search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol price hike"

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸ் அனுமுதி பெறாமல் கூட்டம் திரட்டியதால் திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று பந்த் நடந்தது.

    தமிழகத்தில் நடந்த பொது வேலைநிறுத்தத்தையொட்டி சென்னையில் சேப்பாக்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சி சார்பில் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டம் போலீஸ் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் திருவல்லிக்கேணி போலீசார் போராட்டத்தை நடத்திய காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    போலீஸ் அனுமதியின்றி திடீரென அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்திய திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 143, 188 மற்றும் சென்னை போலீஸ் சட்டப்பிரிவு 41 (6) ஆகிய மூன்று பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #PetrolDieselPriceHike
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பிரதமரை சந்தித்திருக்கின்றார். ஒரு சுமூகமான பேச்சுவார்த்தையை தமிழகத்துடன் நடத்திக் கொடுங்கள் என்று கேட்டிருக்கின்றார். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

    பதில்:- ஏற்கனவே தமிழக அரசால் தெளிவாக குறிப்பிடப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசினுடைய அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்டக்கூடாது என்று தெளிவான தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது.

    மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஏனென்றால், கடுமையான வறட்சி ஏற்பட்டபொழுது, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தும், குடிப்பதற்குக்கூட தண்ணீர் திறக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். அந்த நிலையில், மேலும் ஒரு அணை கட்டப்பட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

    கேள்வி:- பாலாறு அருகே அணைகள் கட்டப்பட்டு வருகிறது.

    பதில்:- சட்ட ரீதியாக நாம் சந்திக்கிறோம்.

    கேள்வி:- கடந்த காலங்களில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஒரு அமைச்சரைப் பற்றி குற்றச்சாட்டோ அல்லது ஒரு அதிகாரியைப் பற்றி குற்றச்சாட்டோ இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வார். சி.பி.ஐ. விசாரணை செய்தும் இதுவரை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் என்ன?


    பதில்:- குற்றச்சாட்டு சொன்னவுடன் அவர் குற்றவாளியாகிவிட முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

    கேள்வி:- குற்றச்சாட்டு வந்தவுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தாரே?

    பதில்:- அப்படி ஒன்றும் எடுத்த மாதிரி தெரியவில்லை. நானும் அமைச்சரவையில்தானே இருக்கிறேன்.

    பதில்:- நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேனே. இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மக்களிடத்திலே செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு, அதை பல்வேறு வழிகளிலே தடை செய்ய முற்பட்டார்கள், எதிலும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. ஆகவே, இப்படிப்பட்ட ஒரு வழியைப் பின்பற்றி ஒரு குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள், அது உண்மையல்ல.

    ஆகவே, அம்மாவினுடைய அரசு சட்ட ரீதியாக அனைத்தையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்தத் துறையிலும் தவறு நடந்துள்ளதாக எங்களுக்குப் புகார் வரவில்லை. அரசைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவியிருந்தன. அவையெல்லாம் இனி வெளியிலே வரும்.

    கேள்வி:- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு இப்பொழுதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பணம் கொடுத்திருப்பதாக...

    பதில்:- பணம் கொடுத்தது என்பது தவறான செய்தி. ஒரு தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். அப்படிப்பட்ட நிலைமையில் எங்களுடைய கழகம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி:- வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறும் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார்.

    பதில்:- அது அவர்களுடைய நிலைப்பாடு. தமிழகத்தைப் பற்றித்தான் பேசமுடியும். அகில இந்திய அளவில் நம்முடைய கட்சி இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக, புரட்சித் தலைவி அம்மா கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றார். அந்த அளவிற்கு, இப்பொழுதும், கழகத்தினுடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    கேள்வி:- ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் நீங்கள் முதல் தேர்தலை சந்திக்கப் போகின்றீர்கள், எதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வீர்கள்?


