search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மாநகரில் 5 ஆயிரம் பனைமர விதைகளை நட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
    X

    திருச்சி மாநகரில் 5 ஆயிரம் பனைமர விதைகளை நட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

    திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகரில் 7 நாட்களில் 5 ஆயிரம் பனைமர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டனர்.
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேசம் காப்போம் என்ற பெயரில் 1 லட்சம் பனைமர விதைகள் நடும் பணி கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கியது. 

    திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 17-ந்தேதி பழைய சுற்றுலா மாளிகை காலனி அருகில் இதன் தொடக்க  விழா மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கே.என்.அருள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதி வாரியாக நடைபெற்றது. ஏர்போர்ட், ஜங்ஷன், தில்லைநகர், ஸ்ரீரங்கம், பாலக்கரை என அனைத்து பகுதிகளிலும் சாலையோ ரங்கள், வாய்க்கால் ஓரங்களில் பனைமர விதைகள் நடப்பட்டன. 7-வது நாளாக 25-ந்தேதி மலைக்கோட்டை பகுதியில் திருச்சி மாநகர் இலக்கான 5 ஆயிரம் பனைமர விதை நடும் இலக்கு எட்டப்பட்டது. 

    மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை தலைவர்  ந.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள், அச்சு ஊடக மைய பிரிவு துணை செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட பொருளா ளர் சந்தனமொழி, தொகுதி செயலாளர் கனியமுதன் மற்றும்நிர்வாகிகள் லாரன்ஸ், வெற்றிச்செல்வன், ஆல்பர்ட், பன்னீர் செல்வம், காந்திமார்க்கெட் செல்வக் குமார், முடியரசு, ராஜா, ராதா, குணா, ஜான்,தங்கராஜ், முருகன், செந்தில், இருசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    காவிரி ஆற்றின் கரைகளில் நடப்படும் இந்த பனைமர விதைகள் எதிர்காலத்தில் வெள்ளக்காலங்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கும்  என நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த 7 நாட்களில் திருச்சி மாநகரில் 5 ஆயிரம் பனைமர விதைகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தெரிவித்தார்.
    Next Story
    ×