சாய்பல்லவியை பாராட்டிய பா.இரஞ்சித்.. வைரலாகும் பதிவு

சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது சாய் பல்லவி பேசியது சர்ச்சையானது.
பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்
Published on

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே 'களி' என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் 'பிடா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்கு சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் நடிப்பில் விராட பர்வம் திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது நடிகை சாய்பல்லவி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இவரின் கருத்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் பெற்று வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

சாய் பல்லவி


இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் 'விராட பர்வம்' படம் குறித்து தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு படம் 'விரத பர்வம்'. இயக்குனர் வேணு உடுகுலா, எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராணா டகுபதிக்கு சிறப்பு பாராட்டுகள். சாய்பல்லவி சிறப்பாக நடித்துள்ளார்" என பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com