search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    விரைவில் அறிமுகமாகிறது நோக்கியாவின் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
    X

    விரைவில் அறிமுகமாகிறது நோக்கியாவின் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

    • வரவிருக்கும் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்நாப்டிராகன் 480+ 5ஜி Soc மூலம் இயங்கும் எனத் தெரிகிறது.
    • இத்துடன் நோக்கியா XR21 5ஜி, X21 5ஜி மற்றும் X11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.

    நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நோக்கியா XR21 5ஜி, X21 5ஜி மற்றும் X11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஸ்நாப்டிராகன் 480+ 5ஜி Soc மூலம் இயங்கும் எனத் தெரிகிறது.

    வரவிருக்கும் X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவை 120HZ புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. புதிய X மற்றும் G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும் நோக்கியா நிறுவனம் இதன் வெளியீட்டை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


    கடைசியாக நோக்கியா நிறுவனம் ஏப்ரல் 26-ந் தேதி புது ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. நோக்கியா ஜி-21 எனப்படும் அந்த மாடலின் விலை ரூ.12 ஆயிரத்து 999 மட்டுமே. இது 4ஜிபி ரேம் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வந்தது. அதேபோல் 6ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய வேரியண்ட்டின் விலை ரூ.14 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வந்தது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வந்த இந்த ஸ்மார்ட்போன் டஸ்க் மற்றும் நார்டிக் புளூ ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×