search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration rice"

    • ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள்
    • 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை அருகே நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

    ரேசன் அரிசி கடத்தல்

    குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரெயிலில் பொதுப் பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சீட்டுக்கு அடியில் 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அதனை சோதனை செய்தபோது 1 டன் ரேசன் அரிசி இருந்தது.

    விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமதி (வயது 38), கிருஷ்ணவேணி (37) சரவணன் (30) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிந்தது.

    குற்ற புலனாய்வுத் துறை போலீசார் அரிசி மூட்டைகளையும், அதனை கடத்தி வந்தவர்களையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கர்நாடகா மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கும் ரேஷன் அரிசியை அதிகளவில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலையில் ஏரகனஹள்ளி -திகினாரை சாலையில் தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த புதரில் சென்று தப்பி சென்று விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டது திகினாரையை சேர்ந்த மாதேவா, ஜெயலட்சுமி என தெரிய வந்தது. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • குன்னம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 1,800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், பேரளியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குன்னம் வட்டார வழங்கல் அலுவலர் சீனிவாசனுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் பேரளிக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் வட்ட வழங்கல் அலுவலரின் உதவியாளர் அருள்முருகன், குன்னம் தனி வருவாய் ஆய்வாளர் ஏகாம்பரம், பேரளி கிராம உதவியாளர் பெரியசாமி ஆகியோருடன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதாக கூறப்பட்ட சரக்கு வாகனத்தை போலீசார் தேடி கொண்டிருந்தனர். அப்போது பேரளியில் மருவத்தூர் பிரிவு சாலையில் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நோக்கி அவர்கள் சென்றனர். அவர்களை கண்டவுடன் சரக்கு வாகன டிரைவர் வாகனத்தை விட்டு இறங்கி தப்பி ஓடினார்.

    போலீசார் துரத்தி சென்றும் டிரைவரை பிடிக்க முடியவில்லை. பின்னர் சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு வாகனத்தில் தலா 40 கிலோ எடையுள்ள 45 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. பின்னர் அந்த சரக்கு வாகனத்தை கைப்பற்றிய குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் 1,800 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பெரம்பலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் அதிகாரிகள் அதிரடியாக சோதனையிட்டனர்.
    • ரைஸ் மில்லின் உரிமையாளர் தாட்சாயணியிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

    கடலூர்:

    ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் உதயகுமார், தனி தாசில்தார் பூபாலச்சந்திரன், பறக்கும் படை அரவிந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏழுமலை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் அதிரடியாக சோதனையிட்டனர். இதில் 1600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து ரைஸ் மில்லின் உரிமையாளர் தாட்சாயணியிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். மேலும், பதுக்கி வைத்திருந்த 1600 கிலோ ரேஷன் அரிசியினை பறிமுதல் செய்தனர்.

    • நுகர்பொருள் வாணிபக கிடங்கில் ஒப்படைத்தனர்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    ரங்கநாதர் நகர் பகுதியை சார்ந்த ஜோதி என்பவர் வீட்டில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் 3500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து போலீசார் 3,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குடியாத்தம் நுகர்பொருள் வாணிபக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
    • 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் புதுப்பேட்டை மந்திபாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் தீவிரமா கஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி எடுத்துச்செல்வது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து அவரிடம் துருவித்துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 45), என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த பழனியும் (55) கைது செய்யப்பட்டார். 2 பேரும் வேலூரை சேர்ந்தவர் ஆவார்.

    இவர்கள் ரேஷன் அரிசி, துவரம் பருப்பு ஆகியவை கேரளாவுக்கு அனுப்பும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் அருகில் சாலையோரத்தில் இருட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான 2 பேரும் மினி லாரியில் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி அதற்குள் ரேஷன் அரிசி, பருப்பு மூட்டைகளை கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தர்மபுரி சாலையில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த, மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தலா, 50 கிலோவில், 14 மூட்டைகளில், 700 கிலோ அரிசி இருந்தது. விசாரணையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா செட்டி அல்லி அடுத்த கம்மாளப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது45), என்பதும் தெரியவந்தது.

    அவர் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

    • பல மாநிலங்களுக்கு அரிசி விற்பனை செய்வதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.
    • தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் 80 கோடி மக்களுக்கு மலிவு விலையில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    திறந்த வெளி சந்தை திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ் நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக தங்களுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக தமிழ் நாடு அரசு சார்பில் இந்திய உணவு கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதே போல கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் கோரிக்கை விடுத்து இருந்தது. கர்நாடகாவில் சமீபத்தில் தான் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 2.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக கர்நாடக அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. இதே போல பல மாநிலங்களும் தங்களுக்கு கூடுதல் அரிசி தேவை என கோரி இருந்தது.

    ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து உள்ளது. பல மாநிலங்களுக்கு அரிசி விற்பனை செய்வதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு கழக நிர்வாக இயக்குனர் ஆஷிக் மீனா கூறும் போது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் 80 கோடி மக்களுக்கு மலிவு விலையில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் விலை அதிகரிக்காமல் இருக்கவும், பொதுமக்கள் தொடர்ந்து மலிவுவிலையில் அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    மாநில அரசுகள் தேவைப்பட்டால் சந்தையில் இருந்து அரிசியை வாங்கி கொள்ளலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து இருந்தார். அதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி திறந்த மார்க்கெட் திட்டத்தின் மூலம் அரிசி விற்பனையை தொடங்க இருக்கிறது. இதற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,100 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம், மீஞ்சூர் மற்றும் தடப்பெரும்பாக்கம் ,கிருஷ்ணாபுரம், பகுதியில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவற்றை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 4 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் சென்னையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளுர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் நாராயணபுரம் கூட்ரோடில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 4 டன் ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெத்தராமன், சரவணன், மதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கும், டிபன் கடைகளுக்கும் விற்பனை செய்ய அரக்கோணம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கிக்கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து பெத்தராமன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    ரேசன் அரிசியை கடத்திய மா்ம நபா்கள் குறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
    திருவள்ளூர்:

    கும்மிடிப்பூண்டியில் இருந்து ரெயில் மூலம் ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து திருவள்ளூா் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசாா் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரெயில் நிலைய நடைமேடை 1-ல் போலீசார் சோதனை செய்தனா். அப்போது, கேட்பாரற்றுக் கிடந்த 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ஒரு டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவள்ளூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

    மேலும், ரேசன் அரிசியை கடத்திய மா்ம நபா்கள் குறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×