search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்புகள்"

    • மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு மற்றும் கொட்டாம்பட்டி ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் தான் இனிப்பு கரும்பு பயிரிடப்படுகிறது.
    • தமிழக அரசு பொங்கல் பண்டிகை தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    உலக அளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தையும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. இந்திய அளவில், உத்தரபிரதேசம் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மகாராஷ்டிராவும், 3-வது இடத்தில் கர்நாடகமும், 4-வது இடத்தில் தமிழகமும் இருக்கிறது. கரும்பை பொறுத்தவரை சர்க்கரை ஆலை மற்றும் ஜூஸ்-க்கு பயன்படுத்தும் கரும்பு ஒரு ரகமும், நேரிடையாக சாப்பிடுவதற்கு பயன்படும் சர்க்கரை கரும்பு ஒரு ரகமும் பயிரிடப்படுகின்றன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயார் செய்யப்படும் கரும்பு உற்பத்தியில் மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்து உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் ஆலைக்கு செல்லும் கரும்பு சுமார் 1,600 ஏக்கரிலும், இனிப்பு கரும்பு 960 ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளது. அதில் இனிப்பு கரும்பு தற்போது முழு அளவில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த இனிப்பு கரும்பு ஒரு ஏக்கருக்கு குறைந்தது 21 ஆயிரமும், அதிகபட்சமாக 23 ஆயிரமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு மற்றும் கொட்டாம்பட்டி ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் தான் இனிப்பு கரும்பு பயிரிடப்படுகிறது. அதில் சிறப்பம்சம் என்னவென்றால் மதுரை கிழக்கு மற்றும் மேலூரின் சில பகுதிகளில் மட்டும் தான் பெரியாறு பாசன வாய்க்கால் தண்ணீர் கிடைக்கிறது. மேலும் அங்குள்ள இதர பகுதிகள் மற்றும் கொட்டாம்பட்டியில் கிணற்று பாசனம் மூலமே கரும்பு விவசாயம் நடக்கிறது. கடந்த ஆண்டு மழை பொழிவு இருந்ததால் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் கரும்புகள் முழு அளவில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

    இதற்கிடையில் தமிழக அரசு பொங்கல் பண்டிகை தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் கரும்பு கொள்முதல் பணிக்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. கூட்டுறவு துறை மூலம் கரும்பு கொள்முதல் பணி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக மாவட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகளின் எண்ணிக்கை மற்றும் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி மாவட்டத்தில் 2 கோடியே 35 லட்சம் இனிப்பு கரும்புகள் பொங்கல் பண்டிகை அறுவடைக்கு தயாராக இருக்கிறது என கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு 9 லட்சத்து 33 ஆயிரம் கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் அதிக அளவில் உற்பத்தி இருப்பதால் ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி உள்பட பிற மாவட்டங்களில் இருந்து மதுரையில் இருந்து கொள்முதல் செய்ய அந்தந்த மாவட்ட கூட்டுறவு துறையினர் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கி உள்ளனர்.

    தமிழகத்தில் மதுரைக்கு அடுத்தப்படியாக கடலூர் மாவட்டத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட இனிப்பு கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

    • கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.
    • கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலைக்கு கரும்பு கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.நடப்பாண்டு கரும்பு பதிவு அதிகரித்து ஆலை அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது. ஆனால் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து குறித்த நேரத்தில் கரும்பு கொள்முதல் செய்யாதது, முன்னுரிமை பட்டியல்படி வெட்டு ஆட்கள் அனுப்பாமல், பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரெட்டிபாளையம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் பல்வேறு குளறுபடிகளால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.கரும்பு வெட்டுவதற்கான முன்னுரிமை பட்டியலை பின்பற்றாமல், கவனிப்பு அடிப்படையில் கரும்பை கொள்முதல் செய்தனர்.

    இதனால் சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களில் குறித்த நேரத்தில் அறுவடை செய்யாமல் கரும்பு சக்கையாக மாறியது.வெளியிலும் விற்க முடியாமல் ஓராண்டு உழைத்து வளர்த்த கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மீதான நம்பிக்கையையும் இழந்துள்ளோம்.இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கொமரலிங்கம் கரும்பு கட்டுப்பாட்டு பகுதியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×