search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "purchase"

    • கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.
    • கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலைக்கு கரும்பு கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.நடப்பாண்டு கரும்பு பதிவு அதிகரித்து ஆலை அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது. ஆனால் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து குறித்த நேரத்தில் கரும்பு கொள்முதல் செய்யாதது, முன்னுரிமை பட்டியல்படி வெட்டு ஆட்கள் அனுப்பாமல், பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரெட்டிபாளையம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் பல்வேறு குளறுபடிகளால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.கரும்பு வெட்டுவதற்கான முன்னுரிமை பட்டியலை பின்பற்றாமல், கவனிப்பு அடிப்படையில் கரும்பை கொள்முதல் செய்தனர்.

    இதனால் சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களில் குறித்த நேரத்தில் அறுவடை செய்யாமல் கரும்பு சக்கையாக மாறியது.வெளியிலும் விற்க முடியாமல் ஓராண்டு உழைத்து வளர்த்த கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மீதான நம்பிக்கையையும் இழந்துள்ளோம்.இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கொமரலிங்கம் கரும்பு கட்டுப்பாட்டு பகுதியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • பாக்கெட்டுகளில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரும் முறை அமல்படுத்துவதாக உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • வாணிப கழகம் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்குமான சிறப்பான சேவையை செய்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க மாநில பொதுச் செயலா ளர் சந்திரகுமார் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமைதூக்கும் பணிகள் மற்றும் திறந்த வெளி சேமிப்பு நிலைய வேலைகளுக்கு டெண்டர் விடப்பட்டு பல இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் எடுத்துள்ளனர்.

    சமீபத்தில் தஞ்சைக்கு வருகை தந்த உணவு அமைச்சர் அர. சக்கரபாணி அரசு நவீன அரிசிஆலையில் தனியாரை பயன்படுத்தி அரைவை செய்துபாக்கெ ட்டுகளில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரும் முறை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். அதேபோல திறந்த வெளி சேமிப்பு நிலைய ங்கள் அனைத்து பொறுப்பு களையும் தனியாருக்கு விட்டு லாரி மூலம் ஏற்றி செல்வது, சேமிப்பது, பாதுகாப்பது, தார்ப்பாய் போடுவது, பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது என அனைத்து பொறுப்புகளும் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவ டிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    நேரடியாக சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர்களை வெளியேற்றுவதுஅல்லது தற்போது பெறுகின்ற கூலியை விட குறைந்த கூலியில் ஒப்பந்தக்கா ரர்களுக்கு அடிமைகளாக பணிபுரிய செய்வது என்பது ஏற்கத்தக்கது அல்ல. நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளுக்கும், பொதும க்களுக்குமான சிறப்பான சேவையை செய்து வருகிறது. அரசு நெல் கொள்முதலிலும் பொது விநியோக முறை செயல்படுத்துவதிலும் இந்தியாவிலேயே முன்மா திரி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு நுகர்பொரு ள்வாணிபக் கழகத்தை தனியார்மயமா க்கும் நடவடி க்கையை மேற்கொண்டு வருவது வருந்ததக்கது. எனவே இந்த முடிவை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வருகிற 24ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூரில் விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படுகிறது
    • இக்கொள் முதல் மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனைக்குழுவில் செயல்படும் சத்தியமங்கலம், அவல்பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட வுள்ள கொப்பரையானது அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ பந்து கொப்பரை ரூ.110 மற்றும் அரவை கொப்பரை ரூ.105.90 வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த ப்படும்.

    எனவே இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார்அ ட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் சத்திய மங்க லம், அவல்பூ ந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்க ப்படுகிறது.

    இக்கொள் முதல் திட்டத்தில் ஈரோடு மாவட்ட த்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூர், அரியலூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    பெரம்பலூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ்தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக கூட்டம் அலைமோதுகிறது.

    பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தரைக் கடைகளாக ஜவுளிக்கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி... விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது. தீபாவளி பண்டிகைக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு பொருட்களை வாங்கி செல்கின்றனர். வெளியூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்பவர்கள் தீபாவளிக்காக முன்னதாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு செல்வதால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பெரம்பலூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் அரியலூர் புதுமார்க்கெட் வீதி, எம்.பி.கோவில் தெரு, சின்னகடை தெரு, பெரியகடை தெரு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஜவுளி எடுப்பதற்காகவும், தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கடைவீதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்டு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். 
    ×