search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்திய பெண்"

    • கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கர்நாடகா மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கும் ரேஷன் அரிசியை அதிகளவில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலையில் ஏரகனஹள்ளி -திகினாரை சாலையில் தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த புதரில் சென்று தப்பி சென்று விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டது திகினாரையை சேர்ந்த மாதேவா, ஜெயலட்சுமி என தெரிய வந்தது. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ×