search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oonjal urchavam"

    • இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
    • இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்ததார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் கண்டருளி, இரவு 8 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடு, இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    மேலும் சந்திர கிரகணம் நாளான 8-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடை சாத்தப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்து இரவு 9 மணிக்கு ஊஞ்சல் கண்டருளல் நடைபெற்றது. பின்னர் இரவு 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைந்தார்.

    கடைசி நாளான நேற்று சாற்று மறையுடன் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்ந்தார். இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் கண்டருளல் சேவை நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு 9 மணி அளவில் தாயார் மண்டபத்தில் இருந்து பூ பல்லக்கில் புறப்பட்டு கோவிலை வலம் வந்தார். இரவு 10 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவையுடன் இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

    • இன்று முதல் 3 நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.
    • 5-ந்தேதி சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கின்றனர்.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் 6 நாட்களும் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனைக்கு பின்னர் தங்க தேரில் கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது

    7-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்பட்டார்.

    மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி ராஜ கோபுரம் அருகில் வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் எழுதினர்.

    இன்று மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    2, 3, 4 ஆகிய தேதிகளில் தினமும் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடக்கிறது. 5-ந் தேதி (சனிக்கிழமை) 12-ம் திருநாளன்று மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கின்றனர். அதோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • ஊஞ்சல் உற்சவம் வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
    • ஊஞ்சல் உற்சவ நாட்களில் மூலவர் சேவை கிடையாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ரெங்கநாச்சியார் நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் மாலை 3 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரரை புனித நீராட வைத்தனர்.
    • நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்ககொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாள் அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரருடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரரை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • 19-ந் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்.
    • 21-ந்தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    அதன் பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆரத்தி கண்டருளினார். இந்நிகழ்ச்சி இரவு 8.15 மணி வரை நடந்தது. அப்போது நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாளான 19-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.

    அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைகிறார்.

    விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா இன்று தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.
    • 21-ந்தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையொட்டி இன்று மாலை 5 மணியளவில் உற்சவர் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, மாலை 5.30 மணியளவில் தங்கக் கொடிமரத்திற்கு கிழக்கில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணிவரை பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஊஞ்சலில் ஆடியவாறு பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சேருவர்.

    நாளை முதல் 18-ந் தேதி வரை நம்பெருமாள் மட்டும் தினமும் மாலை ஊஞ்சல் மண்டபம் வந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருள்வார், 7-ம் திருநாளான 19-ந் தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.45 மணியளவில் கொட்டாரத்தில் நெல்அளவை கண்டருளிய பின் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 7.15 மணியளவில் ஊஞ்சல் மண்டபம் சேருவர். இரவு 7.45 மணி முதல் ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய பின் இரவு 9 மணியளவில் மூலஸ்தானத்திற்கு புறப்படுவர்.

    நிறைவு நாளான 21-ந் தேதி காலை 9.15 மணியளவில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 9.45 மணியளவில் சந்திரபுஷ்கரணிக்கரையில் தீர்த்தவாரி கண்டருள்வார், பின்னர் காலை 10.15 மணியளவில் ஊஞ்சல் மண்டபம் சேர்ந்த பின் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

    மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் சேவை நடைபெறும். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
    • விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை கும்பிட்டனர்

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஆடி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால்,தயிர், சந்தனம், மஞ்சள் விபூதி,குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 11.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மன் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக சென்று ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார்.பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இதைக்கண்ட பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். சிலர் அருள் வந்து ஆடினர்.

    இரவு 12.30மணிக்கு அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாரதனை காண்பித்தவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை கும்பிட்டனர்

    விழாவை காண்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • மன்னார்குடி அருகே உள்ளது சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்.
    • வருகிற 21-ந்தேதி வரை இந்த ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சன்னதியில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெண்களும், குழந்தைகளும் கோலாட்டம் அடித்து பெருமாளை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 21-ந்தேதி வரை இந்த ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    • உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • 13-ந்தேதி வரை தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி ஊஞ்சலில் ஆடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி மாதத்தில் ஊஞ்சல் உற்சவ விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அதேபோல இந்த ஆண்டிற்கானஆனி ஊஞ்சல் உற்சவ விழா நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கியது. திருவிழாவையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஊஞ்சலில் அம்பாளுடன் முருகப்பெருமாள் அமர்ந்து ஊஞ்சலாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஓதுவாரால் திருவாசத்தில் இருந்து பொன்னுஞ்சல் பாடல் பாடப்பட்டது. அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரோ என்று பக்தி கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர். இதேபோல வருகின்ற 13-ந் தேதி வரை தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி ஊஞ்சலில் ஆடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 13-ந் தேதி மதியம் 12 மணியளவில் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான், கற்பக விநாயகர், துர்க்கை அம்பாள், பவளக்கனிமாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர் ஆகிய 5 விக்ரங்களுக்கும் வாழை, பலா, மா ஆகிய முப்பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதே உற்சவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் சுவாமிகளுக்கு முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விருத்தாசலம் சந்தை தோப்பில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்வசம் தொடங்கி நடந்து வருகிறது.
    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று தாயார் ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வருகிற 25-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை சேர்கிறார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளலும், பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடும் நடக்கிறது. இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    இதேபோல் 26-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்தல், இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளி, இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பாடு, இரவு 9 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஊஞ்சல் உற்சவம் விழா நேற்று நிறைவு பெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு இவ்விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார்.

    அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    ×