search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sai pallavi"

    • இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கார்கி.
    • கார்கி திரைப்படம் ஜூலை 15- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

    'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. 'கார்கி' திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சாய் பல்லவி

    சமீபத்தில் வெளியான கார்கி படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'யாத்ரீ' வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கார்கி.
    • கார்கி திரைப்படம் ஜூலை 15- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி'

    படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. 'கார்கி' திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    கார்கி

    சமீபத்தில் வெளியான கார்கி படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் "இந்த ஆண்டின் சிறந்த படமாக கார்கி இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள். எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கார்கி.
    • கார்கி திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

    'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. 'கார்கி' திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

    இந்த படத்தின் நடிகை சாய் பல்லவி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கார்கி படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். "சூர்யா சார், கார்கி படத்தை வெளியிடுவது படத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். அவர் இந்த படத்தை பார்த்து இதெல்லாம் பிடித்திருக்கிறது என்று கூறும்போது சரியாக தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது. நடனம் எனக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தது. நடனம் இல்லை என்றால் நான் இல்லை" என்று கூறினார்.



    • கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி கார்கி படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. 'கார்கி' திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கார்கி

    கார்கி

    கார்கி படத்தின் தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் இணைந்து வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அறிவித்தபடி இப்படத்தின் டிரைலர் வெளியானது. பெரும் எதிர்பார்பில் உருவான கார்கி படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.


    • சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஷியாம் சிங்காராய் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கார்கி படத்தில் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    கார்கி

    கார்கி

    தற்போது இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. 'கார்கி' திரைப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கார்கி

    கார்கி

    இந்நிலையில் கார்கி படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் இணைந்து இன்று மாலை 6.06 மணிக்கு வெளியிடுகின்றனர் என்று படக்குழு அறிவித்துள்ளது.


    • சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஷியாம் சிங்காராய் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கார்கி படத்தில் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    சாய்பல்லவி

    சாய்பல்லவி

    தற்போது இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது.

    கார்கி

    கார்கி

    தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி 'கார்கி' திரைப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    • சாய் பல்லவி நடித்த ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கார்கி படத்தில் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே 'களி' என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

    பின்னர் 'பிடா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்கு சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    கார்கி போஸ்டர்

     இதைத்தொடர்ந்து சாய் பல்லவி நடித்துள்ள படம் 'கார்கி'. கெளதம் ராமசந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது.

    படக்குழு

     இது குறித்து சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் " கார்கி குழுவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கார்கி திரைப்படத்தில் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புது சிந்தனைகளும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் 'கார்கி பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். மேலும், 'கார்கி படத்தின் போஸ்டரை இணையத்தில் சூர்யா பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது சாய் பல்லவி பேசியது சர்ச்சையானது.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே 'களி' என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் 'பிடா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்கு சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

    சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் நடிப்பில் விராட பர்வம் திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது நடிகை சாய்பல்லவி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இவரின் கருத்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் பெற்று வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

    சாய் பல்லவி

    சாய் பல்லவி


    இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் 'விராட பர்வம்' படம் குறித்து தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு படம் 'விரத பர்வம்'. இயக்குனர் வேணு உடுகுலா, எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராணா டகுபதிக்கு சிறப்பு பாராட்டுகள். சாய்பல்லவி சிறப்பாக நடித்துள்ளார்" என பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.



    • சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது பேசியது சர்ச்சைக்குள்ளானது.
    • காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்ததும், இஸ்லாமியர்களுக்கு நடப்பதும் ஒன்றுதான் என்று சாய் பல்லவி தெரிவித்திருந்தார்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி சமீபத்தில் மத ரீதியாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைத்தளத்தில் கண்டனங்களும் கிளம்பின. இந்த நிலையில் சர்ச்சைக்கு விளக்கம் அளித்து சாய் பல்லவி சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    சாய் பல்லவி

    சாய் பல்லவி


    அதில், "சில தினங்களுக்கு முன்பு நான் தெரிவித்த கருத்து சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் அனைவரும் ஒன்று என்பதைத்தான் பேட்டியில் தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை ஒரு மருத்துவ பட்டதாரியாக, எந்த உயிரையும் இனம், மதம், சாதி, கலாசாரம், மொழி ரீதியாக பிரித்து பார்க்க கூடாது. எல்லோரின் உயிரும், உணர்வும் ஒன்று தான். எனது 14 வருட பள்ளி காலத்தில், தினமும் இந்தியர்கள் அனைவரும் சமம். அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் நாட்டை நேசிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறேன்.

