search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament election bjp"

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை (22-ந்தேதி) ராமநாதபுரம் வருகிறார். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கின்றார். #AmitShah #parliamentelection #bjp

    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடக்கிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    அமித்ஷா பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நட்டா, பியுஸ் கோயல், பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பகல் 11 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக ஹெலிபேட் திடலுக்கு வரும் அமித்ஷா அங்கிருந்து காரில் விழா திடலுக்கு செல்கிறார்.


    கூட்ட ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு பார்வையிட்டார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    மாநில துணைத் தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், செயலாளர் ஆத்மா கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். #AmitShah #parliamentelection #bjp

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் வலுவான கூட்டணியை உருவாக்க பா.ஜ.க.வின் உயர்மட்ட குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் பாமக, தேமுதிகவை இழுக்க முயற்சி நடக்கிறது. #parliamentelection #bjp #dmdk #pmk

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மாநில கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் முயற்சிகளில் தேசியக் கட்சிகளான பாரதீய ஜனதாவும், காங்கிரசும் ஈடுபட்டுள்ளன.

    பாரதீய ஜனதாவுக்கு எதிராக பெரும்பாலான மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து “மெகா கூட்டணி”யை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட சில கட்சிகளின் தயக்கம் காரணமாக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகுமா என்பதில் தெளிவில்லாத நிலை உள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக்கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சரத்யாதவ் கட்சி உள்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆம் ஆத்மி உள்பட சில கட்சிகள் காங்கிரஸ் அணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

    இதன் காரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பா.ஜ.க. அணியில் இருந்த சில முக்கிய கட்சிகள் விலகியுள்ளன. பா.ஜ.க. அணியில் உள்ள சில கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

    குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணியில் கருத்து வேறுபாடுகளும், உரசல்களும் நீடித்தப்படி உள்ளன. இதனால் மற்ற மாநிலங்களில் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் சேரும் என்று தெரிகிறது.

    இந்த கூட்டணி வலிமையாக இருப்பதால், அதற்கு சவால் விடும் வகையில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சில கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று தீர்மானித்து அந்த கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

    எனவே இந்த தடவையும் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க விரும்புவதாக மாநில பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை தெரிவித்துள்ளார்.


    பிரதமர் மோடி தலைமையை ஏற்க விரும்பும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று தமிழிசை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மிகவும் வலுவான கூட்டணியை உருவாக்க பா.ஜ.க.வின் உயர்மட்ட குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. விரைவில் கூட்டணி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பாரதீய ஜனதா சில மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டியது. ஆனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதை நன்கு உணர்ந்துள்ள பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கு பதில் பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் சில கட்சிகளை சேர்க்க தீவிரமாகியுள்ளது. இதற்காக பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்களுடன் பா.ஜ.க. தலைவர்கள் பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளனர்.


    பா.ம.க.வுக்கும், தே.மு.தி.மு.க.வுக்கும் அதிக தொகுதிகளை விட்டுத் தரும் வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இது பற்றிய தகவல்களை உறுதி செய்ய பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்கள் மறுத்து விட்டனர்.

    பா.ஜ.க.வின் இந்த முயற்சியைக் கண்டு அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து விட்டால் பாராளுமன்ற தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்டு விடுவோம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளையும் தங்கள் அணிக்குள் கொண்டு வர அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. தே.மு.தி.க.வுக்கும் 234 தொகுதிகளிலும் ஓரளவு வாக்குகள் இருக்கிறது.

    பா.ம.க. வட மாவட்டங்களில் நல்ல வலுவான வாக்கு வங்கியுடன் காணப்படுகிறது. எனவே அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மூன்றும் ஓரணியில் இணைந்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்ற வியூகம் முன் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணி உறுதியானால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தனிமையாகி விடும். இதனால் பா.ம.க., தே.மு.தி.க.வை வளைக்க பா.ஜ.க.வும் தீவிரமாக உள்ளது.

    பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளும் யார் பக்கம் சாய்வார்கள் என்பது தொகுதிகள் எண்ணிக்கையை பொருத்தே அமையும். இந்த நிலையில் ரஜினியின் ஆதரவை பெறவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த கூட்டணிகள் பற்றிய தெளிவான நிலை தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #parliamentelection #bjp #dmdk #pmk 

    ×