search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration rice"

    • 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம்.
    • புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    திருப்பூர்

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, இலவச எண்ணில் புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கரடிவாவி சோதனைச்சாவடி, உடுமலை பஸ் நிலையம், குடிமைப்பொருள் புலனாய்வு அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சிலர் பொது மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மூட்டைகளில் அடைத்து இருசக்கர வாகனம், கார், டெம்போ, லாரி, சரக்கு ஆட்டோ ஆகியவற்றில் கேரள மாநிலத்துக்கு சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    குடிமைப் பொருள் வழங்கல் துறையினர், போலீசார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் செம்மனாம்பதி, மீனாட்சிபுரம், கணபதி பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் ரேஷன் அரிசி கடத்தப்படும் வழித்தடமாக கண்டறியப்பட்டு அங்கு ரோந்து மற்றும் வாகனத்தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநராக வன்னிய பெருமாள் பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் கோவை சரக டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி கடத்தலில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று தணிக்கை செய்தனர்.

    மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • ரைஸ் மில்களுக்கு மாவு அரைக்க பயன்படுத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 650 கிலோ ரேசன் அரிசியை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து அரிசியை பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் ரேசன் அரிசியை பதுக்கி அதனை ரைஸ் மில்களுக்கு மாவு அரைக்க பயன்படுத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    முத்தழகுபட்டியில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தானம் மகன் அமுல்ராஜ் (வயது37) என்பவர் வீட்டில் 650 கிலோ ரேசன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் அமுல்ராஜையும் கைது செய்தனர். இந்த அரிசியை யாரிடம் இருந்து அவர் வாங்கி வந்தார். யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ரேசன் கடைகளில் அரிசி வாங்க விருப்பம் இல்லாத நபர்களிடம் அதனை வாங்கி பாலீஸ் செய்து விற்கப்படுவ தாகவும், மாவு அரைக்க விற்கப்படுவதாகவும் புகார்கள் வருவதால் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    • நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

    போலீஸ் ரோந்து

    அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ரேசன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வாழப்பாடி அருகே உள்ள கீரிப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    6 பேர் கைது

    இது தொடர்பாக போலீசார் ஆத்தூர் பகுதியை சேர்ந்த விக்டர் ேஜம்ஸ், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா, வாழப்பாடியை சேர்ந்த சுப்பிரமணி, குகை பகுதியை சேர்ந்த நடேசன், ஒடிசாவை சேர்ந்த ஷாமால் கோம் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். லாரியில் 3 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு தயாராக இருந்தது.

    ஊழியர் தப்பி ஓட்டம்

    இந்த நிலையில் இந்த ரேசன் கடையின் ஊழியருக்கும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரம் என்பதால் யாரும் இருக்க மாட்டார்கள் என்று திட்டமிட்டு ரேசன் அரிசி கடத்த முயன்றனர்.

    • 200 கிலோ சிக்கியது
    • குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் நோக்கி செல்லும் ரெயில் ஜோலார் பேட்டையில் வந்து நின்றது. ரெயில்வே போலீசார் பொதுப்பட்டியில் ஏறி சோதனை செய்தனர்.

    அப்போது 4 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது 200 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 35) என தெரிந்தது. அவர் ரேஷன் அரிசி பெங்களூருக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிந்தது. மேலும் ரெயில்வே போலீசார் விஜயை கைது செய்து திருப்பத்தூர் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • 800 கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயக மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் திருவலம், பொன்னை ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, பொன்னை குமரகுண்டா பகுதியில் சாலை ஓரமாக கேட்பாரற்று கிடந்த மூட் டைகளை சோதனை செய்தனர். அதில் 800 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து திருவலம் நுகர் வோர் பாதுகாப்பு கிடங் கில் ஒப்படை க்கப்பட்டது. மேலும் அரிசி கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு ஆட்டோவில் இருந்து 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
    • கோவை மாவட்டம், மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சோ்ந்த ஜி.காா்த்திகேயன் (வயது 32) என்பவரை கைது செய்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய கோவையை சோ்ந்த வாலிபர் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

    இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா், பல்லடம் சாலையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினா் கடந்த 10 ந் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் சரக்கு ஆட்டோவில் இருந்து 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    இதுதொடா்பாக கோவை மாவட்டம், மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சோ்ந்த ஜி.காா்த்திகேயன் (வயது 32) என்பவரை கைது செய்தனா். இவா் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காா்த்திகேயனிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது. 

    • 2 நபர்கள் வீடு வீடாக வந்து ரேசன் அரிசி இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர்.
    • சோதனை மேற்கொண்டதில் அவர்கள் 220 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ஊராட்சி அருள்புரம் பகுதியில் 2 நபர்கள் வீடு வீடாக வந்து ரேசன் அரிசி இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கோவிந்தராஜுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் இது குறித்து திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அருள்புரம் பகுதியில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வந்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(வயது 40), பிரேம்குமார்,(19) ஆகிய இருவரையும் பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர்கள் 220 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
    • சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வட்ட வழங்கல் தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணலி புதுநகர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் சாலையோரம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நின்றது. இதுபற்றி அறிந்ததும் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கல்யாணசுந்தரம், பபிதா ஆகியோர் லாரிகளில் மூட்டைகளாக ரேசன் அரிசி இருப்பது தெரிந்தது.

    மர்ம நபர்கள் ரேசன் அரிசி கடத்தி வந்துவிட்டு போலீசாரின் சோதனைக்கு பயந்து வேன்களை இங்கு நிறுத்தி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 500 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன் ரெயில் நிலையம் அருகே கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் ஜங்களாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் பைக்கில் இருந்த 2 பேர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சந்தேகம் அடைந்த போலீசார் பைக்கில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.

    அதில் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர் பைக்கையும், ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள்
    • 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை அருகே நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

    ரேசன் அரிசி கடத்தல்

    குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரெயிலில் பொதுப் பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சீட்டுக்கு அடியில் 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அதனை சோதனை செய்தபோது 1 டன் ரேசன் அரிசி இருந்தது.

    விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமதி (வயது 38), கிருஷ்ணவேணி (37) சரவணன் (30) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிந்தது.

    குற்ற புலனாய்வுத் துறை போலீசார் அரிசி மூட்டைகளையும், அதனை கடத்தி வந்தவர்களையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ×