search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem accident"

    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவரை தொடர்ந்து, அவரது நண்பரான பயிற்சி காவலர் கிருஷ்ணனும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஊராட்சி கீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 27). போலீஸ் வேலைக்கு தேர்வான இவர், தர்மபுரி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி பெற்று வந்தார். 3 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நண்பர்களான இருவரும் பேளூர் பகுதியில் இருந்து கீரப்பட்டி நோக்கி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். கீரப்பட்டி பேருந்து நிறுத்தம் சண்முகம் தோட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்(26). என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது பலமாக மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவரை தொடர்ந்து, அவரது நண்பரான பயிற்சி காவலர் கிருஷ்ணனும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். அர்ஜுனன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பயிற்சி காவலர் உட்பட 2 பேர் பலியான சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் அருகே மொபட் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மற்றொரு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகள் சுவேதா (வயது 23). கோவை கல்வீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சுபஸ்ரீ (23).

    இவர்கள் இருவரும் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தனர். பயிற்சிக்காக கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் மொபட்டில் சென்று வந்தனர். வழக்கம் போல நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர்கள் மாலையில் மருத்துவ கல்லூரிக்கு திரும்பினர். அப்போது சுவேதா மொபட்டை ஓட்டினார். சுபஸ்ரீ பின்னால் அமர்ந்திருந்தார்.

    மொபட் கொங்கணாபுரம்-மகுடஞ்சாவடி சாலையில் அழகானூர் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கொங்கணாபுரம் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அவர்கள் படிக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுபஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் சக மாணவ-மாணவிகள் கதறி அழுதனர்.

    சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    சேலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தால் சாலையோர குழியில் உள்ள மழை தண்ணீரில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Rain #accident

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    இதில் சேலம், மாநகர், எடப்பாடி, சங்ககிரி, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    அப்போது சேலம் மாவட்டம் சிவதாபுரம் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நிலையில் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக் கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது பெயர் ஈஸ்வர மூர்த்தி, நானும், எடப்பாடி அருகே உள்ள சித்தூரை சேர்ந்த குமார் (வயது36) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சேலம் நோக்கி வந்தோம். சிவதாபுரம் பாலம் பகுதியில் வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எங்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நானும், என்னுடன் வந்த குமாரும் (வயது 36) படுகாயம் அடைந்தோம். ஆனால் எதிரே வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பியதால் அங்கிருந்து சென்று விட்டனர். அந்த பகுதியில் தண்ணீர் சூழ்ந்திருந்தத நிலையில் என்னுடன் வந்த குமாரை திடீரென காணவில்லை என்று கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்று நேற்றிரவு குமாரை தேடினர். ஆனால் குமார் கிடைக்கவில்லை.

    பின்னர் இன்று அதிகாலை முதல் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விபத்து நடந்த சாலையோரம் கிடந்த 5 அடி ஆழ குழியில் நிரம்பியிருந்த மழை தண்ணீரில் மூழ்கி குமார் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    அவரது உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த குமாரின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் குமாரின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியவர் சாலை யோரம் கிடந்த தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையோரம் கிடக்கும் குழிகளை மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாராபுரத்தில் பவர் பிளாக்கல் ஓட்டும் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் கன்னங்குறிச்சி மன்னார் பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் அங்கிருந்து தங்கவேல் உட்பட 4 பேர் தீவட்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு பவர் பிளாக் செங்கலை கொண்டு வந்தனர். அப்போது அவர் எதிரே உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சேலம்-தர்மபுரி நெடுஞ்சாலையில் ரோட்டை கடக்க முயனறார். அப்போது அந்த தனியார் பள்ளி வேன் தங்கவேல் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தீவெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சேலம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது ஆம்னி வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொண்டலாம்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் மனைவி அங்காயி (வயது 60). இவர் நேற்று கொண்டலாம்பட்டியை அடுத்த அரியானூர் ஜங்சன் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கு அந்த வழியாக வந்த ஆம்னி வேன் அவர் மீது மோதியது.

