search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala ration rice"

    போடி மற்றும் கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 320 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பஸ்நிலையத்தில் இருந்து முந்தல் வழியாக மூணாறு பகுதிக்கு அரசு பஸ்சில் ரேசன் அரிசி கடத்துவதாக புகார் எழுந்தது.

    அதனடிப்படையில் தேனி பறக்கும்படை தாசில்தார் ஜாகீர்உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பறக்கும்படையினர் போடி முந்தல் வாகன சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி சோதனைபோட்டனர். அப்போது 10 சிப்பம் கொண்ட 320 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    அப்போது அவர்கள் இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். எனினும் ரேசன் அரிசியை பஸ்சில் கடத்திவந்தவர் யார்? இதற்கு மூளையாகஇருப்பது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்திய 2 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து தொடர்ந்து நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக நிவாரண பொருட்கள் அனுப்புவது போல கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தலும் நடந்து வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உத்தம பாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி 13 மூடைகளை கேரளாவுக்கு 2 பேர் கடத்தி சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர்.

    அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கம்பத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஷ் (வயது27), பிச்சை மகன் மணி (30) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ரேசன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ×