search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namachivayam"

    • தென் மாநிலத்திற்கான போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேச பாதுகாப்பு குறித்த பிராந்திய மாநாடு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது.
    • முன்னதாக அமித்ஷாவை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து வழங்கினார்.

    புதுச்சேரி:

    தென் மாநிலத்திற்கான போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேச பாதுகாப்பு குறித்த பிராந்திய மாநாடு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் புதுவை மாநிலம் சார்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார்.

    முன்னதாக அமித்ஷாவை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து வழங்கினார்.

    தொடர்ந்து நடந்த மாநாட்டில், அமைச்சர் நமச்சிவாயம் புதுவையின் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு ஒழுங்கு நடவடிக்கையில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.

    • புதுவை கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதா? புதிய கல்வி கொள்கையின் கீழ் எவ்வித பயிற்று மொழி நடைமுறையில் உள்ளதா?
    • கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கட்டண தொகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    ஏ.கே.டி.ஆறுமுகம்(என்.ஆர்.காங்): புதுவை கல்வித்துறை யில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதா? புதிய கல்வி கொள்கையின் கீழ் எவ்வித பயிற்று மொழி நடை முறையில் உள்ளது? தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கொள்கையின் கீழ் மாணவர் சேர்க்கை விதிகள் கடை பிடிக்கப் படுகிறதா? கட்டண தொகையை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா?

    அமைச்சர் நமச்சிவாயம்: புதுவை கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு ஆகிய மொழிகள் பயிற்று மொழிகளாக உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கட்டண தொகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அரசு உதவி ெபறும், உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு 3 கல்வி யாண்டுக்கான 2022 முதல் 2025 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த ஆய்வறிக்கை மேல் உத்தரவுக்காக கட்டண குழுவில் வைக்கப்படும். கூடுதல் கட்டணம் பெறுவது தொடர்பாக பெற்றோர் களின் தனிப்பட்ட புகாரின்பேரில் ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான குழுவால் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

    ஏ.கே.டி. ஆறுமுகம்: அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • முழுமையான கணினி முறையில் தேர்வு செய்யப்படுகிறது. ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் கண்காணிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை போலீஸ் துறையில் காலியாக உள்ள 279 போலீஸ் பணியிடங்களுக்கு  முதல் 31-ந் தேதி வரை ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. 279 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

    இதில் போலீஸ் பணிக்காக 14 ஆயிரத்து 173 பேரும், டிரைவர்களுக்கு 877 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான உடல்தகுதி தேர்வு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. வருகிற 31-ந் தேதி வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.

    இவர்களுக்கு உடல் எடை, உயரம், மார்பக அளவு எடுக்கப்படும். அதற்கு முழுமையான கணினி முறையில் தேர்வு செய்யப்படுகிறது. ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் கண்காணிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

     2 நாட்கள் 500 பேருக்கும், அதன் பிறகு ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கும் உடல் தகுதி தேர்வு நடக்கிறது.

    இதை ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பெண் போலீஸ்சாருக்கான தேர்வு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. 31-ந் தேதி டிரைவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடக்கிறுது. இந்த தேர்வுகள் மூலம் போலீசாராக 253 பேர், ஓட்டுநராக 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    புதுவையில் தொடங்கிய போலீஸ் தேர்வை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தேர்வுக்கான ஓட்ட பந்தையத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேர்மையான முறையில் தேர்வு நடைபெறும். எந்த ஒரு குறுக்கு வழியையும் யாரும் பின்பற்ற வேண்டாம். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். தகுதியுடைய இளைஞர்களே தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த கட்டமாக 200 கடலோர காவல் படை, ஊர்காவல் படை வீரர்களும், காவல் துறையில்60 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை சுற்றுலாவில் வளரும் போக்குகள் என்ற தலைப்பில் இந்திய தொழிலகங்கள் கூட்டம் நடைபெற்றது.
    • ஐ.டி. தொழில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாவில் வளரும் போக்குகள் என்ற தலைப்பில் இந்திய தொழிலகங்கள் கூட்டம் (சி.ஐ.ஐ.) அண்ணா சாலை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசியதாவது:

    கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு புதுவை அரசு ரூ.25 கோடி இன்சண்ட்டிவ் கொடுத்துள்ளது. இன்னும் 42 பேருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கான கோப்பும் நிதி துறைக்கு அனுப்பி உள்ளோம். நல்ல செய்தி விரைவில் கிடைக்கும். தொழில் முதலீட்டாளர்களுக்கு பக்க பலமாக இந்த அரசு இருக்கும். கரசூர் நிலங்களை தொழில் துறையினருக்கு கொடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பிரெஞ்ச் முதலீட்டாளர்களும் இடம் கேட்கிறார்கள். அதையும் பரிசீலிக்கிறோம். ஐ.டி. தொழில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் அமைச்சரை ஒரு குழு இதற்காக வந்து பார்த்துள்ளது. தொழில் செய்ய ஏதுவான மாநிலமாக, புதுவையை மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் சி.ஐ.ஐ. உடன் சேர்ந்து செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் சி.ஐ.ஐ. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
    • எல்லா திட்டங்களையும் இத்தொகு தியில் கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருக்கனூரில் நடந்தது. மண்டல பொறுப்பாளர் கண்ணன், தலைவர் வேதாச்சலம் தலைமை வகித்தனர். தொகுதி பொதுச்செயலாளர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: -

    தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். மண்ணாடிப்பட்டு பின்தங்கிய தொகுதியாக இருந்தது. இதை மாற்ற ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

    சாலை, குடிநீர், மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் வழங்கி வருகிறோம். எல்லா திட்டங்களையும் இத்தொகு தியில் கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

    இலவசமனைப்பட்டா விரைவில் வழங்கப்படும். எந்தெந்த பகுதியில் மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளதோ அப்பகுதியில் தகுதியான வர்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் அனந்தன், பொதுச்செயலாளர் திருவேங்கடம், நிர்வாகிகள் வீரராகவன், தமிழ்மணி, செல்வகுமார், சையது, சீனுவாசமூர்த்தி, கலியபெருமாள், ராஜா, சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர். மகளிர் அணி நிர்வாகி அனுசுயா நன்றி கூறினார்.

    • மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்ட தொடக்கவிழா நடந்தது.
    • படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்ட தொடக்கவிழா நடந்தது.

    கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் வாகனத்தை கொடியசைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:

    தனியார் நிறுவனம் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்கு கொண்டுசெல்லும். இத்திட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் வண்டியை அனுப்ப வேண்டும்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது.

    காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவது, பள்ளிகளுக்கு தேவையான வசதியை செய்து தருவது, தொழில் முனைவோர் எளிதாக தொழில் தொடங்க சூழ்நிலை உருவாக்குவது என பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பல ஆண்டு காத்திருந்த 16 ஆயிரத்து 800 முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை முதல்-அமைச்சர் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், சிறப்பு அழைப்பாளர் வீரராகவன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பின் பேரில் புதுவையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட தனியார் பெரு நிறுவன நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
    • அரசு பள்ளிகளை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த நிறுவனங்கள் பங்களிப்பு தர வேண்டும் என பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் சமூக பங்களிப்பு பொறுப்பு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பள்ளியாக மாற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பின் பேரில் புதுவையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட தனியார் பெரு நிறுவன நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

    புதுவையில் உள்ள அரசு பள்ளிகளை அடுத்த தலைமுறை கல்வி என்ற திட்டத்தின் மூலம் சமூகபங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்து அமைச்சர் கடிதம் வழங்கினார்.

    மேலும் அமைச்சர் பேசும்போது, புதுவையில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ளது. தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. அரசு பள்ளிகளை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த நிறுவனங்கள் பங்களிப்பு தர வேண்டும் என பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக பங்களிப்பு நிதி மண்டல மேலாளர் மதன் குமார், மேலாளர் மகேஷ்குமார், துணைத்தலைவர் மன்கோகன் லால்வாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரில் ஸ்பார்க் 2023-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரில் ஸ்பார்க் 2023-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு மணக்குள விநாயகர் அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்பு ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    விழாவில் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், கல்லூரின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், முத்துலட்சுமி, கோபாலு, சிதம்பரம், முகமது யாசின், சந்திர சேகர் கல்லூரியின் வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ஸர் முதல்வர் மனோகரன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் 4500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு கல்லூரிகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை.
    • எனவே பதவிஉயர்வு, நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரசு கல்லூரிகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை. சம்பள நிலுவைத்தொகை, வீட்டு வாடகைப்படி நிலுவையும் வழங்கவில்லை.

    அடிப்படை ஊதியத்தில் ஒரு படி நிலை உயர்வு மட்டுமே வழங்க ஆணை உள்ளது. எனவே பதவிஉயர்வு, நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை பெற்ற அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை சார்புசெயலர், இயக்குனரை அழைத்து விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.

    • உப்பளம் ராஜீவ்கா ந்தி உள்விளையாட்டு அரங்கத் தில் தேசிய அளவிலான கராத்தே , கிக் பாக்சிங், தே க்வாண்டோ போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.
    • இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    புதுச்சேரி:

    உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத் தில் தேசிய அளவிலான கராத்தே , கிக் பாக்சிங், தேக்வாண்டோ போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.

