search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nokia"

    • ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
    • நோக்கியா நிறுவனத்துடனான காப்புரிமை விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போன்களில் வழங்கி இருக்கும் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கு முறையான உரிமம் வைத்திருக்காத காரணத்தால் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஜெர்மனி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு மூலம் பிரச்சினையை முடித்துக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், இதற்கு இருதரப்பும் உடன்படவில்லை.


    இதை அடுத்து ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை ஜெர்மனியில் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒப்போ நிறுவன வலைதளத்தில், சாதனம் பற்றிய விவரம் எங்களின் வலைதளத்தில் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து ஒப்போ சாதனங்களை பயன்படுத்தலாமா, அப்டேட் மற்றும் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்ற கேள்வி ஒப்போவிடம் எழுப்பப்பட்டது.


    இதற்கு பதில் அளித்த ஒப்போ நிறுவனம், ஒப்போ சாதனங்களை எந்த விதமான தடையும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம். நிச்சயம் உங்களுக்கான எதிர்கால அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இயர்போன், சார்ஜர் போன்ற அக்சஸரீக்களை ஒப்போ நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். 

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புது நோக்கியா மொபைல் மாடலை அறிமுகம் செய்தது.
    • முன்னதாக இதே மொபைல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8120 4ஜி மொபைல் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக நோக்கியா 2660 ப்ளிப் மற்றும் 5710 எக்ஸ்பிரஸ் ரேடியோ போன்ற மாடல்களுடன் நோக்கியா 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    புது நோக்கியா 8120 அதன் பழைய ஃபீச்சர் போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அசத்தல் டிசைன், தலைசிறந்த உறுதித்தன்மை கொண்டிருக்கும் நோக்கியா 8120 மாடல் 4ஜி, வோல்ட்இ கனெக்டிவிட்டி, 2.8 இன்ச் டிஸ்ப்ளே, எளிய யூசர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது.

    இத்துடன் டார்ச், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், கேம்லாஃப்ட் கேம்கள், ஒரிஜின் டேட்டா கேம்கள் பிரீலோட் செய்யப்பட்டு உள்ளன.


    நோக்கியா 8120 4ஜி அம்சங்கள்:

    - 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

    - அதிகபட்சம் 1GHz யுனிசாக் T107 சிங்கில் கோர் பிராசஸர்

    - 48MB ரேம்

    - 128MB மெமரி

    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    - டூயல் சிம் ஸ்லாட்

    - S30+ ஓ.எஸ்.

    - விஜிஏ கேமரா

    - 3.5mm ஹெட்போன் ஜாக்

    - வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், டார்ச் லைட்

    - 4ஜி வோல்ட்இஷ ப்ளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி

    - 1450 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா 8120 4ஜி மாடல் டார்க் புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் நோக்கியா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • நோக்கியா G11 ப்ளஸ் மாடல் லேக் ப்ளூ, சார்க்கோல் கிரே ஆகிய நிறங்களில் வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    நோக்கியா நிறுவனம் அதன் புது G சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் G11 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் அடுத்த மாடலான G11 ப்ளஸ்-சை விரைவில் அறிமுகம் செய்ய நோக்கியா நிறுவனம் தயாராகி வருகிறது.

    G11 மாடலில் இருந்ததுபோல் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய வி நாட்ச் ஸ்கிரீன் மற்றும் யுனிசாக், T606 SoC புராசஸர் ஆகியவை G11 ப்ளஸ் மாடலிலும் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குகளத்துடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரதான கேமரா, 2MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 8MP கேமரா உள்ளது. இது ஒரு நோர்டிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது, இது 3 நாட்கள் வரை தாங்கக்கூடிய திறன் கொண்டவை என கூறப்படுகிறது.

    நோக்கியா G11 ப்ளஸ் மாடல் லேக் ப்ளூ, சார்க்கோல் கிரே ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த போன் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் விலை விவரம் இதுவரை வெளியாகவில்லை.

    • வரவிருக்கும் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்நாப்டிராகன் 480+ 5ஜி Soc மூலம் இயங்கும் எனத் தெரிகிறது.
    • இத்துடன் நோக்கியா XR21 5ஜி, X21 5ஜி மற்றும் X11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.

    நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நோக்கியா XR21 5ஜி, X21 5ஜி மற்றும் X11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஸ்நாப்டிராகன் 480+ 5ஜி Soc மூலம் இயங்கும் எனத் தெரிகிறது.

    வரவிருக்கும் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவை 120HZ புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. புதிய X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும் நோக்கியா நிறுவனம் இதன் வெளியீட்டை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


    கடைசியாக நோக்கியா நிறுவனம் ஏப்ரல் 26-ந் தேதி புது ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. நோக்கியா ஜி-21 எனப்படும் அந்த மாடலின் விலை ரூ.12 ஆயிரத்து 999 மட்டுமே. இது 4ஜிபி ரேம் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வந்தது. அதேபோல் 6ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய வேரியண்ட்டின் விலை ரூ.14 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வந்தது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வந்த இந்த ஸ்மார்ட்போன் டஸ்க் மற்றும் நார்டிக் புளூ ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. டீசர் வீடியோவில் கேமரா மட்டும் தோன்றுகிறது. இந்த டீசர் நோக்கியா மொபைல் இந்தியா மற்றும் நோக்கியா குளோபல் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது.



    அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் இத்தாலி மற்றும் இந்தியாவில் ஒரே நாளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் TA-1183 எனும் மாடல் நம்பர் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் FCC மற்றும் BIS சான்றிதழ்களை பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இது நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் என்றும் இது நோக்கியா வாஸ்ப் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இது ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதுதவிர ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 1 பிளஸ் மற்றும் நோக்கியா 210 ஃபீச்சர் போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களையும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nokia9PureView



    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஐந்து கேமரா சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் வீடியோவினை நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் மூன்று மோனோக்ரோம் மற்றும் இரண்டு ஆர்.ஜி.பி. சென்சார்களை கொண்டிருக்கிறது.



    நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 9 பியூர் வியூ மொபைல் வெவ்வேறு கோணங்களில் காணப்படுகிறது. இத்துடன் விரைவில் நோக்கியா 9 கொண்ட தலைசிறந்த புகைப்படங்களை படமாக்க தயாராகுங்கள் என்ற வார்த்தை பதிவிடப்பட்டிருக்கிறது.

    சர்வதேச சந்தையில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,300) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.

    எனினும், இந்திய விலை மற்றும் விற்பனை பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. இந்தியாவில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    - வயர்லெஸ் சார்ஜிங்
    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் மூன்று புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 # #Nokiamobile



    பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. 

    நோக்கியாவின் புதிய மொபைல்களான நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 210 மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறன.



    நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் FWVGA+ IPS டிஸ்ப்ளே
    - குவாட்கோர் மீடியாடெக் MT6739WW பிராசஸர்
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்)
    - 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - மைக்ரோ யு.எஸ்.பி.

    நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,030) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
    - பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - மைக்ரோ யு.எஸ்.பி. 
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)

    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 210 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
    - மீடியாடெக் MT6260A பிராசஸர்
    - வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 16 எம்.பி. இன்டெர்னல் மெமரி
    - எஃப்.எம். ரேடியோ
    - எம்.பி.3 பிளேயர்
    - ஃபேஸ்புக், ஸ்நேக் கேம்
    - செயலிகளை டவுன்லோடு செய்ய ஆப் ஸ்டோர்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

    நோக்கியா 210 மொபைல் போன் சார்கோல், ரெட் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 35 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #Nokia9PureView #Smartphone
     


    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 பியூர் வியூ மாடல் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    நோக்கியா பவர்யூசர் சார்பில் வெளியாகி இருக்கும் புதிய லைவ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதும் கிளாஸி பேக் பேனல் கொண்டிருப்பதும் உறுதியாகியிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: NokiaPowerUser

    ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே நாட்ச் எதுவும் காணப்படவில்லை, இதன் பெசல்கள் தடிமனாகவும் அதில் செல்ஃபி கேமரா, இயர்பீஸ் மற்றும் இதர சென்சார்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக வெளியான ரென்டர்களிலும் நோக்கியா 9 பியூர்வியூ மாடலில் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் ஐந்து கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் வட்ட வடிவம் கொண்ட டெப்த் சென்சார் இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஹெச்.எம்.டி. குளோபல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட கேமரா மோட்களை வழங்கும் என தெரிகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்த நோக்கியா 106 மொபைல் போன் தற்சமயம் ரூ.1,309க்கு விற்பனை செய்யப்படுகிறது. #NokiaMobile #offer



