search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "offering"

    • சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது.
    • சங்காபிஷேகம் செய்த புனிதநீர் பிரசாதம் அருந்தியும் சாமி அருள் பெற்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கோவில் பிரசங்க மண்டபத்தில் புனித நீர் மகா கலசம் மற்றும் புனித நீர் நிறைந்த சங்குகளை நான்கு மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு யாக வேள்வியும் வேதபாராயணமும் ஆராதனையும் நடந்தது.

    நேற்று பிரதோஷமும் சோம வாரமும் இணைந்த நாளில் நந்தியெம்பெருமானுக்கும் ஐயாறப்பருக்கும் பிரதோஷம் மற்றும் சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தும், சங்காபிஷேகம் செய்த புனித நீர் பிரசாதம் அருந்தியும் சுவாமி அருள் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • காலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி 6 மணியளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.
    • 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சுந்தர வளநாடு வாளமர் கோட்டை மாதவமணி தவத்திரு காத்தையா சுவாமிகளின் 26 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் வாண்டையார் இருப்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜன் வரவேற்புரை ஆற்றினர்.

    மேலும் வாளமர் கோட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் மேடை மட்டும் பந்தல் அலங்காரம் செய்து கொடுத்தார்.

    ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் தவமணி அன்னதானம் வழங்கினார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பிஜேபி மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் கலந்து கொண்டனர்.

    சித்தர் வழி தோன்றல் மாதவமணி தவத்தில் காத்யதையா சுவாமிகள் என்ற தலைப்பில் கரந்தை தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் குருநாதன் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

    முன்னாள் அரசு வழக்கறிஞர் நமச்சிவாயம் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

    இந்த விழா காலை 5 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கி 6 மணி அளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.

    மேலும் 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    மேலும் இந்த விழாவில் பக்தர்கள் திரளானோர் பங்கு பெற்று தரிசனம் செய்தனர்.

    இறுதியில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு விழா நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு குமாரபாளையம் நேதாஜி சமூக சேவை மையம் சார்பில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் நிறுவனர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார்.

    தட்டான்குட்டை ஊராட்சித் தலைவி புஷ்பா பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதேபோல, புத்தர் தெரு உயர்நிலைப்பள்ளி, மேற்கு காலனி நடுநிலைப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பங்கேற்ற கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வத்தின் தந்தை பழனி சுதந்திர போராட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.
    • மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி படைவெட்டி மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சேர்ந்த ங்குடியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சண்டி ஹோமம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.

    திங்கட்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, தேவி மாஹாத்மிய பாராயணம் செய்யப்பட்டு, கஜ பூஜை கோ பூஜை, அஸ்வ பூஜை எனப்படும் குதிரைக்கு பூஜை, ஒட்டக பூஜை, கன்னிப்பெண்களுக்கு செய்யப்படும் கன்னியா பூஜை, வடுக பூஜை, பிரம்மச்சாரி பூஜை ஆகியவை செய்யப்பட்டது.தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி ஸ்ரீ படைவெட்டி மாரியம்ம னுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஹோமங்கள் மற்றும் பூஜைகளை தருமபுரம் ஆதீன வள்ளலார் கோயில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாதருக்கு 4 கிலோ எடையுள்ள தங்க குடையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். #Badrinath #GoldUmbrella
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து மக்களின் பிரபல வழிபாட்டு ஸ்தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உருவான பத்ரிநாத் ஆலயம் கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்நிலையில், பத்ரிநாதர் கோவிலுக்கு குவாலியரில் வசிக்கும் ராஜ வம்சத்தினர் புதிய தங்க குடை ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளனர்.



    குவாலியர் மகாராணி அஹில்யா பாய் சோல்கர் காணிக்கையாக அளித்த 4 கிலோ எடையுள்ள தங்க குடை பத்ரிநாத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பத்ரிநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தங்க குடைக்கு, வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பத்ரிநாத பெருமாளுக்கு சாத்தப்பட்டது.

    இதற்காக நடந்த சிறப்பு பூஜையில் குவாலியரை சேர்ந்த ராஜ குடும்பத்தினரும், குடையை செய்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். #Badrinath #GoldUmbrella
    ×