search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதாபுரம்"

    • தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார்.
    • 9-ம் திருவிழா அன்று பொத்தக்காலன்விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.

    பணகுடி:

    ராதாபுரம் அருகே உள்ள தோப்புவிளை பரலோக அன்னை ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கிறிஸ்தவ ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி மாலை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியை அர்ச்சித்து ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். திருவிழா நாட்களில் தினமும் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலையில் மறையுரை வழிபாடுகள் நடைபெற்றது.

    9-ம் திருவிழா அன்று பொத்தக்காலன்விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக இரவு 11 மணிக்கு பரலோக மாதா தேரில் ரத வீதிகளில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக உப்பு மிளகு தூவி வழிபட்டனர்.

    தேரோட்டத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • கூட்டத்தில் மீனவர்கள், மீனவ அமைப்புகள் கலந்து கொண்டு மனுக்களை நேரில் வழங்கலாம்.
    • கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ராதாபுரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 11-ந் தேதி காலை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறை களால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தே வைகள் அடங்கிய மனுக்களை மீனவர்கள், மீனவ அமை ப்புகள் கலந்து கொண்டு நேரில் வழங்கலாம்.

    மேலும் அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரி யாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர் களுக்கு அனுப்பி நட வடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரம் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரி விக்கப்படும்.

    எனவே கோரிக்கைகள் உள்ள மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கூட்ட த்தில் கலந்து கொண்டு மனுக்கள் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இண்டர்நெட் கேபிளுக்காக சாலை ஓரத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றது.
    • 10 நாட்களாக சீலாத்திகுளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.

    வள்ளியூர்:

    ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 இடங்களில் குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சமூகரெங்கபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்ல கூடிய சாலை ஓரத்தில் இண்டர்நெட் கேபிளுக்கு குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.

    இதுகுறித்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் தற்போது வரை குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யவில்லை. இதனால் 10 நாட்களாக சீலாத்திகுளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விரைவில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்கவில்லை என்றால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்த போவதாக தெற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் அறிவித்துள்ளார்.

    • பிராந்தநேரி குளத்திற்கு தண்ணீர் வராததால் பயிர்கள் கருகும் அவலம்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தோவாளை கால்வாயில் இருந்து ராதாபுரம் பகுதி பாசனத்திற்கு அரசு நிர்ணயித்த அளவை விட மறைமுகமாக கூடு தல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அஞ்சுகிராமம் கடைவரம்பு பகுதிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் கன்னிப் பூ சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். போதுமான தண்ணீர் கிடைக்க வேண்டுமானால், நிலப்பாறை கால்வாயில் தண்ணீர் திறந்து விடவேண்டும். இதன் மூலம் பிராந்தநேரி குளம் நிரம்பும்.

    மேலும் எம்.பி. கால்வாய் வழியாக மேட்டு கால்வாயில் தண்ணீர் வந்தால்தான் புதுக்குளம், முதலியார்குளம், மேல கருங்குளம் போன்ற குளங்கள் நிரம்பி அஞ்சுகிராமம் கடைவரம்பு பகுதி விவசாய நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் கன்னிப் பூ சாகுபடியினை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி உடனடியாக நிலப்பாறை கால்வாயில் தண்ணீரை திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×