search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PDP"

    ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியுடனான கூட்டணியை பா.ஜ.க வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, காஷ்மீரை விட்டு பா.ஜ.க வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர். #BJPDumpsPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக இன்று பா.ஜ.க எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதல்மந்திரி மெகபூபா முப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். இதனால், அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில், பா.ஜ.க காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க ஆதரவு பெற்ற ஆட்சியின் முதல் நாளில் இருந்தே காஷ்மீர் மக்கள் நிம்மதியுடன் இல்லை எனவும், பா.ஜ.க ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். #BJPDumpsPDP
    ஜம்மு காஷ்மீரில் பிடிபி உடனான உறவை முறித்துள்ள பாஜக, கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்களை எடுத்துக் கூறியுள்ளது. #BJPDumpsPDP
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி அமைத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்த நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது. இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம், வன்முறை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் அங்கு ஆபத்தில் உள்ளது. சமீபத்தில், பத்திரிகை ஆசிரியர் புகாரி கொல்லப்பட்டது அதற்கு எடுத்துக்காட்டான ஒன்று. காஷ்மீருக்காக மத்திய அரசு அனைத்தையும் செய்தது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறலை தடுத்து நிறுத்த நாங்கள் முயன்றோம். ஆனால், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற பிடிபி முயற்சிக்கவில்லை.

    ஜம்மு லடாக் பகுதியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் பாஜக தலைவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 


    முப்தி முகம்மது சயீத் உடன் மோடி

    இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை கருதியும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒன்றினைந்த பகுதிதான் என்பதை நிலைநாட்டவும், அங்குள்ள நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு அதிகாரத்தை கவர்னரிடம் ஒப்படைக்க பாஜக தீர்மானித்துள்ளது.

    கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் எங்களது நடவடிக்கை தொடரும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பாஜக, இன்று கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. #Kashmir #BJPDumpsPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிடிபி கட்சி - பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. பிடிபி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த நிர்மல் சிங் பொறுப்பேற்றார். முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் தொடர்பாக அம்மாநில கட்சி தலைவர், பாஜக மந்திரிகளுடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக்கு பின்னர், அக்கட்சியில் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீரில் பிடிபி கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக விலகுவதாக அவர் அறிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் அம்மாநிலத்தில் ஆட்சி கலையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    87 இடங்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான 44 இடங்கள் யாருக்கும் இல்லை. பிடிபி 28 இடங்கள், பாஜக 25 இடங்கள், தேசிய மாநாட்டுக்கட்சி 15 இடங்கள், காங்கிரஸ் 12 மற்றும் இதர கட்சிகள் 7 இடங்களை வைத்துள்ளன.
    காங்கிரஸ் - மஜத கூட்டணி புனிதமில்லாதது என பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில், காஷ்மிரில் பாஜக-பிடிபி கூட்டணி மட்டும் புனிதமானதா? என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். #OmarAbdullah
    ஸ்ரீநகர்:

    கர்நாடகாவில் போதிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் எடியூரப்பா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணியை புனிதமில்லாத கூட்டணி என பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “எப்போதும் பாஜகவில் இருந்து ஒருவர் காங்கிரஸ் - மஜத கூட்டணி புனிதமில்லாதது என அழைக்கிறார். காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி எப்படிப்பட்டது என அவர்கள் (பாஜக) விளக்கமளித்தால் முன்னே கூறியது சரியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார். #OmarAbdullah
    ×