    இதில் அங்காயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ரவிகுமார், அங்காயி உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த அங்காயி மகள் செல்வி (43) சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
    சேலம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஐஸ் வியாபாரி மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணத்தை அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45), ஐஸ் வியாபாரி. இவரது மனைவி லதா (40).

    இவர்கள் 2 பேரும் இன்று காலை தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளிப்பட்டியில் நடைபெறும் கோவில் திருவிழாவில் ஐஸ் வியாபாரம் செய்ய மொபட்டில் சென்றனர்.

    மொபட்டில் பின்புறம் ஐஸ் பெட்டியையும், முன்புறம் மனைவியையும் அமரவைத்தும் சண்முகம் வண்டி ஓட்டி சென்றார்.

    ஆச்சாங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சென்றபோது, அந்த வழியாக பார்சல் ஏற்றிவந்த லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகமும், லதாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீராணம் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பார்சல் லாரியை ஓட்டிவந்த சேசன்சாவடியை சேர்ந்த ஏழுமலை என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான தம்பதிக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஆச்சாங்குட்டப்பட்டியில் ரோடு குறுகலாக உள்ளதாலும், சாலையோரம் பள்ளம் இருந்ததாலும், ஐஸ் வியாபாரி சண்முகம் மொபட்டை ரோட்டை விட்டு கீழே இறங்காமல் சென்றார். இதனால் லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  #tamilnews
    சேலம் அருகே விபத்தில் வட மாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி திருமகள் பை-பாஸ் ரோட்டில் 40 வயது மதிக்கதக்க வட மாநில வாலிபர் ஒருவர் இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான வட மாநில வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் ஒரே நாளில் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த விபத்து சம்பவங்களில் லேப்-டெக்னீசியன் உள்பட 3 பேர் பலி பலியாகி உள்ளனர்.
    சேலம்:

    சேலம், கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பெரியண்ணன் (வயது 21) கிரானைட் கல் அறுக்கும் ஆபரேட்டர் வேலை செய்து வந்தார்.

    இவரும், ரெட்டியூரை சேர்ந்த தங்கவேல் மகன் ரஞ்சித் குமார்(20) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இரவு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மாமாங்கத்திற்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினர்.

    அப்போது பெரியண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் ரஞ்சித்குமார் அமர்ந்திருந்தார். இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    ஜாகீர்ரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையை கவனிக்காமல் பெரியண்ணன் அதில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டினார். இதில் ஏறி, இறங்கிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சென்று அங்கிருந்த சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் பெரியண்ணனின் தலை சுவரில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரஞ்சித்குமாருக்கு கை எலும்பு உடைந்தது.அவரை போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரகாஷ்ராஜ் (வயது 27). லேப்-டெக்கினீக்கல் படித்துள்ளார்.

    இவர் ஜாகீர்ரெட்டிப் பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றி வந்தார்.

    நேற்று இவருக்கு இரவு பணி ஒதுக்கப்பட்டது.இதனால் பிரகாஷ்ராஜ் ஜாகீர்ரெட்டிபட்டியில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே மெயின்ரோட்டில் வந்தபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியது.

    இதில் பிரகாஷ்ராஜ் சாலையில் உள்ள மின் கம்பத்தில் தூக்கி வீசப்பட்டார். இதில் தலை மின்கம்பத்தில் வேகமாக மோதியதில் தலை உடைந்து, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கு நிற்காமல் தப்பி சென்று விட்டது. இந்த வாகனம் குறித்து சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று இரவு மாமாங்கம் மெயின் ரோட்டில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் நடந்து சென்றார். அவர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் தலை, முகம், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

    ஒரே நாளில் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த இந்த விபத்து சம்பவங்கள் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    சேலத்தில் இன்று காலை கல்லூரி பஸ் மோதிய விபத்தில் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி மோட்டாகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 57). இவர் வாழப்பாடி அருகே உள்ள நாட்டாமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    சந்திரா இன்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். அவரது கணவர் கனகராஜ் வீட்டில் இருந்து அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    அஸ்தம்பட்டி சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் வந்த போது பின்னால் வந்த கல்லூரி பஸ் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சந்திரா மீது பஸ் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். கனகராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.

    தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×