search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oddanchatram"

    ஒட்டன்சத்திரம் அருகே மணல் திருட்டு குறித்து புகார் அளித்த விவசாயி கடத்தப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டி துரையூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 48). விவசாயி. இவர் அந்த பகுதியில் நடந்த மணல் திருட்டுக்கு எதிராக அடிக்கடி மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார். மேலும் போலீஸ் நிலையத்திலும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்து வந்தார். இதனால் அவர் மீது மணல் கடத்தும் கும்பல் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துச்சாமி திடீரென மாயமானார். இது குறித்து அவரது உறவினர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் இடையகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதில் மணல் திருட்டு தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்துமக்களை திரட்டி போராட்டம் நடத்தியதால் அவரை யாரேனும் கடத்தி வைத்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துசாமியை தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விலை திடீரென உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. கள்ளிமந்தயம், காவேரியம்மாபட்டி, மூலசத்திரம், சத்திரப்பட்டி, கேதையெறும்பு, அத்திக்கோம்பை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காய விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பட்டறைகளில் வெங்காயங்களை பதுக்கி வைத்தனர்.

    மேலும் குறைந்த அளவே விலை போனதால் அவர்கள் கவலையில் இருந்தனர். தற்போது ரம்ஜான் பண்டிகை வர உள்ளதையொட்டி பிரியாணி மற்றும் தயிர் பச்சடி தயாரிக்க வெங்காயம் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காக கேரள மாநிலத்திற்கு அதிக அளவு வெங்காயங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் வரத்தும் குறைந்துள்ளளது. 60 டன் வரவேண்டிய இடத்தில் 40 டன் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது. இதனால் தற்போது ஒரு கிலோ ரூ.42 வரை விலைபோனது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தாங்கள் பட்டறையில் வைத்திருந்த வெங்காயங்களையும் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். வெங்காய விலை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு விலை ஓரளவு கட்டுப்படியானதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கேரளா, கோவை ஆகிய பகுதிகளுக்கு லாரி மூலம் அதிக அளவு வெங்காயங்கள் அனுப்பப்படுகிறது. மேலும் வியாபாரிகளும் அதிக அளவு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரத்தில் மணல் திருட வந்த லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் கொல்லப்பட்டி குளத்தில் கடந்த சில நாட்களாக மணல் திருட்டு நடந்து வந்தது. இரவு நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் அதக அளவு லாரிகள் கொண்டு வரப்பட்டு மணல் திருடிச் சென்றனர்.

    நேற்று இரவு 8 லாரிகளில் டிரைவர் மற்றும் பணியாளர்கள் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். லாரிகள் மற்றும் மணல் திருடியவர்களை சிறை பிடித்து வைத்தனர். இது குறித்து போலீசார் மற்றும் தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தாரோ, வருவாய்த்துறை அலுவலர்களோ யாரும் வரவில்லை. இரவு முழுவதும் பொதுமக்கள் லாரிகளை நகர விடாமல் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலையிலும் அதே நிலை தொடர்ந்தது. இதனால் போலீசார் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மணல் திருட்டு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தனர். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் வராததால் மிகுந்த வேதனையடைந்த பொதுமக்கள் நேற்று இரவு புகார் தெரிவித்து நாங்கள் விடிய விடிய காத்திருந்த நிலையிலும் ஒருவர் கூட வராதது அதிர்ச்சியளிக்கிறது.

    மணல் திருட்டு நடைபெற்றால் புகார் அளிக்க கூறும் அவர்கள் நாங்கள் தெரிவித்த பின்னும் வராததது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒட்டன்சத்திரத்தில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மூலச்சத்திரத்தை சேர்ந்த ராணி (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அதே ஊரைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அவரை கற்பழிக்க முயன்றார்.

    உடனே அந்த சிறுமி அவரை தள்ளி விட்டு ஓடி விட்டார். இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்த தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்தது. எனவே எப்போது மழை பெய்யும் என மக்கள் கவலையில் இருந்தனர். மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி சந்தை உள்ளது.

    இந்த சந்தையை சுற்றி ஏராளமான விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். பருவ மழை பொய்த்துப் போனதால் விவசாயத்தில் எதுவும் கிடைக்காததால் வறுமையில் வாடினர். இந்த ஆண்டு ஓரளவு கிணற்றில் நீர் இருப்பு உள்ளது. அதுவும் போதுமானதாக இல்லை.

    மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் மழை தூறல் எட்டிப்பார்க்கவில்லை. நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்தது. பின்னர் திடீரென ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை பெய்ததால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    அதோடு ஓரளவு வெப்ப மும் குறைந்துள்ளது. இதே போல ஒட்டன் சத்திரம் பகுதியை சுற்றியுள்ள விருப்பாட்சி, அத்திக் கோம்பை, வடகாடு, சாலைப்புதூர், கேதையறும்பு, அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கள்ளிமந்தயம், காவேரியம்மாபட்டி பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானலிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலித்தனர்.

    ×