சாய் பல்லவி படத்தின் அப்டேட் கொடுத்த சூர்யா.. வைரலாகும் போஸ்டர்..

சாய் பல்லவி நடித்த ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கார்கி படத்தில் நடித்துள்ளார்.
சூர்யா
சூர்யா
Published on

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே 'களி' என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

பின்னர் 'பிடா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்கு சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கார்கி போஸ்டர்

 இதைத்தொடர்ந்து சாய் பல்லவி நடித்துள்ள படம் 'கார்கி'. கெளதம் ராமசந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது.

படக்குழு

 இது குறித்து சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் " கார்கி குழுவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கார்கி திரைப்படத்தில் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புது சிந்தனைகளும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் 'கார்கி பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். மேலும், 'கார்கி படத்தின் போஸ்டரை இணையத்தில் சூர்யா பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com