    பதில்:- எம்.ஜி.ஆர், அம்மா இருபெரும் தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். தமிழகத்திலே இன்னும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று சொன்னால், மத்திய அரசினுடைய உதவி தேவை, நிதி தேவை.

    ஆகவே, யார் எங்களுக்கு நிதி உதவி செய்கின்றார்களோ, உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கு அம்மாவினுடைய அரசு நிச்சயம் துணை நிற்கும். அதை முன்னிறுத்தி எங்களுடைய செயல்பாடு இருக்கும்.

    புரட்சித் தலைவி அம்மா கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற காரணத்தினால்தான், காவிரி நதிநீர் பிரச்சினை வருகின்றபொழுது, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 23 நாட்கள், நாடாளுமன்ற அவையை செயல்பட முடியாத அளவிற்கு உருவாக்கினார்கள். ஆகவே, பலம் பொருந்திய கட்சியாக இருந்த காரணத்தினாலே, அதிக எண்ணிக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற காரணத்தினாலே, நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கச் செய்தோம். அதன் மூலமாக நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெற்றது.

    கேள்வி:- மதிப்புக் கூட்டு வரியை (வாட்) தமிழகம் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ஏனென்றால் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.


    பதில்:- அதை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். மாநில அரசு எப்படி குறைக்க முடியும்? மத்திய அரசுதான் உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசு உயர்த்தவில்லை. இன்றைக்கு மாநிலத்தின் நிதி உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

    தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்குவதுதான் மாநில அரசினுடைய நிலை. அப்படி நிதி ஆதாரத்தைப் பெருக்கினால்தான் துறையில் இருக்கின்ற திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும். போக்குவரத்துக் கழகத்தில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால், அதற்குத் தேவையான நிதி தேவைப்படுகின்றது. இருந்தாலும், நீங்கள் வைக்கின்ற கோரிக்கைகளை எல்லாம் அரசு சிந்திக்கும்.

    கேள்வி:- பல்வேறு நிலைகளில் நீங்கள் மத்திய அரசோடு இணைந்து செயல்படுவதாக சொல்கிறீர்கள். ஆனால், தம்பித்துரை சி.பி.ஐ. சோதனைக்கு மத்திய அரசுதான் காரணம் என்கிறாரே?

    பதில்:- அது அவருடைய கருத்தாக இருக்கலாம், அரசாங்கத்தினுடைய கருத்தல்ல. அரசாங்கத்தைப் பொறுத்தவரைக்கும், மத்திய அரசோடு இணக்கமான உறவிருந்தால் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். தேவையான நிதியைப் பெற்று, போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami #ADMK #TaxOnPetrolDiesel #PetrolDieselPriceHike
    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசு அதிகரித்து 1 லிட்டர் பெட்ரோல் ரூ.83.54-க்கு விற்கப்படுகிறது. #PetrolPriceHike
    சென்னை:

    பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை மிகவும் அதிகரித்து உச்சத்தை எட்டி வருகிறது.

    கடந்த 5-ந்தேதி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.82.51-க்கு விற்கப்பட்டது.  நேற்று லிட்டருக்கு 10 காசு உயர்ந்து ரூ.82.62-க்கு விற்கப்பட்டது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசு அதிகரித்து ரூ.83.13-க்கு விற்றது.  

    இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசு அதிகரித்துள்ளது. இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.83.54-க்கு விற்கப்படுகிறது.



    இதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்தபடி  உள்ளது. கடந்த 3-ந்தேதி 1 லிட்டர் டீசல் ரூ.75.19-க்கு விற்கப்பட்டது. 4-ந்தேதி 20 காசு அதிகரித்துள்ளது. ரூ.75.39 ஆக உயர்ந்தது. 5-ந்தேதி அதே விலையில் நீடித்தது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61-க்கு விற்கப்பட்டது. நேற்று 56 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கு விற்கப்பட்டது. இன்று லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.76.64-க்கு விற்கப்படுகிறது. #PetrolPriceHike
    மத்திய அரசின் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தஞ்சை ரெயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தஞ்சை ரெயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் யாதவ கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    மாநகர் மாவட்ட செயலாளர் அலாவுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராம்பிரசாத், ராஜமார்த்தாண்டன், மாநகர பிரதிநிதி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், முத்து கிருஷ்ணன், ரமேஷ், இஸ்மாயில், கண்டபிள்ளை, சதா, வெங்கட்ராமன், சீனிவாசன், திருவையாறு பூபதி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. #pertolprice #petrolexport #Congress

    புதுடெல்லி:

    பெட்ரோல்- டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன.

    விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கச்சா எண்ணை விலையில் பெரிய மாற்றம் இல்லாத போதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு இந்திய பண மதிப்பு வீழ்ச்சிதான் காரணம் என கூறப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இது சம்பந்தமாக நாளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தை காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல், பொறுப்பாளர் அசோக் கெலாட் ஆகியோர் நடத்துகிறார்கள். இதில் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

    மேலும் அனைத்து மாநில காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கும் கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதில், எந்த மாதிரி போராட்டம் நடத்துவது என்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    மேலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்தும் திட்டம் காங்கிரசிடம் உள்ளது.

    இதற்காக தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து போராட்டத்தை நடத்தலாம் என ஆலோசித்து வருகிறார்கள். நாளை இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் கூறும் போது, தற்போதைய கச்சா எண்ணெய் விலையை வைத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 39 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.35.50-க்கும் விற்க முடியும். ஆனால், 80 ரூபாயை தாண்டி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் எண்ணெய் நிறுவனங்களிடம் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் லாப தொகை இருப்பு உள்ளது. ஆனாலும், விலையை உயர்த்துகிறார்கள் என்றனர்.


    காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ்திவாரி கூறும் போது, 2008-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 138 டாலராக உயர்ந்து இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த நாங்கள் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 3 ரூபாயும் உயர்த்தினோம்.

    ஆனால், அதை பொருளாதார பயங்கரவாதம் என்று பாரதய ஜனதா கட்சி விமர்சித்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலை யிலும் 80 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயித்து இருக்கிறார்கள்.

    அப்படியானால் பாரதிய ஜனதா கட்சிதான் மக்கள் மீது பொருளாதார பயங்கரவாதத்தை ஏவி விட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி பெட்ரோல்- டீசல் விலையை 2 மடங்கு உயர்த்தி விற்பனை செய்கிறது. இந்த விலையை குறைக்காவிட்டால் நாங்கள் பெரும் போராட்டத்தை நடத்துவோம். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடுவதற்கு இன்னும் 16 ரூபாய்தான் பாக்கி உள்ளது. இன்னும் 7 மாதம் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்க போகிறது. அதற்குள் 100 ரூபாயை எட்டி விடுவார்கள்.

    இந்த விலை உயர்வால் விவசாயிகள், சிறு வணிகர்கள், நகர மக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார். #pertolprice #petrolexport #Congress

    பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. #petrol #diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்ததை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்தபடி உள்ளது.

    இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் எண்ணை உற்பத்தியும், ஏற்றுமதியும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. இதுவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இதனால் பெட்ரோலியம் பொருட்கள் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சற்று அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது.

    இன்று (செவ்வாய்க் கிழமை) 17-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலையில் 17 காசு அதிகரிக்கப்பட்டது.

    டீசல் விலையில் 15 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (காலை 6 மணி) முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.43 ஆக இருந்தது. ஒரு லிட்டர் டீசல் 73.18 காசுக்கு விற்கப்பட்டது.

    பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசுகளும் வரி விதிப்பதால் , அவற்றின் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அந்த வகையில் இந்தியாவில் மும்பையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.24க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை ரூ.73.79 ஆக உள்ளது.

    தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.78.43 ஆகவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.31 ஆகவும் உள்ளன. தினமும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை முடிவுக்கு கொண்டுவர விரைவில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.#petrol #diesel
    ×