சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் வெளியிடும் சாய் பல்லவி பட டிரைலர்

சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஷியாம் சிங்காராய் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கார்கி படத்தில் நடித்துள்ளார்.
சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் வெளியிடும் சாய் பல்லவி பட டிரைலர்
Published on

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கார்கி
கார்கி

கார்கி

தற்போது இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. 'கார்கி' திரைப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கார்கி
கார்கி

கார்கி

இந்நிலையில் கார்கி படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் இணைந்து இன்று மாலை 6.06 மணிக்கு வெளியிடுகின்றனர் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com