search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public impact"

    குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    முசிறி:

    கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் 2 மணி நேரமும், இரவு, நள்ளிரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால்  காலாண்டு தேர்வுக்கு பள்ளி மாணவ- மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

    நள்ளிரவு 1 மணிக்குமேல் மின்தடை ஏற்படுவதால் வயது முதிர்ந்தோர், உடல்நலம் குன்றியோர் மிகுந்த பாதிப்படைகின்றனர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் மின்சாரத்தை தடைச்செய்யகூடாது. மீறி தடை செய்தால் போராட்டத்தில் இறங்குவோம் என  தெரிவித்துள்ளனர்.
    நாகர்கோவிலில் கோடைகாலம் போல இப்போதே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு அதிக அளவு நீர்வரத்து இருந்தது. மேலும் குளம் போன்ற நீர்நிலைகளும் பெரும்பாலும் நிரம்பி விட்டன.

    இந்த நிலையில் படிப்படியாக மழை குறைந்து வந்தது. தற்போது கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் மழை பெய்யாத சூழ்நிலை உள்ளது. மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் போல வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் காலை நேரத்திலேயே உச்சிநேரம் போல வெயில் கொளுத்துகிறது. இன்றும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    அதிக வெயில் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துவிட்டது. அத்தியாவசிய பணிக்காக வெளியில் செல்பவர்கள் குடை பிடித்த படி சென்றனர். மேலும் சாலையோரங்களில் வெப்பத்தை தணிக்கும் வகையில் பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே உருவாகி உள்ளன. ஆரஞ்சு பழம் மற்றும் மாதுளம் பழச்சாறுகள் அதிகளவு இந்த கடைகளில் விற்கப்படுகிறது. இதே போல கரும்புச்சாறு, குளிர்பான கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆங்காங்கே நுங்குகளும் குவித்து விற்பனை செய்யப்படுகிறது.

    இளநீர் விற்பனையும் அதி அளவு நடைபெறுகிறது. ஒரு இளநீர் சராசரியாக ரூ.40 வரை விற்பனை ஆகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீரை அதிகம் குடித்து வருகிறார்கள். கோடைகாலம் போல இப்போதே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
    வால்பாறை பகுதியில் எஸ்டேட் மற்றும் குடியிருப்புகளில் மண் சரிவு -விரிசல் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்புவரை கனமழை பெய்தது. தற்போது மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

    மழைகாரணமாக ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி வடியத் தொடங்கி வருவதால் பல இடங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் மண்சரிவும் , பூமியில் விரிசல்கள் ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி, நடுமலை,சோலையார்,கருமலை,உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மண்சரிவும் பூமி விரிசலும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் எஸ்டேட் நிர்வாகங்கள் பாதுகாப்பு நலன் கருதி தொழிலாளர்களை தேயிலை இலை பறிக்கும் பணிக்கு அனுப்பவில்லை. அய்யர்பாடி, சோலையார் எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எஸ்டேட் நிர்வாகங்கள் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேறு பகுதிகளில் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, விரிசலை சிலர் நிலநடுக்கம் என நினைத்து பீதியில் உள்ளனர்.

    கும்பகோணம் அருகே கரிக்குளம் பகுதியில் குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிவதால் 2-வது நாளாக தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கரிக்குளம் பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் உரக்கிடங்கு 50 ஏக்கரில் அமைந்துள்ளது. மேலும் 25 ஏக்கரில் உரமும், பிளாஸ்டிக் குப்பைகளும் பிரித்து மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அங்கு பிரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியைச் சுற்றிலும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவிடை மருதூர் மற்றும் கும்பகோணம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்க போராடி முயன்றனர். இரவு நேரம் என்பதால் தீ பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மூச்சு திணறல் மற்றும் துர்நாற்றத்தினால் அவதிபட்டனர்.

    குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிவதால் 2-வது நாளாக இன்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.

    புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு 3-வது வாரம் தொடங்கி விட்ட நிலையிலும் இதுவரை காற்று வீசவில்லை.

    அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலில் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருகிறது.

    இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் புதுவை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    முதுகுளத்தூரில் அறிவிக்கபடாத மின்தடை அரைமணிக்கு ஒருமுறை அமல்படுத்தபடுவதால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கபட்டுள்ளனர்.

