search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala recipes"

    • மீன் உணவுகளில் இது வித்தியாசமான சுவை.
    • இதன் சுவை நாக்கில் நிரந்தரமாக தங்கி விடும்.

    மீன் உணவுகளில் இது வித்தியாசமான சுவை. தேங்காய்ப்பால் கலவையில் உரிய மசாலாக்கள் சேரும்போது இதன் சுவை நாக்கில் நிரந்தரமாக தங்கி விடுகிறது. சமைத்து சுவைத்துப் பார்ப்போமா?

    தேவையான பொருட்கள்:

    மீன் -1/2 கிலோ

    வெங்காயம் -1 (நீளமாக நறுக்கியது)

    இஞ்சி விழுது -1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் -10 (நறுக்கியது)

    தக்காளி -1 நீளமாக நறுக்கியது

    தேங்காய் -1/2 மூடி(துருவியது)

    கார்ன் மாவு -1/2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு -1/2 பழம்

    உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

    செய்முறை:

    மீனை உப்பு போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை உடையாமல் ஜாக்கிரதையாக வறுக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    துருவிய தேங்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து பிழிந்து பால் எடுத்து வைக்க வேண்டும். நீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் எடுக்கவும். இரண்டாவது எடுத்த தேங்காய்ப்பாலை வறுத்த மசாலாவில் ஊற்றி மீன் துண்டுகளை போட வேண்டும்.

    இதை 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும். பின்னர் முதலில் எடுத்த பாலை ஊற்றி எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து இறக்க வெண்டும். இப்போது மண மணக்கும் மீன் மொய்லி சுவையுடன் ரெடி.

    கேரளாவில் மத்தி மீன் சமையல் மிகவும் பிரபலம். இன்று மத்தி மீனை வைத்து சூப்பரான மத்தி மீன் சாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 4,
    தக்காளி - 4,
    பச்சைமிளகாய் - 6,
    தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
    மத்தி மீன் - 1/2 கிலோ,
    தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
    உப்பு, மிளகுத்தூள், பெருங்காயம் - சிறிதளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிது.

    தாளிக்க...

    கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.



    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்கவிடவும்.  

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மத்தி மீன், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து மீன் குழம்பில் கொட்டி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கும் பொழுது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடலைக் கறியை சப்பாத்தி, புட்டு, ஆப்பம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம். இன்று கேரளா ஸ்பெஷல் கடலைக்கறியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன கொண்டைக்கடலை - 2 கப்
    இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
    பெரிய வெங்காயம் -  2
    பச்சை மிளகாய் - 1
    தக்காளி - 1
    துருவிய தேங்காய் - முக்கால் கப்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டீஸ்பூன்
    கேரளா கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 8 இலைகள்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    சின்ன கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காயைச் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற விட்டு, மிக்ஸியில் விழுதாக தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

    இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

    அடுத்து இதில் வேக வைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து சில நிமிடம் வேக விடவும்.

    இதில் இருந்து சிறிதளவு கொண்டைக்கடலையை எடுத்து, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்துக் கிளறவும்.

    இத்துடன் கரம் மசாலாத் தூளைச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை வேக விடவும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கிரேவியில் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்துத் தூவி இறக்கவும்.

    சூப்பரான கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா விசேஷங்களில் செய்யப்படும் உணவுகளில் காளன் முக்கியமானது. நேந்திரங்காய் கொண்டு செய்யும் இந்த காளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரங்காய் - 2
    சேனைக்கிழங்கு - 250 கிராம்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    தயிர் - கால் கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க:

    துருவிய தேங்காய் - முக்கால் கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 1
    கறிவேப்பிலை - 5 இலைகள்



    செய்முறை:

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    நேந்திரங்காய், சேனைக்கிழங்கை தோல் நீக்கி கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெட்டிய காய்கறிகளை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

    தண்ணீர் இருந்தால், அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீரை வற்ற விடவும். அடுப்பை அணைத்து காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும்.

    மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் சிம்மில் வைத்து தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த காய்களை போட்டு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலக்கி, சில நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை, தாளித்து கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம், இந்தப் பாயாசம். இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்)
    வெல்லம் - 1 கிலோ
    தண்ணீர் - தேவையான அளவு
    நெய் - 250 மில்லி
    ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய பாயாசத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

    இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.. அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும்.

    அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும்.

    சூப்பரான அரவணப் பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேளராவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். இன்று சூப்பரான இந்த வாழை இலை மீன் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்  - அரை கிலோ
    சின்ன வெங்காயம்  - 10
    மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்
    கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்
    பூண்டு   - 4
    இஞ்சி - சிறிது
    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
    கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்   - 2 ஸ்பூன்



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழைஇலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான வாழை இலை மீன் வறுவல் ரெடி.

    குறிப்பு - மீனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சோத்து கலந்து 5 நிமிடம் தோசை கல்லில் போட்டு வறுத்து அதன் பின்னர் மசாலா சேர்த்து செய்யலாம். மீனை தோசை கல்லில் போட்டு வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள். வயதானவர்கள் இவ்வாறு செய்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் தோரன் அருமையாக இருக்கும். இன்று இந்த சிக்கன் தோரனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் துண்டுகள் - அரை கிலோ (சிறியதாக நறுக்கியது),
    வெங்காயம் - 2 கப்,
    பூண்டு - 2 தேக்கரண்டி,
    இஞ்சி - 2 தேக்கரண்டி,
    பச்சை மிளகாய் - 8,
    சிக்கன் மசாலா பொடி - 2 தேக்கரண்டி,
    நல்ல மிளகு பொடி -1 கப்,
    சீரகம் - 1 தேக்கரண்டி,
    தேங்காயம் (துருவியது) - 1 கப்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - ½ கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 தேக்கரண்டி,
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
    பிரியாணிஇலை - சிறிதளவு.



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.

    இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    இப்போது 2 கப் நீர் சேர்த்து., அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.

    நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.

    பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

    இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாக்கை ஊறவைக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மீன் குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    மீன் - அரை கிலோ,
    வெங்காயம் - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    இஞ்சி - 2 மேசைக்கரண்டி,
    தக்காளி - 2,
    பூண்டு - 10 பல்,
    பச்சை மிளகாய் - 2,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி,
    மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி,
    ஊறவைத்த குடம் புளி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,வெந்தயம் - தாளிக்க.



    செய்முறை

    சின்ன வெங்காயம், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    பிறகு தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். மசாலா நன்றாக சேர்ந்து வரும் போது அதனுடன் மீனை சேர்க்கவும்.

    அத்துடன் ஊற வைத்த குடம் புளிச் கரைசலைச் சேர்க்கவும்.

    பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

    15 நிமிடங்கள் கழித்து திறந்து கறிவேப்பிலை தூவி இறக்கிவிடவும்.

    சுவையான மீன் முளகிட்டது தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், சப்பாத்தி, நாண், சாத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    சிக்கன் - அரை கிலோ
    சோம்பு - 1 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 7
    பூண்டு - 10 பல்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்



    செய்முறை

    சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அடுப்பை மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும்.

    தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

    கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×