search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protesting"

    தஞ்சை ஆர்.எம்.எச். சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு 3 வங்கிகளின் இணைப்பை கைவிடக்கோரி தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆர்.எம்.எச். சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு 3 வங்கிகளின் இணைப்பை கைவிடக்கோரி தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு  சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். 

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகள் இணைப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.  வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு வங்கிகளை பொதுவுடமை ஆக்குவதை கைவிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி குருநாதன், அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரி சங்க நிர்வாகி மோகனசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 3500 வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உடுமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து அமராவதி நகர், சாயப்பட்டறை உட்பட பல கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட கிடையாது. குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டை கூட ஊராட்சி நிர்வாகத்தினர் வீட்டு மனைகளாக மாற்றி விட்டனர். இதனால் சுடுகாட்டிற்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள சுடுகாட்டை மீட்டு தர வேண்டும், குடிநீர் பிரச்சனை, இலவச வீட்டுமனை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை தாசில்தார் அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் வருவாய் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் தாசில்தார் தங்கவேலுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மூர்த்தி, பால் நாராயணணன் வக்கீல் சாதிக்பாட்ஷா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. #TipuJayanti #KarnatakaBJP #BJPProtest
    மடிகேரி:

    கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  

    தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை  சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த எதிர்ப்பையும் மீறி இன்று திப்பு ஜெயந்தி விழா பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மடிகேரியில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஷ்வரா ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த போராட்டக்குழுவினர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். திப்பு ஜெயந்திக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். #TipuJayanti #KarnatakaBJP #BJPProtest
    சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
    சென்னை:

    பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான  ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.



    இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்நிலையில், போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசுவதாக கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச உள்ளதாகவும் கூறினார்.

    எம்.எல்.ஏ.க்களுக்கு மாமூல் கொடுத்து ஆட்சியை தக்க வைப்பதில் அ.தி.மு.க. அரசு தீவிரமாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
    ×