என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த 2 தொழிலாளர்கள் மீட்பு
- வெள்ளியணை அருகே 20 அடி ஆழ விவசாயத்திற்கான கிணற்றில் துார் வாரும் போது விழுந்த 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்
- தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கரூர்,
கரூர் நகரை சேர்ந்தவர்கள் சந்தோஷ் குமார் (வயது 24), சரவணன் (33) சாமிநாதன் (32), ஆனந்த் (30). இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள், நான்கு பேரும், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஆட்டையாம்பரப்பு பகுதியில், 20 அடி ஆழ விவசாய கிணற்றை, துார் வாரும் வேலைக்கு சென்றனர்.முதலில் சாமிநாதனும், ஆனந்தும் ராட்டையில் கயிறு கட்டி, அதன் மூலம் பாதுகாப்பாக கிணற்றில் இறங்கினர். பிறகு, சந்தோஷ்குமாரும், சரவணனும், கயிறு மூலம் கிணற்றில் இறங்கிய போது, ராட்டை அறுந்து விழுந்ததால், இருவரும் கிணற்றில் விழுந்தனர். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 'ஸ்ட்ரெச்சர்' மூலம், இருவரையும் உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story