search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhapuram"

    • இரவு தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டபோது அவரை பாம்பு கடித்தது.
    • இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் அரசர்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவரது மகன் திணேஷ்(வயது 26).

    இவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டபோது அவரை பாம்பு கடித்தது.

    உடனே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவர் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். ஆஸ்பத்திரிக்கு அருகில் சென்றபோது மயங்கிவிழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். கழக தேர்தல் பணி செயலாளர் குத்தாலம் கல்யாணம் கழக தீர்மானக் குழு இணை செயலாளர் தேனி ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அப்பாவு, மாவட்ட கழக துணை செயலாளர் எஸ்.ஏ.கே.சித்தி, மாவட்ட பொருளாளர் வள்ளியூர் ஒன்றிய கழக செயலாளர் ஞானதிரவியம், பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜோசப் பெல்சி, பேரூர் கழக செயலாளர்கள் டிம்பர் செல்வராஜ்,

    வி.எஸ்.எஸ்.சேது ராமலிங்கம், தமிழ்வாணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் எரிக் ஜீடு, வி.வி. ராமச்சந்திரன், ஆரோக்கிய எட்வின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முத்துராமன், ஜான் ரபீந்தர், முருகன், ஜோசப், சந்திரன், முரளி, நாகமணி, மார்த்தாண்டம்,

    மு.க.மாணிக்கம், ஜெயக்குமார், ஆனந்த், சுரேஷ், அசோக்குமார், வி.மூர்த்தி, குமார், தனபால், ஜி.பி.ராஜா, சுப்பையா, விஜயன், செந்தில்குமார், முன்னாள் பேரூர் செயலாளர் ஜெயராஜ், ரமேஷ், பணி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் கழக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ராதாபுரம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தர பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய, பேரூர், ஊராட்சி கழக வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக தோழர்கள் என 1500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் செய்திருந்தார்.

    ராதாபுரம் அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கிணற்றில் வீசி கொன்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வி.என்.குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 80). இவரது கணவர் சுவாமிதாஸ் இறந்துவிட்டார். அவரது 3மகள்கள் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் சுப்புலட்சுமி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஆனந்தராஜின் மனைவி ஜெயக்கொடி என்பவருக்குமிடையே பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்துவந்தது. நேற்றுமாலை ஜெயக்கொடி தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மூதாட்டி சுப்புலட்சுமியும் தண்ணீர் பிடிக்க சென்றார். அந்த நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயக்கொடி தனது கணவர் ஆனந்தராஜிடம் (48) கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமியை அவர் தாக்கினாராம். பின்னர் அவரை அலேக்காக தூக்கிச் சென்று ஊருக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் வீசினார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தலையில் அடிபட்டு சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த சுப்புலட்சுமியின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

    ஆனந்தராஜ் மீது ஏற்கனவே அவரது தந்தையை கொலை செய்த வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    ×