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 106 (2018) மொபைல் போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1,700 விலையில் அறிமுகமான நோக்கியா 106 (2018) மொபைல் போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

    இந்நிலையில், நோக்கியா 106 (2018) தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.1,309க்கும், அமேசான் வலைத்தளத்தில் ரூ.1,478 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 106 மொபைல் போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக அறிமுகமான நோக்கியா 106 (2018) முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    நோக்கியா 106 (2018) மாடலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி நேவிகேஷன் பட்டன் மற்றும் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பாலிகார்போனேட் பாடி, கான்டொர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா மொபைலில் அந்நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்னேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நைட்ரோ ரேசிங், டேன்ஜர் டேஷ், டெட்ரிஸ் மற்றும் பல்வேறு இதர கேம்கள் பிரீ-லோடு செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 106 (2018) அம்சங்கள்:

    - 1.8-இன்ச் QQVGA (160×128 பிக்சல் ) கலர் TFT டிஸ்ப்ளே
    - மீடியாடெக் 6261D பிராசஸர்
    - 4 எம்.பி. ரேம்
    - டூயல் பேன்ட், EGSM 900/1800
    - எஃப்.எம். ரேடியோ
    - கேம்கள்
    - ஃபிளாஷ்லைட்
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3.5 எம்.எம். ஏ.வி. கனெக்டர்
    - 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5ம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. #NokiaMobile



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5ம் தேதி புது நோக்கியா மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. துபாய் நாட்டில் நடைபெற இருக்கும் #expectmore விழாவில் புது நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இவ்விழாவில் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட நோக்கியா 9, நோக்கியா 8, நோக்கியா 8 சிரோக்கோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களும், ஹெச்.எம்.டி. குளோபல் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்த நோக்கியா X7 ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் நோக்கியா 2.1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த ஐந்து கேமரா லென்ஸ் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் மாடலும் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    நோக்கியா 9 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 3D தொழில்நுட்பத்தில் இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதி அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம். இத்துடன் 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    நோக்கியா 9 போன்றே நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விவரங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.



    நோக்கியா 8.1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, 18.7:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, f/1.8, 1.4μm, OIS
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ ரெக்கார்டிங்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்திருக்கிறது. #Nokiamobile


     
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது. அதன் படி தேர்வு செய்யப்பட்ட என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரையும், நோ்கியா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி்.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 5.1 மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர் கொண்டுள்ளது.

    நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் ரூ.1500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x2160 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி., 18:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டா-கோர் மீடியாடெக் MT6755 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ.1,500 மற்றும் ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 ஜி.பி. ரேம் நோக்கியா 6.1 விலை ரூ.13,499 மற்றும் 4 ஜி.பி. ரேம் கொண்ட நோக்கியா 6.1 விலை ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. ரேம் வேரியன்ட் விலை ரூ.1,500 குறைக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2280 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் கொண்டுள்ளது.

    இறுதியில் நோக்கியா 8 சிரோகோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஒற்றை சிம் கொண்ட நோக்கியா 8 சிரோக்கோ மாடலில் 5.5 இன்ச் QHD 1440x2560 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அக்டோபர் 11-ம் தேதி வெளியிட இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போனின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #hmdglobal #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய மொபைல் போன் அக்டோபர் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கென அந்நிறுவனம் முன்னதாக வெளியிட்ட டீசரில் பண்டிகை காலத்திற்கு முன் முக்கிய அறிவிப்பு என்ற தகவல் இடம்பெற்று இருந்தது.

    இந்நிலையில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இதில் #MegaLife மற்றும் #GoBigGetBetter என்ற ஹேஷ்டேக் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் பின்புறம் காணப்படுகிறது. அதன்படி புதிய நோக்கியா போன் பார்க்க நோக்கியா 7.1 போன்று காட்சியளிக்கிறது.

    முன்னதாக நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    நோக்கியா 7.1 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் FHD+ 19:9 ரக டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் அல்லது அமேசான் வலைதளங்களின் ஒன்றில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×