    சாய் பல்லவி

    சாய் பல்லவி

    சாதி, மதம், இனம் ரீதியாக யாரையும் வேறுபடுத்தி பார்த்தது இல்லை. நடுநிலையாகவே பேசுவேன். எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பலர் கருத்து கூறியது வேதனை அளிக்கிறது. எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது பேசியது சர்ச்சைக்குள்ளாகியது.
    • காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்ததும், இஸ்லாமியர்களுக்கு நடப்பதும் ஒன்றுதான் என்று சாய் பல்லவி தெரிவித்திருந்தார்.

    நடிகை சாய் பல்லவி, நடிகர் ராணா நடித்துள்ள விராட பர்வம் திரைப்படம் ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நக்சல் தலைவர் என்ற கேரக்டரில் ராணா நடித்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    படத்தின் புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது பேசிய நடிகை சாய்பல்லவி, "எனது குடும்பத்தினர் எந்த கொள்கையையும் சாராதவர்கள். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றுதான் எனது குடும்பத்தினரால் நான் வளர்க்கப்பட்டுள்ளேன். யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்க வேண்டும். இடது சாரிகள், வலது சாரிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை நம்மால் சொல்ல முடியாது.

    சாய் பல்லவி

    சாய் பல்லவி

    காஷ்மீர் பண்டிட்டுகள் அனுபவித்த கொடுமைகளை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் கூறியிருந்தார்கள். மத அடிப்படையில் இந்த சம்பவங்களை நீங்கள் அணுகினால், சமீபத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய டிரைவர் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டும் என்று கூறி தாக்கினார்கள். காஷ்மீர் பண்டிட் பிரச்னை, இஸ்லாமிய டிரைவர் மீதான தாக்குதல் இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்? நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் பிறரை காயப்படுத்த மாட்டோம்.

    நான் மிகவும் நடுநிலையானவள். எனவே நான் நம்புவது என்னவென்றால், நீங்கள் என்னை விட வலிமையானவராக இருந்தால், நீங்கள் என்னை ஒடுக்குகிறீர்கள் என்றால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஒரு சிறிய கூட்டத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒடுக்குவது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.


    சாய் பல்லவி

    சாய் பல்லவி


    நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாய் பல்லவி மீது ஹைதராபாத் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ இந்து ரிஷத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்ற நபர் ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் சாய் பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். பசு பாதுகாவலர்களையும், காஷ்மீரி தீவிரவாதிகளையும் சாய் பல்லவி ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

    'விரத பர்வம்' படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் விமர்சனம்.
    சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர்.

    இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பாலா சிங் மூலமாக சட்டமன்ற உறுப்பினரான இளவரசுவை சந்திக்கிறார் சூர்யா. அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணரும் சூர்யா, இளவரசுவின் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்.



    இவ்வாறாக வேறு வழியின்றி அரசியலில் நுழையும் சூர்யா சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? அவரது ஆசை நிறைவேறியதா? முழு அரசியல்வாதி ஆனாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.



    அரசியல்வாதி கதாபாத்திரங்களில் இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்துவிட்டுச் செல்கிறார். அப்பாவாக நிழல்கள் ரவி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

    இயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல்லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை. 



    பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரடியாக மிரட்டியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருப்பது படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `என்ஜிகே' நழுவலானது கெத்து கூட்டணி.



    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்ஜிகே படம் இன்று ரிலீசாகும் நிலையில், அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருப்பதாக சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
    செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் என்ஜிகே படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏 இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



    இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கிறது.

    ×