ராதாபுரத்தில் 11-ந்தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

கூட்டத்தில் மீனவர்கள், மீனவ அமைப்புகள் கலந்து கொண்டு மனுக்களை நேரில் வழங்கலாம்.கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.
ராதாபுரத்தில் 11-ந்தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ராதாபுரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 11-ந் தேதி காலை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறை களால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தே வைகள் அடங்கிய மனுக்களை மீனவர்கள், மீனவ அமை ப்புகள் கலந்து கொண்டு நேரில் வழங்கலாம்.

மேலும் அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரி யாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர் களுக்கு அனுப்பி நட வடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரம் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரி விக்கப்படும்.

எனவே கோரிக்கைகள் உள்ள மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கூட்ட த்தில் கலந்து கொண்டு மனுக்கள் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com