    புதுவை மாநில அனைத் து விளையாட்டு வீரர்களின் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., விளையாட்டு சங்க கவுரவத்தலைவர் திருவேங்கடம், பா.ஜனதா பிரமுகர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள் , வீராங்கனை கள் பங்கே ற்கிறார்கள். போட்டிகள் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் பொதுப்பிரிவுகளில் நடக்கிறது. போட்டிகளில் வெ ற்றி பெ றுபவர்களுக்கு பரிசளிப்பு விழா 4 மணிக்கு நடக்கிறது. போலீஸ் ஐ.ஜி. சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

    • திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மழை அங்கி (ரெயின் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நடததது.
    • நாராயணசாமி ஆட்சி காலத்தில் எல்லாவற்றை யும் சிறப்பாக செய்திருந் தால் அவர் தேர்தலில் போட்டியிருக்க வேண் டியதுதானே? ஏன் தேர்தலில் நிற்காமல் பயந்து ஓடினார்?

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மழை அங்கி (ரெயின் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நடததது.

    மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன் தலைமை ஆசிரியா் சிவகங்கை மற்றும் ஆசி ரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தேசிய் ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்து கின்ற நலத்திட்டங்களை பார்த்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி வயிற்றெரிச்சலில் பேசி கொண்டிருக்கிறார். அவர் முதல் அமைச்சராக இருந்த. காலத்தில் என்ன திட்டங் களை செயல்படுத்தினார்?

    இப்போது என்னென்ன திட்டங்கள் செயல்படுத் தப்படுகிறது என்பது மக் களுக்கு நன்றாக தெரியும்.

    நாராயணசாமி அரசிய லில் இருப்பதை காட்டிக் கொள்ளவும், காங்கிரஸ கட்சியிலும் கூட்டணி யிலும் இருக்கின்ற பிரச்சினை களை மறைப்பதற்காகவும், ஆளுங்கட்சியின் மீது பொய்யான குற்றச்சாட்டு களை கூறி கொண்டிருக் கிறார்.

    அவர்கள் போராட்டம் செய்வதால்தான் வேண் டியது கிடைக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க இதுபோன்ற போராட்டங்களை செய்கி ன்றனர்.மாணவர்க ளுக்கு இலவச பஸ், மதிய உணவோடு 2 முட்டை கொடுக்கப்படுகிறது.அனைத்து பள்ளிகளில்லும் ரெயின் கோட் வழங்கப்படுகிறது.வெகு விரைவாவாக 'குடை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நாராயணசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது எத்தனை பேருக்கு சீருடை சைக்கிள் கொடுத்துள்ளார்? என்று சொல்ல சொல்லுங் கள் அனைத்து திட்டத்தை யும் நிறுத்திவிட்டு சென்றவர் அவர்தான்.

    நாராயணசாமி ஆட்சி காலத்தில் எல்லாவற்றை யும் சிறப்பாக செய்திருந் தால் அவர் தேர்தலில் போட்டியிருக்க வேண் டியதுதானே? ஏன் தேர்தலில் நிற்காமல் பயந்து ஓடினார்.? அவருடைய ஆட்சி காலத்தில் எதையும் செய்யாததால் அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிந்துதான் தேர்தலில் போட் டியிடவில்லை.

    எனவே, அரசின் மீது தேவையற்ற பழியை சுமத்த பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.போராட்டம் செய்வது நாராயண்சாமிக்கு கைவந்த கலை. ஆளும் கட் சியாக இருந்தாலும், எதிர்க கட்சியாக இருந்தாலும் போராட்டம் செய்வார். கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகி றோம். பொதுமக்கள், விவ சாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப ஆலையை வெகு விரைவில் இயக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • புதுவை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பஸ்சை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 36 பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா பங்கேற்று ஊக்கத்தொகை ஆணை வழங்கினர். விழாவில் அமைச்ச்ர நமச்சிவாயம் பேசியதாவது:-

    மத்திய அரசின் தூய்மை பள்ளி விருது புதுவையை சேர்ந்த 6 பள்ளிகளுக்கு கிடைத்துள்ளது. இதில் 5 அரசு பள்ளிகள். புதுவை அரசு கல்வித்துறைக்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சீருடை வழங்க டெண்டர் கோரப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. விரைவில் சீருடை வழங்கப்படும். இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

    மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பஸ்சை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 36 பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 39 பஸ்கள் சரி செய்யப்பட்டு விரைவில்இயக்கப்படும். புதுவையில் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க காலி பணியிடம் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×