    முதுகுளத்தூர்:

    கமுதி உப மின் நிலையத்தில் இருந்து முதுகுளத்தூர், அபிராமம், கடலாடி, சாயல்குடி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யபடுகிறது. கமுதியில் இருந்து முதுகுளத்தூருக்கு வரும் மின் வழிப்பாதைகள் கண்மாய்கள், ரோட்டோரங்கள், வயல்வெளிகளில் அமைக்கபட்டுள்ளதால், சிறு காற்றடித்தாலே மின் வயர்கள் பழுதாகி, அடிக்கடி மின் வினியோகம் துண்டிக்கபடுகிறது.

    இதனால் அரைமணிக்கு ஒருமுறை மின்வெட்டு அமல் படுத்தபட்டு பொதுமக்கள், குழந்தைகள் வீடுகளில் தங்க முடியாமலும், மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சாயல்குடி,கடலாடி, பெருநாழி, முதுகுளத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை தான் உப மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் இந்த மாதம் எந்த வித அறிவிப்புமின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

    அரசு அலுவலகங்களில் வேலைகள் பாதிக்கப்பட்டனர். சரியாக அறிவித்த பின் மின்சாரம் நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    கிருஷ்ணகிரியில் நாள்தோறும் 4 மணி நேரம் வரையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மின் வெட்டு காணப்படுகிறது. நாள்தோறும் 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக லேசான இடி-மின்னல் இருந்தால் கூட தொடர்ச்சியாக 2 முதல் 3 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நேற்று மட்டும் காலை முதல் இரவு வரையில் 10 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதில் 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மாதம் ஒரு முறை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் மின்சாரம் நிறுத்துகிறார்கள். இது மட்டுமல்லாமல் அடிக்கடி பழுதான மின்கம்பங்கள் மாற்றுவதாகவும், மின்சார வயர்கள் மாற்றுவதாகவும் கூறி மின்சாரத்தை நிறுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் சிறிய மழை, இடி-மின்னலுக்கு கூட மின்சாரம் உடனடியாக நிறுத்தப்படுகிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள். மேலும் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டாலும் யாரும் போனை எடுப்பதில்லை. தொடர் மின் வெட்டால் குழந்தைகள், வயதான முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    திருவாடானை பகுதியில் உள்ள 50 கிராமங்களில் முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    தொண்டி:

    திருவாடானை தென் பகுதியில் உள்ள அரும்பூர், ஆதியூர், குளத்தூர், திருவெற்றியூர், விளக்குடி, புலிக்கொடி, பகவதி மங்கலம் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொண்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த கிராமங்களில் 20 நாட்களுக்கு மேலாக பகலில் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இரவு நேரத்திலும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. முன்னறிவிப்புமின்றி மின்தடை செய்யப்படுவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்படுகின்றனர்.

    மேலும் திருவெற்றியூரானது முக்கியமான பாகம் பிரியாள் கோவில் உள்ளதால் வணிகதலமாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரும் முக்கியமான ஆன்மீக தலமாகவும் உள்ளது.

    இந்தப்பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுகிறது. பகலில் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் குடிதண்ணீர் மோட்டார்களை இயக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    வீடுகளில் மின்விசிறிகள் இயங்காமல் குழந்தைகள் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.

    நகரங்களை விட கிராமங்களில் மின்தடை சற்று அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பகல் முழுவதும் தடை செய்வது மின்வாரியத்தின் மோசமான நடவடிக்கை ஆகும்.

    மின்தடை செய்யும்போது கிராமங்களுக்குள் பாகு பாடில்லாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக நேரம் செயற்கையாக மின்தடை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

    எனவே மாவட்ட அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்து முன்னறிவிப்போடு மின் தடைசெய்ய வேண்டும் என கிராம மக்கள் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூரில் இ-சேவை மைய இணையதளம் முடக்கத்தால் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    பொதுமக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடலூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். இதேபோல் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையமும் இங்கு இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விளக்கம் கேட்டால் இ-சேவை மைய இணையதள சேவை சரிவர செயல்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர். இதை அறியாத பொதுமக்கள் தினமும் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் வாரக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து உயர்கல்வி படிப்பதற்காக மாணவர்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இ-சேவை மைய இணையதள சேவை முடக்கம் காரணமாக சான்றிதழ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ×