search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #Nokia9PureView #Smartphone
     


    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 பியூர் வியூ மாடல் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    நோக்கியா பவர்யூசர் சார்பில் வெளியாகி இருக்கும் புதிய லைவ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதும் கிளாஸி பேக் பேனல் கொண்டிருப்பதும் உறுதியாகியிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: NokiaPowerUser

    ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே நாட்ச் எதுவும் காணப்படவில்லை, இதன் பெசல்கள் தடிமனாகவும் அதில் செல்ஃபி கேமரா, இயர்பீஸ் மற்றும் இதர சென்சார்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக வெளியான ரென்டர்களிலும் நோக்கியா 9 பியூர்வியூ மாடலில் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் ஐந்து கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் வட்ட வடிவம் கொண்ட டெப்த் சென்சார் இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஹெச்.எம்.டி. குளோபல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் மேம்பட்ட கேமரா மோட்களை வழங்கும் என தெரிகிறது.
    Next Story
    ×