadi
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவராக இருப்பவர் சாஹ்னி. வழக்கமான அங்குள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் இன்று சென்று கொண்டிருந்த சாஹ்னியை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றது.

    இதனை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Samajwadi
    ×