search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "planting"

    • குறுங்காடு வளா்ப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 4 ஆயிரத்து 250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு முறையாக பராமாிக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் ப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பொட்டபாளையம் ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து, முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு அதனை முறையாக பராமாிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டு களுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலா்களின் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 2020-21-ம் ஆண்டு மற்றும் 2021-22-ம் ஆண்டிற்கு குறுங்காடு வளா்ப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி பொட்டபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2022-23-ன் கீழ் சுமார் 3½ ஏக்கா் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு மரக்கன்று வகைகளான வேம்பு 150 எண்ணிக்கையும், புங்கை 200 எண்ணிக்கையும், பூவரசு 150 எண்ணிக்கையும், தேக்கு 100 எண்ணிக்கையும், மூங்கில் 100 எண்ணிக்கையும், நிலவாகை 100 எண்ணிக்கையும், வாகை 100 எண்ணிக்கை என மொத்தம் 900 எண்ணிக்கை கொண்ட குறுங்காடு அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    முக்குடி ஊராட்சியில். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2021-22-ம் ஆண்டில் குறுங்காடு வளா்ப்பதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு, கொய்யா, மா, தென்னை, வேம்பு, புளி, வாழை, மூங்கில், முருங்கை, சப்போட்டா, தேக்கு உள்ளிட்ட 20 வகையான சுமார் 4 ஆயிரத்து 250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு முறையாக பராமாிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமார், உதவிப் பொறியாளா்கள் தமிழரசி, தேவிகா, ப்புவனம் வட்்டார வளா்்ச்சி அலுவலா்கள் அங்கயங்கண்ணி (வ.ஊ.), ராஜசேகரன் (கி.ஊ), ஒன்றியப்பணி மேற்பார்வையாளா் செல்வம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • 10 நிமிடத்தில் 400 மரக்கன்று நடும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
    • ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    பசுமை தமிழக இயக்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து மாவட்டத்தினை பசுமையானதாக ஆக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் 10 நிமிடத்தில் 20 ஆயிரம் நாட்டுவகை மரக்கன்றுகள் நடும்விழா மாவட்டம் முழுவதும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 200 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் முனியாண்டி தலைமையிலும், காளாப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜு தலைமையிலும், செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் நடந்தது.

    இதில் வேம்பு, புளி, பூவரசு, மா, நெல்லி, புங்கை, மகோகனி, நீர்மருது போன்ற நாட்டுவகை மரக்கன்றுகள் 10 நிமிடத்திற்குள் 400 மரக்கன்கள் நடவு செய்து சாதனை புரிந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜு, தலைமை ஆசிரியர்கள் சுபா, முனியாண்டி, ரமேஷ் மற்றும் ஒன்றிய துணைச்சேர்மன் சரண்யா ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தம்மாள், அகிலா கண்ணன், ரமேஷ், மகேஷ் கிராம நிர்வாக அலுவலர் அருண், உதவியாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    • செக்காரக்குடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கிளிகவுண்டர்குளம், செக்காரக்குடி மேலக்குளம் ஆகிய குளங்களில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சுமார் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் மூலமாக பனை விதை நடும் பணி நடந்தது.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கிளிகவுண்டர்குளம், செக்காரக்குடி மேலக்குளம் ஆகிய குளங்களில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சுமார் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி தலைமை தரங்கினார். ஸ்டாமின் குடுமியான்மலை இயக்குநர் சங்கரலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் மூலமாக பனை விதை நடும் பணி நடந்தது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் ஜெயசெல்வின் இன்பராஜ், வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் பழனிவேலாயுதம், கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன், துணை வேளாண்மை அலுவலர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் செய்திருந்தார்.

    • தெற்குத்தரவை ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குத்தரவை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெற்குத்தரவை ஊராட்சியில் அம்மன் கோவில் ஊரணி மற்றும் வைரவன் கோவில் பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தெற்குத்தரவை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் அனைத்து துறையின் திட்டங்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதை பார்வையிட்டு, ஊராட்சி யின் வளர்ச்சிக்காக இத்தகைய திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். பின்னர் ஊரக வளர்ச்சித் துறை, குழந்தைகள் வளர்ச்சித்துறை, மீன்வளத் துறை, வேளாண்மை துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மூலம் 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
    • பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் பாலகிருஷ்ணன் தொகுப்புரை ஆற்றினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.

    அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள் அருணாசலம், முத்துச்சாமி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் பாலகிருஷ்ணன் தொகுப்புரை ஆற்றினார். பள்ளி தலைமையாசிரியர் சுந்தரகுமார் வரவேற்றார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும்,கண் தான மாவட்ட தலைவருமாகிய கே.ஆர்.பி.இளங்கோ மரக்கன்று நட்டு கண்தான விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.

    உதவி தலைமை ஆசிரியை மாணிக்கசுந்தரி நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை ஓவிய ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகரில் 7 நாட்களில் 5 ஆயிரம் பனைமர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டனர்.
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேசம் காப்போம் என்ற பெயரில் 1 லட்சம் பனைமர விதைகள் நடும் பணி கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கியது. 

    திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 17-ந்தேதி பழைய சுற்றுலா மாளிகை காலனி அருகில் இதன் தொடக்க  விழா மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கே.என்.அருள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதி வாரியாக நடைபெற்றது. ஏர்போர்ட், ஜங்ஷன், தில்லைநகர், ஸ்ரீரங்கம், பாலக்கரை என அனைத்து பகுதிகளிலும் சாலையோ ரங்கள், வாய்க்கால் ஓரங்களில் பனைமர விதைகள் நடப்பட்டன. 7-வது நாளாக 25-ந்தேதி மலைக்கோட்டை பகுதியில் திருச்சி மாநகர் இலக்கான 5 ஆயிரம் பனைமர விதை நடும் இலக்கு எட்டப்பட்டது. 

    மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை தலைவர்  ந.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள், அச்சு ஊடக மைய பிரிவு துணை செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட பொருளா ளர் சந்தனமொழி, தொகுதி செயலாளர் கனியமுதன் மற்றும்நிர்வாகிகள் லாரன்ஸ், வெற்றிச்செல்வன், ஆல்பர்ட், பன்னீர் செல்வம், காந்திமார்க்கெட் செல்வக் குமார், முடியரசு, ராஜா, ராதா, குணா, ஜான்,தங்கராஜ், முருகன், செந்தில், இருசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    காவிரி ஆற்றின் கரைகளில் நடப்படும் இந்த பனைமர விதைகள் எதிர்காலத்தில் வெள்ளக்காலங்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கும்  என நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த 7 நாட்களில் திருச்சி மாநகரில் 5 ஆயிரம் பனைமர விதைகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தெரிவித்தார்.
    ×