search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration Rice seized"

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    பறக்கும்படை தாசில்தார் அப்துல்லாமன்னான் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக அப்துல்லா மன்னானுக்கு தகவல் கிடைத்தது.

    அவர் தலைமையில் தனித்துறை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன்ராஜிகுமார் மற்றும் டேவிட் ஆகியோர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சாக்குமூடைகளில் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 1 டன் ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது கேரளாவுக்கு ரெயிலில் கடத்திச்செல்ல ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ரே‌ஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசியை கோணம் அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இரணியல் ரெயில்நிலையத்தில் நேற்று 1¼ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜோலார்பேட்டை ரெயிலில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    அரக்கோணத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு ரெயில்கள் மூலம் ரேசன் அரிசி கடத்தபடுவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று இரவு சென்னை-மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளில் சீட்டுகளின் அடியிலும், கழிவறைகளிலும் சிறு, சிறு மூட்டைகளாக 34 மூட்டைகளில் 250 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருப்பத்தூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரே‌சன் அரிசிமூட்டைகளை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சில நாட்களாக ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துபவர்களை கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று தமிழக எல்லையில் 2 லாரிகள், 2 கார், ஒரு பைக் போன்றவற்றில் ரே‌சன்அரிசி மூட்டைகளை கும்பல் கடத்த முயன்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர்.

    இதில் 2 லாரிகள் தப்பி சென்று விட்டன. மற்ற 2 கார்கள் ஒரு பைக் மட்டும் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரேசன்அரசியை கடத்திய ஆந்திர மாநிலம் ராமக்குப்பத்தை சேர்ந்த கேசவரெட்டி, பானு, கோவர்தணரெட்டி, மஞ்சுநாதன், விஜயகுமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 500கிலோ ரே‌ஷன் அரிசி மூட்டைகள் மற்றும் ரூ.50 ஆயிரம்ரொக்கம் 4 செல்போன்கள் கடத்தலுக்குபயன்படுத்திய இரண்டு கார்கள் ஒருபைக்கை பறிமுதல் செய்தனர்.

    மேலும் லாரிகளுடன்தப்பியோடிய கடத்தல் குமபலை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி மற்றும் கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 320 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பஸ்நிலையத்தில் இருந்து முந்தல் வழியாக மூணாறு பகுதிக்கு அரசு பஸ்சில் ரேசன் அரிசி கடத்துவதாக புகார் எழுந்தது.

    அதனடிப்படையில் தேனி பறக்கும்படை தாசில்தார் ஜாகீர்உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பறக்கும்படையினர் போடி முந்தல் வாகன சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி சோதனைபோட்டனர். அப்போது 10 சிப்பம் கொண்ட 320 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    அப்போது அவர்கள் இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். எனினும் ரேசன் அரிசியை பஸ்சில் கடத்திவந்தவர் யார்? இதற்கு மூளையாகஇருப்பது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அரக்கோணம் ரெயிலில் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. அரக்கோணம் தாலுகா வினியோக அதிகாரி குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது இருக்கைக்கு அடியில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய்த் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராணி மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை மதுக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது பஸ் நிறுத்தத்தின் அருகே சாக்கு மூட்டைகள் கிடப்பதை கண்டனர். இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    அங்கு சிறு, சிறு மூட்டைகளில் 400 கிலோ அரிசி இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது ஒத்த கால்மண்டபம் பகுதியில் இருந்தும் ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதாக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்றனர்.

    ஒத்தகால்மண்டபம் சந்திப்பு அருகே பெரிய சாக்கு மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது. 2 இடங்களில் இருந்தும் மொத்தம் 1 டன் ரே‌ஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

    இந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    அலுவலர்கள் வருவதை அறிந்ததும் மர்ம நபர்கள் அரிசி மூட்டைகளை கீழே போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்-யார்? என அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சுரண்டை அருகே 370 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை பகுதிகளில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வீரகேரளம்புதூர் தாசில்தார் நல்லையா தலைமையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கிராம உதவியாளர் அந்தோணி ஆகியோர் அடங்கிய குழு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    வீரகேரளம்புதூரை அடுத்த கலிங்கப்பட்டியில் சோதனை நடத்தியபோது அதே ஊரை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் வீட்டில் சுமார் 370 கிலோ ரே‌ஷன் பச்சரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை அரசு குடோனுக்கு அனுப்பப்பட்டன.

    பழனி வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 450 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பழனி:

    பழனி வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைதொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புபடை சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி தலைமையிலான போலீசார் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் நாமக்கல்லை சேர்ந்த மல்லிகா(வயது40), பழனிச்சாமி(56) என தெரியவந்தது. மேலும் 23 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். அதனை சோதனையிட்டபோது 450 கிலோ ரேசன்அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து பழனிநுகர்பொருள் வாணிப கிட்டங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சமீபகாலமாக ரெயில்மூலம் ரேசன்அரிசி கடத்துவது அதிகரித்துள்ளது. அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுவதால் ரெயில்மூலம் கடத்தி வருகின்றனர். எனவே ரெயில்வே போலீசார் மேலும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். #Tamilnews
    கோவில்பட்டியில் 137 மூட்டை ரேசன் அரிசி மாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Rationriceseized

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரவை மில்களில் ரேசன் அரிசியை மாவுவாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ், விநாயகம் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

    இதையடுத்து கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் ராஜா, இளையராஜா மற்றும் போலீசார் கடலைக்காரத் தெருவில் உள்ள மாவு அரவை மில்லுக்கு சென்று சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு ரேசன் அரிசியை மாவாக அரைப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ராஜீவ் நகரைச் சேர்ந்த காளிராஜ்(வயது 33) நடத்தி வரும் லாரி செட்டில் ரேசன் அரிசி மாவு வைக்கப்பட்டு அங்கிருந்து லாரி மூலம் மதுரைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

     


    இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 137 மூட்டை ரேசன் அரிசி மாவு இருப்பது தெரியவந்தது. இதில் 66 மூட்டை கடலைக்காரத் தெருவிலுள்ள கண்ணனுக்கு சொந்தமான மாவு அரவை மில்லிலிருந்தும், 71 மூட்டை வள்ளுவர் நகர் பகுதியிலுள்ள மாரிமுத்துக்கு சொந்தமான அரவை மில்லிலிருந்தும் வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மில் உரிமையாளர்கள் கண்ணன் மற்றும் மாரிமுத்துவை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 137 மூட்டை ரேசன் அரிசி மாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Rationriceseized

    ×