இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கும் - நடிகர் உதயநிதி

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கார்கி. கார்கி திரைப்படம் ஜூலை 15- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி'

படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. 'கார்கி' திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கார்கி

சமீபத்தில் வெளியான கார்கி படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் "இந்த ஆண்டின் சிறந்த படமாக கார்கி இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள். எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com