search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non Veg"

    குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழகலாம். அசைவத்தை எந்த வயதில் இருந்து கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    உங்கள் வீட்டில் உங்கள் குழந்தையோ அல்லது அண்ணன், அக்கா ஆகியோருடைய குழந்தையோ நிச்சயம் இருக்கும். அப்படி இந்த குழந்தைகள் கைக்குழந்தையாக இருக்கும் பட்சத்தில் பால் மட்டும் தான் உணவாக வழங்கப்படும்.

    ஆனால் ஆறு மாதக் குழந்தைக்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழக்குவோம். அதிலும் அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு. அதைப் பினபற்றினாலே போதும். அசைவம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் உண்டாகாது.

    அசைவ உணவுகளில் முதன்மையான ஊட்டச்சத்தாக ஏராளமான புரதம் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

    அசைவத்தில் முதலில் குழந்தைககு முட்டையிலிருந்து ஆரம்பியுங்கள்.



    குழந்தைக்கு ஒரு வயது ஆனபின்பே நான்வெஜ் உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

    முட்டை கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    அடுத்ததாக சிக்கன் உணவுகளைக் கொடுக்கலாம். அதிலும் சூப் வகைகளைக் கொடுப்பது நல்லது. சில சமயம் திடீரென குழந்தைகள் நான் - வெஜ் சாப்பிடும் போது வயிற்றுப் பொருமல், வலி உண்டாகும்.

    சில குழந்தைகள் புதிய வித்தியாசமான சுவையாக இருப்பதால் சாப்பிட மறுக்கும். அதனால் சூப் வகைகள் கொடுத்துப் பழகிய பின், சிக்கன் போன்ற திட உணவுகளைக் கொடுக்கப் பழகலாம்.

    ஆட்டிறைச்சி இரண்டு வயது ஆன பிறகு கொடுப்பது நல்லது. ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.
    தோசை, இட்லி, சூடான சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வஞ்சிரம் மீன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிரம் மீன் - 500 கிராம்,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,  
    நாட்டுத் தக்காளி - 200 கிராம்,
    பெரிய வெங்காயம்100 கிராம்,
    பூண்டு - 1,
    புளி எலுமிச்சை அளவு,
    காய்ந்த மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 100 மி.லி,
    வெந்தயம் - 1 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    தேங்காய் - பாதி



    செய்முறை :

    தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தை போட்டு பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    பிறகு, மிளகாய்த் தூள், தனியா துள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும்.

    அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும்.

    அடுத்து அதில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கிரேவி திக்கான பதம் வந்தவுடன் இறக்கவும்.

    பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை.. அவை அசைவ உணவில் இருக்கும் நச்சுத்தன்மைகளையும் போக்க கூடியவை.. அத்தகைய உணவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.
    அசைவ உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உணவை பார்த்தவுடன் பாய்ந்து மேய்ந்து விடும் சிலர், சாப்பிட்டு முடித்த பின் படும் துயரம் தான் அஜீரண கோளாறு. செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன. சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை.. அவை அசைவ உணவில் இருக்கும் நச்சுத்தன்மைகளையும் போக்க கூடியவை.. அத்தகைய உணவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

    வெந்நீர்:

    அசைவம் சாப்பிடும் போது குளிர்ந்த தண்ணீர் குடித்தால், அது உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்கிறது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நீங்கள் சாப்பிட்ட உடன் மிதமான சூடுள்ள நீரை பருகுங்கள் இதனால் உணவு செரிப்பது எளிமையாகிறது. கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், காலையில் மலப்பிரச்சனை ஏற்படாமல் எளிதாகிறது.

    பப்பாளி:

    பப்பாளியில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இது உங்களது செரிமான பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது. இந்த பப்பாளியை நீங்கள் மிகச் சிறிதளவு எலுமிச்சை சாறை பிளிந்து சாப்பிடலாம்  அல்லது ப்ரூட் சாலட்டுகளில் பப்பாளியை சேர்த்து சாப்பிடலாம்.



    சீரகம்:

    அசைவ உணவு செரிக்காமல் அவஸ்தைப்படும் போது, சீராக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும். மேலும் இது, மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

    புதினா ஜூஸ்:

    புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. அசைவ சாப்பாட்டிற்கு பின் புதினா மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸ் குடித்தால், அவை செரிமான பிரச்சனையை சரி செய்வதுடன், அவை வாயுபிடிப்பு, வயிற்று வலி, வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க உதவும்.

    வாழைப்பழம்:

    வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியுள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உங்களது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுக்கிறது. இந்த அமிலத்தன்மை அதிகரித்தால் அது வயிற்றில் எரிச்சலை உண்டாகும். நெஞ்செரிச்சலையும், செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

    க்ரீன் டீ:

    சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், 50 மி.லி கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் எளிதாகும். காலை மாலை என ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ என  அருந்தலாம்.
    தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் தோரன் அருமையாக இருக்கும். இன்று இந்த சிக்கன் தோரனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் துண்டுகள் - அரை கிலோ (சிறியதாக நறுக்கியது),
    வெங்காயம் - 2 கப்,
    பூண்டு - 2 தேக்கரண்டி,
    இஞ்சி - 2 தேக்கரண்டி,
    பச்சை மிளகாய் - 8,
    சிக்கன் மசாலா பொடி - 2 தேக்கரண்டி,
    நல்ல மிளகு பொடி -1 கப்,
    சீரகம் - 1 தேக்கரண்டி,
    தேங்காயம் (துருவியது) - 1 கப்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - ½ கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 தேக்கரண்டி,
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
    பிரியாணிஇலை - சிறிதளவு.



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.

    இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    இப்போது 2 கப் நீர் சேர்த்து., அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.

    நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.

    பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

    இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு சமையலில் நண்டு குழம்பு செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    மிளகு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும்ம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

    நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×