search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery"

    • திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார்.
    • சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் டவுன் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

    அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடலை மீட்ட டவுன் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக மீட்கப்பட்ட 2 பேர் குறித்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • வெள்ளியணை அருகே 20 அடி ஆழ விவசாயத்திற்கான கிணற்றில் துார் வாரும் போது விழுந்த 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்
    • தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கரூர், 

    கரூர் நகரை சேர்ந்தவர்கள் சந்தோஷ் குமார் (வயது 24), சரவணன் (33) சாமிநாதன் (32), ஆனந்த் (30). இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள், நான்கு பேரும், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஆட்டையாம்பரப்பு பகுதியில், 20 அடி ஆழ விவசாய கிணற்றை, துார் வாரும் வேலைக்கு சென்றனர்.முதலில் சாமிநாதனும், ஆனந்தும் ராட்டையில் கயிறு கட்டி, அதன் மூலம் பாதுகாப்பாக கிணற்றில் இறங்கினர். பிறகு, சந்தோஷ்குமாரும், சரவணனும், கயிறு மூலம் கிணற்றில் இறங்கிய போது, ராட்டை அறுந்து விழுந்ததால், இருவரும் கிணற்றில் விழுந்தனர். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 'ஸ்ட்ரெச்சர்' மூலம், இருவரையும் உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர்.
    • தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

    சிக்கிம்:

    கிழக்கு சிக்கிம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சிகாங்கு ஏரிப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்களது வாகனங்களை அங்கிருந்து நகரத்தை முடியாமல் தவித்தனர்.

    இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

    • கடந்த ஓராண்டாக பாதுகாப்பின்றி சுற்றி திரிந்தவர் மீட்பு
    • தனியார் மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு

    கரூர்,

    அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கடந்த ஓராண்டாக, பாதுகாப்பின்றி சுற்றித்திரிவ தாகவும், அவரை மீட்டு, மன நல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க கோரி, சமூக ஆர்வலர்கள் அரவக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், குளித் தலை அருகே, சாந்தி வனம் மனநல காப்பகத்தினரை போலீசார் தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை மீட்டு, மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, சாந்திவனம் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, டிரைவர் வேல்மு. ருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈசநத்தம் சென்று அந்த பெண்ணை மீட்டு, திருச்சியில் ள்ள தனியார் மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    • 17 வயது சிறுவனை மீட்ட போலீசார்
    • வி.ஏ.ஓ. அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை

    கரூர்,

    கரூர் மாவட்டம், செல் லாண்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும், பிளீச்சிங் கம்பெனியில், குழந்தை தொழி லாளர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளதாக, தோரணக்கல்பட்டி வி.ஏ.ஓ., நாக மணிகண்டன், தான்தோன்றி மலை போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து வருவாய் துறை அலுவலர்களுடன், போலீசார், சம்பந்தப் பட்ட கம்பெனியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த, செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவனை, தான்தோன்றி மலை போலீசார் மீட்டனர்.

    • ஆக்கிரமிப்பில் இருந்த 1.60 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டன.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கிணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும்

    சோழவந்தான்

    வாடிப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், சேவை மையம் என ஒருங்கி ணைந்த வளாகம் கட்ட கடந்தாண்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்காக காடுபட்டி கிராமத்தில் சர்வே எண் 566/37 மற்றும் 293/2-ல் அமைந்துள்ள அரசு நத்தம் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வருவாய் துறை மூலம் சர்வே பணி செய்து கொடுக்க காடுபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலத்தில் உள்ள வட்ட அளவையர் பிரிவில் சர்வே பணிக்குறிய தொகையான ரூ.1600-ஐ இ-சலான் மூலம் கடந்தாண்டு நவம்பர் 14-ல் செலுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை அரசு நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெறா மல் 4 மாதங்களாக சர்வே பிரிவினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந்த நிலையில் தென்கரை குறுவட்ட அளவையர் சந்திரா தலைமையில் காடுபட்டி அரசு நத்தம் சர்வே எண். 566/37 மற்றும் வடகாட்டுபட்டி மந்தைகளம் சர்வே எண் 293/2-ல் உள்ள 1 ஏக்கர் 60 செண்ட் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றி நிலத்தை மீட்டனர்.

    அப்போது ஊராட்சி தலைவர் ஆனந்தன், யூனியன் பொறியாளர் பூம்பாண்டி, மேற்பார்வை யாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் ஆகியோர் உடனி ருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், முத்துபாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கி ணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.
    • சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தை, ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தை, ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணனுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் ஆலத்தூர் ஆய்வாளர் தமிழரசி, காரை மேற்கு கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் புதுக்குறிச்சி கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ரூ.15 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.


    பத்திரமாக காப்பு காட்டில் விடப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மண் சாலையில் நேற்று அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற இளைஞர்கள், அதனை பிடித்து வைத்து கொண்டு, பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்த நட்சத்திர ஆமையை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

    • கிருஷ்ணராயபுரத்தில் 28 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது.
    • அந்த நிலத்தில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெற்றது

    கரூர்

    கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முருகன் கோவில் பின்புறம் 28 சென்ட் அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். பின்னர் அந்த நிலத்தில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க கரூர் அல்லது குளித்தலை மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். கிருஷ்ணராயபுரம் தாலுகா மருத்துவமனை கோவக்குளத்தில் அமைந்துள்ளது. ஆனால் இங்கு போதிய பஸ் போக்குவரத்து வசதி இல்லை. எனவே தற்போது பேரூராட்சி அலுவலர்களால் மீட்கப்பட்ட 28 சென்ட் நிலத்தில் மருத்துவமனை அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் வட மாநில தொழிலாளி தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    ஒடிசா மாநிலம் ஜெரபேடா அடுத்த கஞ்சிரா பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ்குமார் பேரா (வயது 38). இவர் தனது நண்பர்களுடன் சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை சரோஜ்குமார், தான் தங்கி இருந்த வீட்டு கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவருடன் தங்கியிருந்த நண்பர்கள், கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சரோஜ்குமார் மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரோஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகார் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சரோஜ்குமாருக்கு ஊர்வசி என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.

    • மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கலைச்செல்வி கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. கலைச்செல்வியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் நேற்று அயன் பேரையூர் ஏரியில் கலைச்செல்வி பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்த இடங்கள் மீட்கப்பட்டது.
    • ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக மீட்டு கொடுத்த கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் சர்வே எண் 176 உட்பிரிவின் கீழ் இடங்கள் வீட்டுமனையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் வாங்கியவர்கள் 200க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அதில் 8 பேருக்கு சொந்தமான 60 சென்ட் இடங்களை அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து மரங்களை வளர்த்து வந்தனர்.

    இடத்தின் உரிமையாளர்கள் கேட்டு சென்றால் அவர்களை ஆபாசமாக பேசி மிரட்டியும் வந்தனர். இது தொடர்பாக இடத்தின் உரிமையாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தர உத்தரவு வாங்கினர். கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் வட்டாட்சியர் ராமசந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உதவியுடன் புல்டோசர்களை கொண்டு அதிரடியாக ஆக்கிமிப்புகளை அகற்றினர்.

    அப்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் வட்டாட்சியரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்தனர். ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக மீட்டு கொடுத்த கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×